For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அளவு குறைவோ, அதிகமோ, மது உண்டாக்கும் தீமைகளை பார்த்தீர்களா?

|

நான் ரொம்பவும் கம்மியாதான் குடிக்கிறேன். அதனால் பயமில்லை என நிறைய பேர் சொல்லியிருப்பீர்கள். தினமும் அதிகமாக குடிப்பவர்களுக்குதான் கல்லீரல் நோய் மற்றும் புற்று நோய்கள் வரும் எனவும் கேள்விப்பட்டிருகிறோம்.

ஆனால் அளவு குறைவோ, அதிகமோ, எந்த அளவு குடித்தாலும் மது சிலவகையான புற்று நோய்களை தருகிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Consumption of Alcohol may cause certain Cancers

நீங்கள் விஸ்கி , பிராந்தி மட்டும்தான் உடலுக்கு தீயவை என நினைத்தால் அதுவும் தவறு. பியர்,ஒயின், விஸ்கி என நீங்கள் மதுவை எந்த வடிவத்தில் குடித்தாலும், எல்லாமுமே உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என புதிய ஆய்வு சொல்கிறது. பாகுபாடில்லாமல் மது தொடர்பான புற்று நோய்களை உருவாக்குகிறது என்கிறார்கள்.

மது குடிக்காதவர்களுக்கும் கூட புற்று நோய்கள் வருகிறதுதான். ஆனால் ஆய்வை தொடர்ந்து கூர்ந்து கவனிக்கும்போது மிகவும் சில குறிப்பிட்ட புற்று நோய்கள், மதுவை நீண்ட காலங்களுக்கு குடிப்பவர்களுக்குதான் வருகிறது என சொல்கின்றனர்.

மதுவிலுள்ள 'எத்தனால்' குடித்தவுடன் அசிட்டால்டிஹைடாக மாறுகிறது. இது டி.என்.ஏ மற்றும் புரோட்டினை சிதைக்கிறது. இதுவே புற்று நோயை உருவாக்கும். அதோடு கேன்சரை தடுக்கும் முக்கிய விட்டமின்களான விட்டமின் ஏ, டி, ஈ, மற்றும் கரோடினாய்டு போன்றவை உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இதனால் புற்று நோய்கள் உருவாவதற்கான பல வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.

மது அருந்துவதால் உண்டாகும் புற்று நோய்கள் :

உணவுக் குழாய் புற்று நோய், தொண்டைப் புற்று நோய், வாய்ப்புற்று நோய், குடல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், மார்பக புற்று நோய், குரல்வளை புற்று நோய் என மது அருந்துபவர்க்ளுக்கு இந்த புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்களுக்கு வாய்ப்புற்று நோய் வருவதற்கான 7 மடங்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல், தினமும் 2-5 முறை மது அருந்தும் பெண்களுக்கு அதிகமாய் மார்பக புற்று நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு தெரிவிக்கின்றது. மலக்குடல் புற்று நோயும் அதிகமாக மது அருந்துபவர்களுக்கே வருகிறது.

அமெரிக்கன் கேன்ஸர் சொசைட்டி இது தொடர்பான விழிப்புணர்வை கொண்டு வர , தினமும் ஆண்கள் 2 கிளாஸ் மதுவும் , பெண்கள் 1 கிளாஸ் மதுவும் குடிக்கலாம் என கூறியிருக்கின்றனர். அதற்கு மேல் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என கூறியிருக்கின்றனர்.

English summary

Consumption of Alcohol may cause certain Cancers

Consumption of Alcohol may cause certain Cancers
Desktop Bottom Promotion