For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதப்போய் தினமும் ஒரு டம்ளர் குடிச்சா, புற்றுநோய் வராம வேற என்ன வரும்!

தினமும் வெறும் ஒரு கிளாஸ் ஒயின், பீர் குடித்தாலும், மார்பக புற்றுநோய் வருமாம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

|

ஆல்கஹால் உட்கொள்வதால் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், சிலர் தினமும் கொஞ்சமாக அல்லது அளவாக குடித்தால் எதுவும் ஆகாது. அளவிற்கு மீறினால் தான் நஞ்சு என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், தினமும் ஒரு கிளாஸ் அளவு என பீர் மற்றும் ஒயின் குடித்தால் கூட மார்பக புற்றுநோய் ஏற்படும் அளவு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எ.ஐ.சி.ஆர்.!

எ.ஐ.சி.ஆர்.!

அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும், உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி நிறுவனமும் நடத்திய ஆய்வில் வெறும் ஒரு டம்ளர் பீர் அல்லது ஒயின் தினமும் பருகினாலும் மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் பரிந்துரை!

ஆய்வாளர்கள் பரிந்துரை!

மேலும், ஆய்வாளர்கள், கடினமாக பயிற்சி செய்வது, ரன்னிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவும் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.

அறிவியல் ஆய்வு!

அறிவியல் ஆய்வு!

ஒரு ஆய்வின் போது, உலகளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறுப்பட்ட டயட், உடல் எடை, பயிற்சி போன்றவை எப்படி மார்பக புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சி செய்யப்பட்டது. இது 2010ல் துவங்கியது.

சர்வே!

சர்வே!

இந்த ஆய்வில் 12 மில்லியன் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் 2.6 லட்சம் பேர் மார்பக புற்றுநோய் தாக்கம் கொண்டிருந்தவர்கள்.

இந்த ஆய்வில் தான் தினமும் ஒரு டம்ளர் பீர், ஒயின் பருகினாலும் மார்பக புற்றுநோய் தாக்கம் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பன்மடங்கு!

பன்மடங்கு!

அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஆல்கஹால் இரத்த நாளத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்க செய்தல், செக்ஸ் ஹார்மோன்களில் தாக்கம் என பல வழிகளில் புற்றுநோய் அதிகரிக்க வழிவகுக்கிறது என கூறியுள்ளது.

மந்தம்!

மந்தம்!

யாரெல்லாம் மிக குறைவான வேலை செய்கிறார்களோ. அல்லது ஆக்டிவாக இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களிடம் எல்லாம் மார்பக புற்றுநோய் அதிகரிக்கும் வாய்ப்பு பத்து சதவீதம் அதிகமாக தென்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் எடை!

உடல் எடை!

சரியான உடல் எடை பராமரித்தல் மார்பக புற்றுநோய் உண்டாவதை தடுக்குமாம். மேலும், ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்த்தே ஆகவேண்டும். வாரத்திற்கு ஓரிரு முறை என்றால் ஓகே. ஆனால், தினமும் குடிப்பது தவறு. அது ஒரு டம்ளராக இருந்தாலும் கூட என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinking Just A Glass of Wine or Beer Daily Can Increase the Risk of Breast Cancer!

Drinking Just A Glass of Wine or Beer Daily Can Increase the Risk of Breast Cancer!
Story first published: Tuesday, May 23, 2017, 17:51 [IST]
Desktop Bottom Promotion