For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகப் பிரச்சனை என்றால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வது தவறானது என்று தெரியுமா?

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்

|

நம்முடைய உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். அவற்றின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மரணம் கூட ஏற்படலாம். இவை விஷத்தன்மை கொண்டதும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதுமான திரவங்களை அகற்றிடும். அதே போல, நம் உடலில் தாது உப்புக்கள், மற்று பிற சத்துக்களின் அளவை பாதுகாத்திடும்.

சிறுநீரகம் குறித்த சுவாரஸ்யமான சில தகவல்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர முடியாது :

உணர முடியாது :

சிறுநீரகங்கள் அடிவயிற்றின் ஆழத்தில் அமைத்திருப்பதால் சாதரணமாக நாம் அதனை உணர முடியாது. பெரியவர்களுக்கு ஒரு சிறுநீரகம் சுமார் 10 செ.மீ நீளமும் 6 செ.மீ., அகலமும் கொண்டதாக இருக்கும்.

சிறுநீர் :

சிறுநீர் :

சிறுநீரகங்களில் உருவான சிறுநீர் யுரீட்டர் எனும் சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்பைக்குச் செல்கிறது. வயதானவர்களுக்கு 400 முதல் 500 மில்லி லிட்டர் வரை சிறுநீரை சேமித்து வைக்கும்.

ஏன் தேவை :

ஏன் தேவை :

ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை வெவ்வேறு அளவுகளில் எடுத்துக் கொள்கிறோம். நாம் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு, உப்புக்களின் அளவு இன்ன பிற சத்துக்களின் அளவு வேறுபட்டுக் கொண்டேயிருக்கும்.

உடலில் உள்ள சத்துக்களை சுத்திகரித்து விஷமுள்ள திரவங்களை அகற்றிடுகிறது.அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

சிறுநீரகங்கள் பல ஹார்மோன்களை உருவாக்குகின்றன. அவை உடலில் இருக்கும் நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இந்த செயல்பாடு, உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவையும் உப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

அதோடு உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏதேனும் மாற்றம் உண்டானால் ரத்த அழுத்தம் கூடிவிடும்.

சிவப்பு அணுக்கள் :

சிவப்பு அணுக்கள் :

சிறுநீரகங்களில் எரித்ரோபோய்டின் என்னும் ஹார்மோன் உற்பத்தியாகும். அது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது, சிறுநீரகம் பழுதடையும் போது சிவப்பு அணுக்களின் உற்பத்தி பாதிப்படைகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்திடும்.

எலும்புகள் :

எலும்புகள் :

சிறுநீரகங்கள், விட்டமின் டியை செயலாற்றும் விதத்தில் மாற்றித் தருகிறது. இதுவே உணவில் இருக்கும் கால்ஷியம் சத்தை கிரகித்துக் கொள்ள உதவிடுகிறது.

விட்டமின் டி குறைந்து சிறுநீரகங்கள் பழுதடைந்தால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி பாதிப்படையும்.

ரத்த சுத்திகரிப்பு :

ரத்த சுத்திகரிப்பு :

ஒவ்வொரு நிமிடமும் 1200 மில்லி லிட்டர் அளவு ரத்தம் இரு சிறுநீரகங்களுக்குள் வருகிறது. இது இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 சதவீதமாகும். ஒரு நாளைக்கு 1700 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்தால் :

சிறுநீரகம் செயலிழந்தால் :

ஒரே ஒரு சிறுநீரகம் செயலிழப்பதால் நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படுவதில்லை. இம்மாதிரியான சமயங்களில், இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவும், சீரம் கிரியேட்டினைன் அளவும் இருக்கவேண்டிய அளவே இருக்கின்றன.

ஆனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டால், கழிவுப் பொருட்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுகின்றன. இரத்தத்தில் சேரும் யூரியாவின் அளவு கூடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நிறைய நீர் :

நிறைய நீர் :

சிறுநீரகக் கோளாறு என்று சொன்னாலே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது தவறானது, வீக்கம் ஏற்பட்ட பிறகு வெளி வரும் சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். இது பல சிறுநீரகக் கோளாறுகளின் ஒரு அம்சம். இம்மாதிரியான நோயாளிகளுக்கு குடிக்கும் நீரை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

சிறுநீரக நோய்கள் இருப்பவர்களுக்கு உடலுக்குள் இருக்கும் நீரை ஓரளவு சமநிலைப்படுத்திவைப்பது அவசியம் இருந்தாலும், கற்கள் இருந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று உள்ளவர்கள், அத்துடன் சிறுநீரகங்கள் பழுதடையாதவர்கள் நீரை நிரம்பவே குடிக்க வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு என்று சொன்னாலே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது தவறானது, வீக்கம் ஏற்பட்ட பிறகு வெளி வரும் சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். இது பல சிறுநீரகக் கோளாறுகளின் ஒரு அம்சம். இம்மாதிரியான நோயாளிகளுக்கு குடிக்கும் நீரை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

சிறுநீரக நோய்கள் இருப்பவர்களுக்கு உடலுக்குள் இருக்கும் நீரை ஓரளவு சமநிலைப்படுத்திவைப்பது அவசியம் இருந்தாலும், கற்கள் இருந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று உள்ளவர்கள், அத்துடன் சிறுநீரகங்கள் பழுதடையாதவர்கள் நீரை நிரம்பவே குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Kidney

Facts About Kidney
Story first published: Saturday, September 2, 2017, 16:58 [IST]
Desktop Bottom Promotion