For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதி முதல் அந்தம் வரை ஜிகா வைரஸ் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

இன்று உலகையே அச்சுறுத்தும் வைரஸ்ஸாக ஜிகா வைரஸ் உருவெடுத்துள்ளது, அது உருவான இடம் மற்றும் அது பரவிய விதத்தைப் பற்றி காணலாம்.

|

இன்று உலகையே அச்சுறுத்தும் வைரஸ்ஸாக ஜிகா வைரஸ் உருவெடுத்துள்ளது. வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நோய்க்கு இது வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உயிர்க்கொல்லியான ஜிகா வைரஸ் உருவாகி வந்த பாதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிகா காடு:

ஜிகா காடு:

1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் யெல்லோ ஃபீவரை ஆராய்ந்த ஆராய்சியாளர்கள் ஜிகா காட்டுப்பகுதியில் இருந்த ஒரு குரங்கில் ஜிகா வைரஸ் இருப்பதாக கண்டுபிடித்தனர்.

கொசு :

கொசு :

அங்கிருந்த கொசுக்கள் மூலமாக ஜிகா காட்டிற்கு மரம்வெட்ட சென்ற ஆஃப்ரிக்கர் ஒருவருக்கு பரவியது.

முதல் மனிதன் :

முதல் மனிதன் :

1952 ஆம் ஆண்டு உகாண்டாவில் இருப்பவர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொற்றுநோய்:

தொற்றுநோய்:

1964 ஆம் ஆண்டு ஜிகா வைரஸை ஆராய்ந்த ஆராய்சியாளர் டேவிட் சிம்சன், நோய் தாக்குதலால் தன் ஆராய்ச்சி முடிவை சமர்ப்பிக்கும் முன்னரே உடல் நலம் பாதிக்கப்பட்டார். அதன் முடிவுகளில் இது மனிதர்களிடையே பரவு

தொற்று நோய் என்று தெரியவந்தது.

மறைந்த ஜிகா:

மறைந்த ஜிகா:

1970களுக்குப் பிறகு பல ஆண்டுகள் ஜிகா வைரஸ் பேச்சு இல்லை. உகாண்டா,தன்சானியாவில் ஆங்காங்கே சிலர் இந்த வைரஸால் உயிரிழந்தனர்.

பயணிகளால் ஆபத்து :

பயணிகளால் ஆபத்து :

கிட்டதட்ட முப்பது வருடங்கள் கழித்து 2000 ஆண்டுகளில் கரோலின் தீவில் உள்ள ஐஸ்லாண்ட் ஆஃப் யாப் என்ற இடத்தில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நோய் பாதித்த பகுதிகளுக்கு கடல் மார்கமாக சுற்றுலா சென்ற

வந்த பயணிகளால் தான் இந்த வைரஸ் வந்திருக்கும் என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பத்தாண்டுகள் :

பத்தாண்டுகள் :

அடுத்த பத்தாண்டுகளில் பசிபிக் ஐஸ்லாண்ட், ஈஸ்டர் ஐஸ்லாண்ட், குக் ஐஸ்லாண்ட் என பல பகுதிகளுக்கும் இந்த வைரஸ் பரவியது. அப்போது தான் வைரஸின் தீவிரத்தை உணர்ந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

ப்ரேசில் :

ப்ரேசில் :

2015 ஆம் ஆண்டு ப்ரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதன் அறிகுறிகளும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும் ஒரே மாதியிருக்கும் என்பதால் டெங்குக்கான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு

வலியுறுத்தப்பட்டது.ஒரே மாதத்தில் இதே அறிகுறிகளுடன் ஏழாயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பின்னரே அனைவருக்கும் ஜிகா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொலும்பியா :

கொலும்பியா :

2015 ஆம் ஆண்டு இறுதிகளில் பிரேசிலைத் தாண்டி கொலும்பியாவில் ஜிகா வைரஸ் பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மெக்ஸிகோ, பராகுவே,வெனின்சுலா என வரிசையாக ஜிகா வைரஸ் பரவியது.

குழந்தை :

குழந்தை :

ஜிகா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, இனி பிறக்கப்போகும் குழந்தைகளையும் தாக்கும். இந்த வைரஸினால் பிறக்கும் குழந்தைகள் மூளை பாதிப்புடன் பிறக்கும். பிரேசிலில் கிருமி பரவியிருப்பதாக அறிவித்த ஒரே வருடத்தில்

மூளை பாதிப்புடன் 3000 குழந்தைகள் பிறந்தன. உயிர்க்கொல்லி நோயான ஜிகா வைரஸ் குறித்த ஆராய்சிகள், தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து

நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்திலும் ஜிகா வைரஸ் தாக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Of Zika Virus

Histroy and fast spread of zika virus
Desktop Bottom Promotion