For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இசையைக் கேட்டால் என்ன நடக்கும்?

|

இசையால் முடியாதது எதுவுமில்லை. மனதினை தீண்டும் மெல்லிய பாடல்கள் மயிலிறகால் வருடுவது போல. அட்டாகசமான தாளங்களுடன் கூடிய பாடல்கள் நம் ஆர்ப்பரிக்கும் மனதை ஆள்வது போல். சோகபாடல், எழுச்சியை தூண்டும் பாடல் என பாடல்களால் நம எத்தகைய மனதையும் மாற்றும் வலிமை இருக்கிறது.

How to bring Blood pressure in control

அப்படியான பாடல்கள் மனதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் தக்க வைக்கிறது. ஆமாம். ரத்தக் கொதிப்பு ஆபத்தான நோய். கட்டுக்கடங்காமல் இருக்கும் ரத்த நாளங்களையே சாந்தப்படுத்தி, கட்டுக்குள் வைக்கும் சக்தி பழமையான பாரம்பரிய இசைக்கு உண்டு

அதுவும் பழமையான , இசையின் மேதைகளான மோஸார்ட் மற்றும் ஜோஹன் ஸ்ட்ராஸ் ஆகியோரின் இசை , ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது என்று ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளனர். இந்த இரு மேதைகளுமே ஆஸ்திரியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

இந்த ஆய்வை இரு குழுவினரைக் கொண்டு பரிசோதித்தனர். ஒரு குழுவில், சுமார் 60 உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை 25 நிமிடம் மொஸார்ட் அல்லது ஜோஹன் ஸ்ட்ராஸ் இசையை கேட்க வைத்தனர்.

மற்றொரு குழுவினை எதுவும் செய்யாமல் அமைதியாக அமரவைத்தனர். இந்த ஆய்வில், இந்த இரு இசையை கேட்ட உயர் ரத்த நோயாளிகளுக்கு அதிக ரத்த அழுத்தம் மற்றும் வேகமான இதயதுடிப்பும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததை பரிசோதித்து, தெளிவுபடுத்தினர்.

பாரம்பரிய இசைக்கும், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு உண்டு. அவை மனித மனங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜெர்மனியில் உள்ள ரஹ்ர் பல்கலைகழகத்தின் ஆய்வாளரான ஹான்ஸ்-ஜோசிம் என்பவர் கூறியிருக்கிறார்.

அதிலும் மோஸார்ட்டின் இசை மிக அற்புதமான பலனை தருகிறது என்று வியந்து சொல்கிறார். மேலும் கூடுதலான தகவல் என்னவென்றால் மொசார்ட்டின் இசையை கேட்பதனால் கார்டிசால் ஹார்மோன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக சுரக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

கார்டிசால் மன அழுத்தத்தை சமன் செய்யும் ஸ்டீராய்டு ஹார்மோனாகும். எனவே பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இது அதிகமாய் மன அமைதியை தருகிறது.

(இந்த தகவல் IANSலிருந்து பெறப்பட்டுள்ளது)

English summary

How to bring Blood pressure in control

How to bring Blood pressure in control
Desktop Bottom Promotion