For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கால் வலி தாங்க முடியலையா? அப்ப எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...

நம் வீட்டு சமையலறையில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு எளிய வழியில் முழங்கால் மூட்டு வலிகளைச் சரிசெய்யலாம் என்பது தெரியுமா? இங்கு அதுக்குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

|

தற்போது முழங்கால் வலி என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளுள் ஒன்றாகும். முழங்கால் மூட்டு வலியானது தொடர்ச்சியான தேய்மானம் காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். பொதுவாக வயதானவர்களுக்கு தான் இம்மாதிரியான நிலை ஏற்படும். ஆனால் இக்காலத்தில் இளம் வயதினரும் முழங்கால் வலியால் கஷ்டப்படுகின்றனர்.

How To Use Lemon To Get Rid Of Knee Pain At Home

அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர். முழங்கால் வலியைப் போக்க மருத்துவரிடம் சென்றால், அவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். தினமும் மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். ஒரு நாள் அந்த மாத்திரையை போட மறந்தால், வலி மீண்டும் ஆரம்பமாகும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு எளிய வழியில் முழங்கால் மூட்டு வலிகளைச் சரிசெய்யலாம் என்பது தெரியுமா? இங்கு அதுக்குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை பயன்கள்

எலுமிச்சை பயன்கள்

எலுமிச்சையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான, வைட்டமின் ஏ, சி, பி1, பி6, பயோ ப்ளேவோனாய்டுகள், போலிக் அமிலம், பெக்டின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன.

கால்சியம் மற்றும் வைட்டமின் சி

கால்சியம் மற்றும் வைட்டமின் சி

வைட்டமின் சி மற்றும் கால்சியம் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தடுக்கும் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்யும். இச்சத்துக்கள் எலுமிச்சையில் ஏராளமாக உள்ளது.

மேலும் எலுமிச்சை மூட்டுக்கள் மற்றும நரம்புகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதன் தன்மை இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் பண்பை அதிகரிக்கும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது எலும்பு மஜ்ஜை திசுக்கள் வழியாக இரத்த நாளங்களில் ஊடுருவி, இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 1-2

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* எலுமிச்சையை துண்டுகளாக்கி, காட்டன் துணியில் வைத்து கட்டிக கொள்ள வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நல்லெண்ணெயில் எலுமிச்சை கட்டிய துணியை நனைத்து, வலியுள்ள இடத்தில் 5-10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

* இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், வலி விரைவில் குணமாகும்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

- உடல் எடையைக் கூட தாங்க முடியாத அளவில் கடுமையான வலியைச் சந்தித்தால்;

- கால்களை மடக்கவோ அல்லது நீட்டவோ முடியாமல் இருப்பது;

- முழங்கால் வலியுடன் காய்ச்சல், முழங்காலைச் சுற்றி சூடாகவோ அல்லது சிவப்புடனோ இருப்பது;

- வலி பல வாரங்களாக நீடித்து இருப்பது

மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளைச் சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Lemon To Get Rid Of Knee Pain At Home

Want to know how to use lemon to get rid of knee pain at home? Read on to know more...
Story first published: Monday, November 7, 2016, 16:44 [IST]
Desktop Bottom Promotion