For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிமையினால் உண்டாகும் பரிதாபங்கள்!!

உடல் பருமனை விட தனிமையாக இருப்பவர்களுக்கு விரைவில் மரணம் நெருங்கும் என ஒரு ஆய்வு கூறிய தகவல்கள் இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

உலகின் மிக கொடுமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுவது தனிமை. தனிமை படுத்தப்படுகிறவர்களின் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இது அதிக கொழுப்பு உள்ளவர்களின் உடல் பாதிக்கப்படுவதின் அளவை விட அதிகமாகும்.

மற்றுமொரு அதிச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உடல் பருமனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை விட தனிமையாய் இருப்பவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. தனியாக இருக்கும் மனிதர்கள் வாதத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் இவர்களுக்கு விரைவான இறப்பும் நேரிடுகிறது.

Loneliness causes for premature death

அமெரிக்காவில் தனிமை படுத்தப்படுவது பற்றியும், அதனால் ஏற்படும் உடல் நல தாக்கத்தை பற்றியும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் நல பாதிப்புகள் உள்ள 4 மில்லியன் நோயாளிகளில் அதிகமானோர் தனிமைபடுத்தப்பட்டதால் இறப்பை தழுவினர் என்று கூறப்படுகிறது. தனிமை படுத்தப்படுபவர்களில் 50% விரைவில் இறக்கின்றனர். ஆனால் உடல் பருமன் கொண்டவர்களில் 30% பேர் சராசரியாக 70 வயதில் இறக்கிறார்கள் .

மனிதர்கள் என்பவர்கள் சமூக விலங்குகள், இவர்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துவது அலுவலகம் தான். ஆகவே சமூக சொந்தங்களை ஏற்று கொள்வதன் மூலம் தனிமையை விட்டொழியுங்கள். இந்த சமூகத்தில் தனிமையை நேசிக்கறவர்கள் அழிவை அடைகிறார்கள்.

சமூகத்துடன் ஒட்டி வாழ்வதே வாழக்கையை மனிதத்தன்மையுடன் வாழ்வதற்கான சான்றாகும். அமெரிக்கா போன்ற அயல் நாகுகளில் 45 வயதிற்கு மேல் 42.6 மில்லியன் மக்கள் தனியாக வாழ்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதில் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பவர்கள்.

இன்றைய நாட்களில் திருமணம் என்ற ஒரு பந்தம் கூட சரிவை நோக்கி செல்கிறது என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். திருமணத்திற்கு பிறகும் , ஒரு குழந்தை பெற்று கொள்வதால் இந்த தனிமை தொடர்கதையாகிறது.

சமுக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இன்று பல வழிகள் உள்ளன. ஆக்கபூர்வமான முறையில் நேர்மறை எண்ணத்தோடு சமூகத்தோடு ஒத்து வாழ்வதால் இந்த தனிமை நீங்கி வாழலாம். நமது பாரம்பராயத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த கதைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் இருந்து மாறி இன்று தனித் தனியாக வாழ்வது சமூக அவலத்தை தான் காட்டுகிறது.

"ஊரோடு ஒத்து வாழ்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இரத்த சொந்தங்கள் இல்லாதவர்கள் கூட சமூகத்தை சொந்தமாக்கி வாழ்ந்து தனிமையை தனிமை படுத்துவோம்.

English summary

Loneliness causes for premature death

Loneliness causes for premature death
Story first published: Thursday, October 5, 2017, 20:15 [IST]
Desktop Bottom Promotion