For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெனோபாஸின் போது உண்டாகும் 5 ஆபத்தான மாற்றங்கள் !!

|

பொதுவாக பெண்களை விட ஆண்களுக்குதான் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் அதிகம் தாக்கும். காரணம் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது இதய மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை வர விடாமல் தடுக்கும். ஆனால் இப்போது வேறுவிதமாக இருக்கிறது.

மெனோபாஸ் தோராயமாக 45- 55 வயது வரை உள்ள பெண்களுக்கு வரும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பு நின்று போய் மாதவிடாய் முழுவதுமாக நின்று போய்விடும்.

Risk of heart diseases spikes before menopause

இதன் அறிகுறிகளாக, ஹாட் ஃப்ளாஷ் எனப்படும், பதட்டம், தூக்கமின்மை, இரவில் அதிகம் வியர்த்தல், நடுக்கம், ஆகியவை ஏற்படும்.

பொதுவாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்கள் மற்றும் பல புற்று நோய்கள் வராமல் கவசமாக காக்கின்றன என முந்தைய ஆய்வுகள் கூறின. ஆனால் இப்போது மெனோபாஸிற்கு முன்னதாகவே இதய நோய்கள் வருகிறது என ஆய்வுகள் நிருபிக்கின்றன. இதற்கான காரணங்கள் விளங்கவில்லை.

வெர்ஜீனியா ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பல்கலைக்கழகம் இந்த ஆய்வை செய்தது. இதில் ஐம்பது வயதிற்கு ,மெனோபாஸிற்கு முன்னதாக இதய நோய்கள், சர்க்கரை வியாதிகள் அதிகரித்துக் கொண்டு வருவதாக , ஆராய்ச்சியின் தலைமை பேராசிரியர் மார்க் டெபோர் என்பவர் கூறியிருக்கிறார்.

இதற்கு சரியான காரணம் புரிபடவில்லையென்றாலும் இதய நோய்கள் பெண்களை என் தாக்குகிறது என அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதால், உடல் பருமன், ரத்த அழுத்தம், இதய நோய் என நோய்கள் தாக்குகின்றன என்று டெபோர் கூறுகிறார்.

இந்த ஆய்விற்கு மெனோபாஸ் அடையும் நேரத்திலிருக்கும் அமெரிக்க மற்றும் ஆஃப்ரிக்க பெண்கள் சுமார் 170 பேரை ஈடுபடுத்தி சுமார் 10 வருடங்களாக ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் 5 முக்கிய வளர்சிதை மாற்றங்களை கண்டார்கள். 1. உடல் பருமன் 2. கொழுப்பு ரத்தத்தில் உயர்வு,3. இடுப்பின் சுற்றளவு அதிகரித்தல் 4. HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் குறைவு 5. ரத்தக் கொதிப்பு அதிகரித்தல்.

இதில் ஹார்மோன் அளவு சரியாக கணக்கிடப்படவில்லை. மெனோபாஸ் அடைந்து இரண்டு வருடங்களான பெண்களையும் மெனோபாஸ் அடைந்து 1 வருடமான பெண்களையும் கணக்கிலெடுத்தார்கள். இதனால் ஓரிரு மாற்றங்களில் வேறுபாடுகள் தெரிந்தாலும், மேலே சொன்ன பிரச்சனைகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் மாற்று ஹார்மோன் சிகிச்சை எவ்வாறு பலனளிக்குமென தெரியாததால், அதனை அவர்கள் பரிச்சீலிக்கவில்லை என தெரிகிறது. ஹார்மோன் சிகிச்சை அளித்தால் உடல் இயல்பு நிலைக்கு திரும்புமா என்பதை பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.

English summary

Risk of heart diseases spikes before menopause

Risk of heart diseases spikes before menopause
Story first published: Friday, August 5, 2016, 18:25 [IST]
Desktop Bottom Promotion