For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை, கேரளாவில் வேகமாக பரவி வரும் தொற்று நோய்!!

ஸ்வீன் ஃப்ளூவை எப்படி தடுக்கலாம், ஸ்வீன் ஃப்ளூக்கான வீட்டு வைத்தியங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளது

By Suganthi Ramachandran
|

பருவ மழைக்காலம் வந்துவிட்டாலே மழையுடன் சேர்ந்து நோய்களும் பரவ ஆரம்பித்து விடுகின்றன. இந்த மாதம் ஜீலையின் 15 நாட்களில் மும்பையில் 7 பேர்கள் H1N1 மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் தொற்றால் பலியாகியுள்ளனர்.

இது மட்டும் அல்ல, இதே சமயத்தில் நிறைய பேர்கள் டெங்கு, காலரா மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்றவற்றாலும் ஜீன் மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக இதுவரை மான்ஹார்டை சேர்ந்த 4 வயது குழந்தையும் மற்றும் 5 பேர்களும் H1N1 தொற்றால் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

H1N1 & Leptospirosis Claims 7 Lives In Mumbai In July Till Date

மகாராஷ்டிராவை பொருத்த வரை மட்டும் இந்த வருடத்தில் H1N1 தொற்றால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதுவரை கிடைத்த தகவல்படி இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன், நிமோனியா மற்றும் உறுப்புகள் செயலிழப்பு போன்றவற்றை கொண்டவர்களை முக்கியமாக தாக்கியுள்ளது.

இந்த மாதிரி தீவிர பிரச்சினைகளை கொண்டவர்களை தொற்றுக்கள் தாக்குவதால் அவர்களை குணப்படுத்துவது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்று மருத்துவ எக்ஸ்பட்ஸ் கூறுகின்றனர்.

அதிக அளவிலான H1N1 நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் நேர்ந்த மாநிலங்கள் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் குஜராத் ஆகியவற்றில் ஒட்டு மொத்தமாக 70% இறப்பு பதிவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary

H1N1 & Leptospirosis Claims 7 Lives In Mumbai In July Till Date

H1N1 & Leptospirosis Claims 7 Lives In Mumbai In July Till Date
Story first published: Saturday, July 22, 2017, 15:16 [IST]
Desktop Bottom Promotion