For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதம் அடிக்கடி சில்லுன்னு ஆகுதா? இந்த காரணங்கள் இருக்கலாம்!!

எப்போதும் உங்கள் பாதம் அதிக குளிருடன் காணப்படுகிறதா? உங்களுக்கு இந்த நோயெல்லாம் இருக்கலாம்

|

உடல் நலத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. வெளியில் தெரியும் சின்ன சின்ன அறிகுறிகளை எல்லாம் கவனித்து உடனேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிலவற்றை தானாய் சரியாகும் என்று விடுவதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

இதெல்லாம் சாதரணமானது என்று நினைத்திருப்போம் அல்லது வேறொரு காரணத்தை நாமாக கற்பனை செய்திருப்போம். பொதுவாக உடலில் மற்ற உறுப்புகளை விட சிலருக்கு கால் அதிகமாக குளிர்ந்திடும். சில்லிட்டுப் போகும். கால் குளிர்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இது பல நோய்களின் அறிகுறியாக இருக்கிறது.

காலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல அது எந்த நோய்களுக்கான அறிகுறி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ராய்னாட் நோய் :

ராய்னாட் நோய் என்பது பெரும்பாலும் கை,கால் விரல்களில் ஏற்படுவது. குளிரை நம்மால் தாங்க முடியாத, அல்லது உணர முடியாது. இது அதிக குளிர் இருந்தால் ஏற்படும் அல்லது மன அழுத்தம் காரணமாகவும் இப்படி ஏற்படும்.

இப்படியான சூழ்நிலையில் ரத்தஓட்டம் மெல்லிய நரம்புகள் வழியே பாயாது. அதோடு ரத்த ஓட்டமும் சில நேரங்களில் தடை படுவதால் உங்களுக்கு கால் மரத்துப்போன உணர்வு ஏற்படுகிறது.

பெண்களுக்கு அதிகம் :

ராய்னாட் நோய் என்பது பெண்களுக்கு மிக அதிகமாக தாக்குகிறது. இதைத் தவிர குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு இப்பிரச்சனை உண்டாகும்.

உடலுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாத போது இப்படியான பிரச்சனைகள் உண்டாகும். சருமத்தின் நிறம் மாறுவது,காலில் புள்ளிப்புள்ளியாக தோன்றுவது,கால் மரத்துப் போவது இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. இது தீவிரமடைந்தால் காலில் வலி, எரிச்சல் உண்டாகும்.

Do you know why your feet are cold?

தவிர்க்க :

ஆரம்ப காலங்களில் சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். எப்போதும் காலை வெது வெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இது நீடித்தால் மருத்துவரிடம் காண்பியுங்கள். ரத்தஓட்டத்தை அதிகரிக்க மாத்திரை மருந்துகள் கொடுக்கப்படும். பிற நோய்களுக்கு மாத்திரைகள் வருடக்கணக்கில் எடுப்பவர்களுக்கும் இப்படியான அறிகுறிகள் தெரியும் என்பதால் இதில் கவனம் தேவை.

ஹைப்போ தைராய்டு :

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் அதன் அறிகுறியாக கூட இது இருக்கலாம். தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு அதிக குளிரை தாங்க முடியாது.

இது சில நிமிடங்கள் தொடர்ந்து பின்னர் தானாக சரியாகிற வகையில் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பியுங்கள். தைராய்டு அளவை பரிசோதனை செய்து பாருங்கள்.

இதோடு, உடல் எடை அதிகரிப்பது,ஞாபக சக்தி குறைவு,பசியின்மை,கால் வலி,சருமம் வறண்டு போகுதல் தைராய்டின் அறிகுறிகளாகும்.

அனீமியா :

உங்கள் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையென்றால் கூட இப்படியான அறிகுறிகள் தென்படும். உள்ளங்கை மற்றும் உள்ள பாதம் அதிகமாக குளிர்ந்து போகும்.

எப்போதும் சோர்வாக இருப்பது, பசி இருந்து கொண்டேயிருப்பது, தலைவலி,சரும வறட்சி, அதிக தூக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள். லேசான குளிருக்கே உங்கள் கால்கள் சில்லிட்டுப் போனால் உங்கள் உடலில் ரத்தம் குறைவாக இருக்கிறதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் உணவில் இரும்புச் சத்து,ஃபோலிக் ஆமிலம்,விட்டமின் சி,பி 12 சேர்த்துக் கொள்வது நல்ல பயன் தரும்.

பெரிப்பெரல் ஆர்டிரியல் நோய் :

இதய வால்வுகளில் ஏதேனும் அடைப்பு ஏற்ப்பட்டாலோ அல்லது அதில் ரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றாலோ கூட கால்கள் அதிகமாக குளிர்ந்து போகும்.

உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்திருந்தால் கூட இப்படியான பிரச்சனைகள் ஏற்படும். கொழுப்பு இதய வால்வுகளை அடைத்திருக்கும் தன்மை பொறுத்து உங்களது அறிகுறிகள் வேறுபடும். அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுப்பதை தவிர்ப்பது அவசியம்.

நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சை முறைகளை உடனேயே ஆரம்பிக்க வேண்டும்.

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் :

இந்நோய் இருப்பவர்களுக்கு உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகமாக வேர்க்கும். இது நரம்புகளில் ஏற்படும் பிரச்சனையால் ஏற்படுகிறது. இவர்கள் குளிர்ச்சி தருகிற காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. கை கால்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

டயாப்பட்டிக் நரம்பு :

ரத்தத்தில் அதிக சர்க்கரையளவு சேர்ந்தால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை டயாப்பட்டிக் பெரிப்பரல் நியூரோபதி என்றும் பெயருண்டு.

விரல் நுனியில் எரிச்சல், கால்களில் வலி போன்றவை ஏற்படும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் இரவு நேரங்களில் அதிகம் தெரியுமாம்.

அதிக நேரம் நீரில் கால் நனைவதை தவிர்க்க வேண்டும். அதிக சூடான நீரோ அல்லது அதிக குளிர்ந்த நீரோ காலில் படும்படி இருக்க வேண்டாம். கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்குமாறு சில சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

நரம்புக் கோளாறுகள் :

ஏதேனும் நரம்பு பாதிப்பு ஏற்ப்பட்டால் கூட இப்படியான அறிகுறிகள் தென்படும். காலில் அதீத வலி, கால் மரத்துப்போவது அடிக்கடித் தோன்றிடும். உடலில் விட்டமின் குறைபாடு, கிட்னி,கல்லிரல் நோய்கள் இருந்தாலும் இப்படியான அறிகுறிகள் தெரியும். உடலில் அதிகளவு நச்சுக்கள் இருந்தால் கூட இப்படித் தோன்றிடும்.

சில நேரங்களில் மரபு ரீதியாகவும் ஏற்படுவதுண்டு.

புகைப்பழக்கம் :

இன்றைக்கு பலருக்குமே புகைப்பழக்கம் இருக்கிறது. பிறர் புகைப்பிடிப்பதை பார்த்து ஈர்த்து புகைப்பிடிப்பவர்கள் அனேகம் பேர். பின்னர் நாளடைவில் அது ஓர் பழக்கமாகிட அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பார்கள்.

இது ரத்த ஓட்டத்தை பாதிப்பதால் இவர்களுக்கும் அதிகமாக பாதம் குளிர்வது தொடரும். சில நேரங்களில் ரத்தம் உறைந்து ப்ளாட் க்ளாட் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு. இதற்கான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் திசுக்கள் பாதிப்படைந்து மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

English summary

Do you know why your feet are cold?

Do you know why your feet are cold?
Story first published: Friday, October 13, 2017, 18:10 [IST]
Desktop Bottom Promotion