சப்போட்டாப் பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

மாம்பழம், ஆப்பிள் அல்லது வாழைப்பழத்தை ஒப்பிடும் போது சப்போட்டா பழம் சற்று மவுசு குறைவானது தான். இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் சப்போட்டாவை பயிரிடுகின்றன. இதில் கர்நாடகா முதலிடம் வகிக்கிறது. இந்தப் பழத்தில் பல வகைகள் பல பெயர்கள் உண்டு (கிரிக்கெட் பால் எங்கிற பெயரும் கூட உண்டு)

இதன் பிசுபிசுத்த சுவையால் பழத்தை அப்படியே உண்ண பலருக்குப் பிடிக்காது. ஆனால் பாலுடனோ அல்லது கூழாகவோ சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

இந்தப் பழம் பலவகையான இனிப்புகளையும், ஜாம் வகைகளையும் செய்ய பயன்படுகிறது. சாப்பிடும் வகை எதுவாக இருந்தாலும், இதில் நிறைந்துள்ள நன்மைகள் காரணமாக இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள்

சத்துக்கள்

சப்போட்டா வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது. பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்ணிற்கு மிகவும் நல்லது என்பதோடு வயது முதிரும்போது பார்வையை மங்காமல் வைத்துக் கொள்ளும். பிற புளிப்பான பழங்களில் காணப்படும் வைட்டமின் சி சத்து வலுவான எதிர்ப்பு சக்தியைத் தருவதோடு இதயக் கோளாறுகளை நீக்குகிறது.

தாயகப் போகும் பெண்களுக்கு நல்லது

தாயகப் போகும் பெண்களுக்கு நல்லது

சப்போட்டாப் பழம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் தோன்றும் காலை நேர உடல் உபாதைகளை எதிர்கொள்ளவும் இதில் காணப்படும் கொலோஜன் வயிறு தொடர்பான கோளாறுகளை எதிர்கொள்ளவும் உதவுகின்றன. இதில் காணப்படும் வைட்டமின்கள், மாவுச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்தது,

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

ஐபிஎஸ் எனப்படும் செரிமானப் பிரச்சனைகளை சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் களைய முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலையும் போக்கவல்லவை.

சக்தியைக் கொடுக்கும்

சக்தியைக் கொடுக்கும்

இதில் அபரிமிதமாகக் காணப்படும் ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் சர்க்கரைச் சத்துகள் இந்தப் பழத்தை ஒரு சக்திக் களஞ்சியமாக்குகிறது. நீங்கள் பரபரப்பான வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் உடன் ஒரு சப்போட்டாவை எடுத்துச் சென்று உங்கள் சக்தியை ஈடுகட்டி உங்கள் நாளை பயனுடையதாக்குங்கள்.

சிறுநீரக கற்களை அகற்ற உதவும்

சிறுநீரக கற்களை அகற்ற உதவும்

உடைத்த சப்போட்டா விதைகள் சிறுநீர் இளக்கியாக செயல்படுவதால் சிறுநீரக கற்கள் மற்றும் நோய்கள் உருவாகாமல் பாதுகாக்கிற்து.

எலும்பை வலுவாக்கும்

எலும்பை வலுவாக்கும்

பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், துத்தநாகம் (ஜிங்க்), தாமிரம் மற்றும் செலினியம் போன்ற பல கனிமச் சத்துக்கள் நிறைந்த சப்போட்டா உங்கள் எலும்புகளை நன்கு உறுதியாக்கும். சப்போட்டாவை உண்ணுவதால் ஊட்டச்சத்து மருந்துகளை பின்னாளில் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படாது.

சருமம் மற்றும் முடிக்கு உதவுகிறது

சருமம் மற்றும் முடிக்கு உதவுகிறது

சப்போட்டாப் பழம் சருமத்திற்கும் முடிக்கும் நல்லது. இது அவற்றை ஊட்டத்துடனும் சருமத்தில் சுருக்கங்கள் இன்றியும் வைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் ஆக்சிஜனேற்றத் தடுப்பானாக இது செயல்பட்டு பெருங்குடல் மற்றும் வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களை தடுக்க வல்லது.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

இரத்த அழுத்தத்தை குறைக்கும்

இதில் காணப்படும் மக்னீசியம் இரத்த நாளங்களை ஆரோக்கியமுடன் வைக்கவும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தையும் ஓட்டத்தையும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இரும்புச் சத்து உடல் சோர்வைப் போக்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்தும்

உடல் எடையை கட்டுப்படுத்தும்

சப்போட்டா உடலில் அதிக அளவு நீர் சேருவதைத் தடுத்து வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை குறைய வழி செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Benefits Of Sapota For Our Health

Here are some benefits of sapota for our health. Read on to know more...
Story first published: Monday, October 31, 2016, 11:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter