Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
அதிகமான சூரிய ஒளியால் உங்கள் கண்களில் ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா
உங்கள் வாழ்நாளில் ஏற்படும் அதிகமான சூரிய ஒளி தாக்குதலால் கண்களில் உள்ள கருவிழிப்படலத்தில் கருப்பு புள்ளிகள் வரும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன
அதிகமான சூரிய ஒளியால் உங்கள் கண்களில் உள்ள கருவிழிப்படலத்தில் கருப்பு புள்ளிகள் வரும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த கருவிழி படல புள்ளிகள் கண்புரை அல்லது மேக்குலார் டிஜெனரேஷன் பாதிப்புகள் வர வழி வகை செய்கின்றன.
இந்த கருவிழி படல புள்ளிகள் பற்றிய ஆராய்ச்சியானது மேலும் நீண்டு இவை வயதாகுதல், வாழும் காலத்தில் ஏற்பட்ட சூரிய ஒளி பாதிப்பு, தீவிர சூரிய ஒளி பாதிப்புகள் போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரிய ஒளியால் எந்த அளவுக்கு கண் பாதிப்படைகிறது என்பதை சரியாக கணிக்க முடிவதில்லை. ஆனால் கரு விழி படல புள்ளிகள் நமக்கு அதன் தீவிரத்தை காட்டுகிறது என்று கிருஸ்டோப் ஸ்வாப் ஆப்தாலிஸ்ட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ஆஃப் க்ராஷ் இன் ஆஸ்திரேலியாவிலிருந்து கூறுகிறார்.
அதே நேரத்தில் கருப்பு வண்ணம் கருவிழி படலம் கொண்ட மக்கள் இயற்கையாகவே சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கத்தை தடுக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதால் அவர்கள் இதனால் பாதிப்படைவதில்லை. இதே நேரத்தில் நீலம், பிரவுன், க்ரீன் கருவிழிகள் எளிதாக பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்வஸ்டிகேட்டிவ் ஆப்தாலமாலாஜி & விஷூவல் சைன்ஸ் என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ட்ரியா பகுதியில் இருக்கும் 600 நீச்சல் வீரர்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவர்களது வாழ்நாள் சூரிய ஒளி பாதிப்பு மற்றும் சூரிய ஒளி பாதுகாப்பு பழக்க வழக்கங்கள், கருவிழிப்படல ஆராய்ச்சிகள் போன்றவற்றை அவர்களிடம் மேற்கொண்டனர்.
மேலும் இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் கண்களில் நான்காவது பாகத்தின் வெளிப்புறத்தில் நிறைய கரும் புள்ளிகள் கருவிழி படலத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் பாதிப்பால் ஏற்படுகின்றன. இந்த பகுதி மூக்கிலிருந்து தள்ளி அமைந்துள்ள பகுதியாகும்.
ஏனெனில் மேல் மற்றும் உட்பகுதி கண் பாகத்தை கண் இமைகளும் மூக்கும் சூரிய ஒளி கதிர்களிலிருந்து காத்துக் கொள்கின்றன. ஆனால் கீழ் பாகம் அதாவது நான்காவது பாக பகுதி தான் சூரிய ஒளிக்கதிர்களால் அதிகமாக தாக்கப்பட்டு கருவிழி புள்ளிகளுக்கு ஆளாகின்றன என்று ஸ்வாப் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

