இரவில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால் இரவில் தூங்கும் போதும் உடுத்திய உடை நனையும் அளவில் வியர்வை வெளியேறினால், அதனை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். ஏனெனில் இரவில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.

அந்த காரணங்கள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரவில் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவலை

கவலை

ஆம், நீங்கள் மிகுந்த கவலையுடனும், மன அழுத்ததுடனும் இருந்தால், இரவில் படுக்கும் போது அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும் இந்த மன கவலையைப் போக்க மருந்து மாத்திரைகளை எடுத்தாலும், அதன் பக்க விளைவால் அதிகம் வியர்க்கும். எனவே எப்போதும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.

பாராசிட்டமல்

பாராசிட்டமல்

இரவில் படுக்கும் முன் பாராசிட்டமல் மாத்திரையை எடுத்தால், அதிகம் வியர்க்கும். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் போது இம்மாத்திரையை எடுக்கும் போது, உடலை குளிரச் செய்ய நடைபெறும் செயல்முறையால் வியர்வை வெளியேறுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சாதாரணமாக இரவில் அளவுக்கு அதிகமாக வியர்க்கும். அது சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளும் போதும் நேரும். இதற்கு இரத்தத்தில் உள்ள குறைவான அளவிலான சர்க்கரை தான் காரணம்.

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய் நெருங்கும் போது, பெண்கள் மிகுந்த உடல் வெப்பத்தையும், மிகுதியான வியர்வையையும் உணரக்கூடும். இதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தான்.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் இரவில் அதிகமாக வியர்வை வெளியேறும். அதிலும் ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு வந்திருந்தால் அல்லது இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், இரவில் அதிகம் வியர்க்கும்.

காரணமறியப்படா வியர்வை

காரணமறியப்படா வியர்வை

சில நேரங்களில் உடலானது எந்த ஒரு உடல்நல பிரச்சனையின்றியும் அளவுக்கு அதிகமான அளவில் வியர்வையை வெளியேற்றும். இந்த நிலைக்கு காரணமறியப்படா வியர்வை என்று பெயர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes Of Night Sweats You Should Know About

Here are some causes of night sweats you should know about. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter