For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாராலும் நம்ப முடியாத ஆல்கஹால் கலப்பு உள்ள பொருட்கள்!!

|

விஸ்கி, ரம், வோட்கா, பீர் போன்றவற்றில் தான் ஆல்கஹால் பங்கு / கலப்பு இருக்கிறது என்று தான் நம்மில் பெரும்பாலானோர் கருதி வருகிறோம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உண்ணும் உணவுகளில் கூட ஆல்கஹால் பங்கு இருக்கிறது.

ஒரு மாதம் மதுவை கைவிட்டால் இவரை போல அதிசயிக்கும் வகையில் மாற்றத்தை காணலாம்!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்க்ரீம்களில் இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாசனை திரவம், வாய் கழுவும் திரவம் என பலவற்றில் ஆல்கஹாலின் பங்கு / கலப்பு இருக்கிறது. இதில் சிலவன விஷத்தன்மை உள்ளது என்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

இனி யாராலும் நம்ப முடியாத ஆல்கஹால் கலப்பு உள்ள பொருட்கள் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணிலா சாறு (Vannila Extract)

வெண்ணிலா சாறு (Vannila Extract)

ஐஸ்க்ரீம்களில் ஒருசில துளி வெண்ணிலா சாறு மட்டும் ஏன் சேர்க்கப்படுகிறது என்று தெரியுமா? ஏனெனில், சில வகை வெண்ணிலா சாறுகளில் வோட்கா, ஜின் போன்ற மது பானங்களில் இருக்கும் அளவு ஆல்கஹால் அளவு இருக்கிறது.

கை கழுவும் திரவம்

கை கழுவும் திரவம்

"Hand Sanitizer" எனப்படும் கை கழுவும் திரவத்திலும் ஆல்கஹால் கலப்பு / பங்கு இருக்கிறது. சோப்பை விட அதிக வேகமாக நச்சு நுண்ணுயிர்களை இது கொல்வதற்கு காரணம் இதிலிருக்கும் 60% முதல் 85% மான ஆல்கஹால் கலப்பு தான். மற்றும் ஆல்கஹால் கலப்பு இல்லாத கை கழுவும் திரவங்களும் கூட சந்தையில் விற்கப்படுகின்றன ஆனால், அவை இது போன்ற அதிக திறன் கொண்டவை அல்ல.

இருமல் மருந்து

இருமல் மருந்து

நம்மில் பலருக்கும் இது தெரிந்தது தான். நாம் உட்கொள்ளும் பெரும்பாலான இருமல் மருந்தில் 10 - 40% அளவில் ஆல்கஹால் பங்கு இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி இருமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மௌத் வாஷ் (Mouth Wash)

மௌத் வாஷ் (Mouth Wash)

வாயைக் கழுவ நாம் தினமும் பயன்படுத்தும் மௌத் வாஷில் அதிகப்படியான அளவு ஆல்கஹால் கலப்பு / பங்கு இருக்கிறது. இதில் 30% வரையிலும் ஆல்கஹால் பங்கு இருக்கிறது. தப்பித்தவறி நீங்கள் இதை முழுங்கினாலும் அதன் பயனை காட்ட தொடங்கிவிடும்.

வாசனை திரவியம்

வாசனை திரவியம்

உடல் முழுதும் கமகமக்க நாம் தினமும் பயன்படுத்தும் வாசனை திரவியத்திலும் கூட ஆல்கஹால் கலப்பு இருக்கிறது. 50-90% ஆல்கஹால் கலப்பு இருக்கிறதாம். மற்றும் இதில் சேர்ந்திருக்கும் இரசாயனக் கலப்பு, குடித்தால் விஷமாக மாறிவிடும்.

ப்ரோடீன் பார்

ப்ரோடீன் பார்

ப்ரோடீன் பாரில் சர்க்கரை ஆல்கஹால் கலப்புப் இருக்கிறது. இது சாதாரண ஆல்கஹால் போன்றது அல்ல. இந்த சர்க்கரை ஆல்கஹால் (Sugar Alcohols) என்பது இனிப்பின் மூலம் சேரும் கலோரிகளை குறைக்க கூடியதாம். இது பொதுவாக ஐஸ்க்ரீம் மற்றும் குக்கீஸ் உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

கண்ணாடி துடைப்பான் (Windshield wiper)

கண்ணாடி துடைப்பான் (Windshield wiper)

கார் கண்ணாடியை துடைக்க உதவும் வைப்பர்களை துடைக்க பயன்படுத்தப்படும் திரவத்திலும் கூட ஆல்கஹால் கலப்பு / பங்கு இருக்கிறது. ஆனால் இது மிகவும் விஷத்தன்மை உடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Things You Wont Believe Actually Contain Alcohol

You cant believe that, these things also actually contains alcohol. read here in tamil.
Desktop Bottom Promotion