For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சருமத்தை மிளிரச் செய்யும் ஹாலாசனா பற்றி தெரியுமா?- தினம் ஒரு யோகா

By Hemalatha
|

உங்கள் சருமம் பொலிவிழந்து ஏனோதானோ என்று இருக்கிறதென்றால், களையில்லாமல் இருக்கும் முகத்திற்கு தேஜஸ் தரும் ஹாலாசனாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் எப்படி செய்வது என தெரிந்து கொண்டு நீங்களும் வீட்டில் இதனை செய்து முழுப் பலன்களையும் பெறுங்கள்.

Halasana for a glowing skin

ஹாலாசனா :

ஹாலா என்றால், கலப்பை என்று பொருள். கலப்பைப் போன்ற நிலையில் செய்யும் இந்த யோகாவிற்கு ஹாலாசனா என்று பெயர் வந்துள்ளது.

உங்கள் வயிற்றில் இருக்கும் உறுப்புகள் நன்றாக செயல்பட்டால், ஜீரணம் நன்றாக நடைபெற்று வளர்சிதை மாற்றத்தில் சத்துக்கள் முழுவதும் உறிஞ்சப்படும்.

இந்த யோகா, வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. மேலும் சருமத்தில் பொலிவு தருகிறது. ஹாலாசனாவை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை :

ஒரு விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள். நன்றாக மூச்சை இழுத்துவிடுங்கள். பிறகு இரு கால்களையும் மேலே தூக்கவேண்டும். உங்கள் இடுப்புப் பகுதி வரை முழுவதும் தூக்குங்கள். இடுப்பிற்கு கைகளால் முட்டு கொடுத்து நிக்க வையுங்கள். இப்போது நிதானமாக மூச்சை இழுத்துவிடவும்.

பின்னர் மெதுவாய் உடலை சமநிலைப் படுத்திக் கால்களை பின்னோக்கி தரையை நோக்கி கொண்டு செல்லவும். கால்களை தரையில் முட்ட வைக்கவும். கால்களை தரையில் முட்ட வைக்கவும். தரையில் கால்களால் தொட்டபின், கைகளை இடுப்பிலிருந்து விடுவித்து, தரையில் பதியுங்கள்.

நிதானமாய் இந்த ஆசனத்தை செய்ய ஆரம்பியுங்கள். அவசரம் தேவையில்லை. செய்ய செய்ய எளிதாய் உங்களால் தரையை தொட முடியும்.

தரையை கால்களால் தொட்டவாறு 1 நிமிடம் இருக்கவேண்டும். மூச்சை நிதானமாய் விட்டுக் கொண்டிருங்கள்.

பின்னர் மெதுவாய் கால்களை உயர்த்தி, பழையபடி இயல்பு நிலைக்கு கொண்டு வரவும். இதுபோல் 10 முறை செய்யலாம்.

இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். முழுப் பலன் கிடைக்கும்.

பலன்கள் :

உங்கள் கால்களை உறுதிப்படுத்தும். முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றிற்கு பலத்தை தரும். தைராய்டு சுரப்பியை நன்றாக வேலை செய்யத் தூண்டும்.

மெனோபாஸ் சமயங்களில் ஹார்மோன்களை சம நிலைப் படுத்த இந்த யோகா பலன் கொடுக்கும்.

குறிப்பு : முதுகுத் தண்டு வலி உள்ளவர்கள், கர்ப்பிணிகள் இந்த யோகா செய்ய வேண்டாம்.

English summary

Halasana for a glowing skin

halasana for a glowing skin
Story first published: Monday, June 13, 2016, 11:04 [IST]
Desktop Bottom Promotion