Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
உடல் பருமன் அதிகமானோர் உள்ள டாப் 15 நாடுகள்: அபாயமும், எச்சரிக்கையும்!
சமீபத்தில் உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் உடல்பருமன் அதிகம் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் இதில் டாப் 15 நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில், என்ன வினோதம் என்றால் பெரும்பாலும் இந்த பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் ஃபாஸ்ட்புட் பழக்கம் அதிகமாக இருந்தது.
அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நீரிழிவு மற்றும் இதய நோய்களும் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தான் அதிகம் என தெரியவந்துள்ளது....

ஹங்கேரி
உடல்பருமன் : 30%
உடல் உழைப்பு மிகவும் குறைந்து வரும் வளரும் நாடுகளில் ஒன்று. ஃபாஸ்ட் புட் வாழ்க்கை மாற்றம் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. மிக வேகமாக கொழுப்பில் வளர்ந்து வந்து பட்டியலில் 15 இடத்தை பிடித்திருக்கிறது ஹங்கேரி.

வெனிசுலா
உடல் பருமன் : 30.8%
40% மிக வேகமாக தொட்டுவிட முயற்சி செய்துக் கொண்டிருக்கும் நாடு. இங்கு விலை மலிவாக கிடைக்கும் சர்க்கரை சோடா பானங்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளும் தான் இதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.

லிபியா
உடல் பருமன்: 30.8%
லிபியாவும் வெனிசுலாவும் ஏறத்தாழ ஒரே சதவீதத்தில் தான் இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் இங்கு பெண்கள் அதிகமான உடல் பருமனுடன் இருக்கிறார்கள்.

சிரியா
பெண்கள் அதிகமாக உடல் பருமனுடன் இருக்கும் மற்றுமொரு நாடு சிரியா. 46-65 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் இங்கு 83% உடல்பருமனுடன் இருக்கிறார்கள்.

அமெரிக்கா
சென்ற வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அமெரிக்காவில் உடல் பருமன் குறைந்துள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், ஆண், பெண் இருபாலினரிடமும் உடல் பருமன் என்பது இங்கு மிகவும் பொதுவானது.

பஹ்ரைன்
உடல்பருமன் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் மற்றுமொரு அரபு நாடு பஹ்ரைன். இங்கு ஆண்கள் மத்தியில் 49%, பெண்கள் மத்தியில் 29% -ம் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.

மெக்ஸிகோ
கடந்த பத்து வருடங்களில் மெக்ஸிகோ மக்கள் மத்தியில் மாற்றம் காணப்படும் உணவுப் பழக்கம் தான் அதிகரிக்கும் உடல்பருமன் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது.

கத்தார்
எண்ணெய் வளம் அதிகம் கொண்ட பணக்கார நாடு. இங்கும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தான் உடல் பருமனாக உள்ளவர்களது சதவீதம் 33% ஆக இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா
உடல் பருமன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் இதய நோய்கள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் 40% பேர் இதய நோய்களின் காரணமாக தான் உயிரிழக்கின்றனர். இங்கு உடல் பருமனுடன் இருப்பவர்கள் விகிதம் 33.5% ஆக இருக்கிறது.

அரபு நாடுகள்
பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் அரபு நாடுகளில் ஃபாஸ்ட்புட் அதிகரித்து வருகிறது. இதனால் தான் உடல் பருமன் அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. இங்கு இதன் விகிதம் 33.7%.

ஜோர்டான்
ஆண்களை விட இரு மடங்கு உடல்பருமன் பெண்களிடம் இங்கு காணப்படுகிறது. இளம் பெண்கள் 82% பேர் வேலையில்லாமல் இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. இங்கு உடல் பருமன் விகிதம் 34.5%.

எகிப்து
எகிப்து இளைஞர்கள் மத்தியில் சோடா பானம் பருகும் வாடிக்கை அதிகரித்து வருகிறது. ஓர் நாளுக்கு மூன்று முறை வரை குடிக்கும் வழக்கம் வைத்துள்ளனர். இதனால், இங்கு நீரிழிவு நோயும் சேர்ந்து வளர்ந்து வருகிறது. இங்கு உடல் பருமன் விகிதம் 34.6%.

பெலிஸ்
உணவருந்துவதை பிடித்த விஷயமாக கொண்டாடுவோர் இங்கு அதிகம். உணவுக்கு பெயர்போன இந்த நாட்டில் உடல்பருமனும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது இந்த பட்டியலில் 34.6% துடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

சவூதி அரேபியா
உடல் பருமன் காரணமாக இங்கு அதிகரித்த நீரிழிவு நோயின் அளவு விகிதம் 30% ஆகும். பெண்கள் தான் இங்கு அதிகம் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள்.

குவைத்
ஃபாஸ்ட்புட் உணவுகள் இங்கு அதிகம். இங்கு பெண்களின் உடல்பருமன் விகிதம் 80%, ஆண்கள் 20.5%. மொத்தமாக 42.8% துடன் முதலிடத்தில் இருக்கிறது குவைத்.



Click it and Unblock the Notifications