விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வைட்டமின் டி-யும் கூட காரணமாக இருக்கலாம் - எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்திய ஆய்வில் வைட்டமின் டி சத்து பற்றாக்குறை தாம்பாத்திய உறவில் ஏற்படக் கூடிய செயல்திறன் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என கண்டறியப்பட்டது. முக்கியமாக இது ஆண்களின் விறைப்புத் தன்மை செயல்திறன் குறைபாடு ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.

பெரும்பாலும் வைட்டமின் டி சத்து குறைபாடு தசை வலி, எலும்பு வலி, மயக்கம், தலை சுற்றல், தூக்கமின்மை, செரிமான பிரச்சனை போன்றவை தான் ஏற்படும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போதைய ஆய்வின் மூலம் இது உடலுறவு வாழ்க்கையிலும் முக்கய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
80% சூரிய ஒளி

80% சூரிய ஒளி

நமது உடல் வைட்டமின் டி சத்தை 80% வரை சூரிய ஒளியிடம் இருந்துதான் பெறுகிறது. இது ஆணுறுப்பிற்கும் கூட பொருந்தும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வு

ஆய்வு

சமீபத்தில் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை கோளாறு குறித்த ஆய்வில், போதிய அளவு வைட்டமின் டி சத்து இல்லாமல் இருப்பதும் / மோசமாக இருப்பதும் கூட விறைப்புத்தன்மையை பாதிக்கக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

சூரியக்கதிர்

சூரியக்கதிர்

உடலுறவு வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எனில், போதியளவு நமது உடல் சூரியக்கதிர் வெளிப்படுதலில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

என்டோகிரினாலஜி

என்டோகிரினாலஜி

ஐரோப்பிய என்டோகிரினாலஜி பத்திரிக்கையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், வைட்டமின் டி பற்றாக்குறை மலட்டுத்தன்மை ஏற்பட காரணியாக அமைகிறது என கூறப்பட்டுள்ளது.

இரத்த நாளங்கள் பாதிப்பு

இரத்த நாளங்கள் பாதிப்பு

இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் கூட விறைப்புத்தன்மையில் செயல்திறன் குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கலாம். எனவே, உடலில் வைட்டமின் டி சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை விறைப்புத் தன்மை குறைபாடு உண்டாக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வைட்டமின் டி சத்து இந்த கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

மற்ற பாதிப்புகள்

மற்ற பாதிப்புகள்

நீரிழிவு, உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு போன்றவைக்கும் வைட்டமின் டி சத்து குறைபாட்டிற்கும் கூட சிறியளவு தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவர்கள் அறிவுரை

மருத்துவர்கள் அறிவுரை

எனவே, உங்கள் உணவு முறையில் முடிந்தளவு வைட்டமின் டி சத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் மிகவும் எளிய வழி இருக்கிறது, தினமும் அதிகாலை சூரிய ஒளி படும்படி நடைபயிற்சி செய்யுங்கள். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க உதவும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த அறிகுறிகளை வைத்து உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என கண்டறிய முடியும்...

தசை வலி,

எலும்பு வலி,

மயக்கம்,

தலை சுற்றல்,

தூக்கமின்மை,

செரிமான பிரச்சனை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannot Perform In Bed? You Could Be Vitamin D Deficient

Get some sun during the day for happy nights. Find out why vitamin D is important for dealing with erectile dysfunction.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter