தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலத்தில் விலைக்குறைவில் கிடைக்கும் சீசன் பழம் தான் தர்பூசணி. நம்மில் பலரும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த சின்னஞ்சிறிய தர்பூசணி விதையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது எனத் தெரியுமா?

Boil Watermelon Seeds & Drink The Water; The Result Will Shock You!

ஆம், தர்பூசணி விதைகள் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். அதற்கு தர்பூசணி விதைகளை வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்கவோ செய்வார்கள். இக்கட்டுரையில் தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

ஒரு கையளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் வடிகட்டிப் பருக வேண்டும். இந்த பானத்தை 3 நாட்கள் தொடர்ந்து குடித்து ஒரு நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால், இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வாருங்கள். இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தர்பூசணியில் உள்ள மக்னீசியம் தான்.

வலிமையான தலைமுடி

வலிமையான தலைமுடி

அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதை உதவும். அதுவும் தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி பாதிக்கப்படுவது, தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். ஆகவே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க விரும்பினால், தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடியுங்கள்.

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம்

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம்

தர்பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனால், தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வாருங்கள்.

இரத்த அழுத்தம் சீராகும்

இரத்த அழுத்தம் சீராகும்

ஆம், தர்பூசணி விதைகள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். தர்பூசணி விதைகளில் உள்ள அர்ஜினைன் என்னும் உட்பொருள் தான் இதற்கு முக்கிய காரணம்.

வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள்

வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள்

மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் அவசியம். இந்த அமினோ அமிலங்கள் தர்பூசணி விதைகளில் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த அமினோ அமிலங்கள் எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்தும்.

நரம்பு மண்டல ஆரோக்கியம்

நரம்பு மண்டல ஆரோக்கியம்

தர்பூசணி விதைகளில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது என்று தெரியுமா? ஆம், இந்த விதைகளில் நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் பி6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. முக்கியமாக இதில் உள்ள நியாசின் நரம்பு மண்டல இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boil Watermelon Seeds & Drink The Water; The Result Will Shock You!

Listed in this article are a few of the major health benefits of drinking boiled watermelon seeds. Have a look.
Story first published: Wednesday, May 3, 2017, 10:40 [IST]
Subscribe Newsletter