For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!

|

மனிதனின் இரு கைகளையும் விட மிக முக்கியமானது தன்னம்பிக்கை. யானைக்கு பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை என்ற வாசகத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது, மறந்தால் பூமியில் நிலைத்து இருந்துவிட முடியாது.

எனவே, அந்த தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள, நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த வழிகளையும், பயிற்சிகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் பலத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

உங்கள் பலத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

நீங்கள் எந்த விஷயங்களில் பலசாலியாக இருக்கிறீர்களோ அந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுங்கள். முந்தைய செயல்பாடுகளில் உங்களது வெற்றி தோல்வி குறித்து பகுத்தாய்ந்து பாருங்கள். இது, நீங்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்றும், உங்கள் பலம் எது என்றும் வெளிகாட்டும்.

வெற்றியை கண்காணிப்பு செய்யுங்கள்

வெற்றியை கண்காணிப்பு செய்யுங்கள்

நீங்கள் செய்யும் வேலைகளில் எவை உங்களுக்கு நேர்மறை வெளிப்பாடுகளையும், எதிர்மறை வெளிப்பாடுகளையும் தருகின்றன என்று கண்காணிப்பு செய்ய வேண்டியது அவசியம். இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

புதிய நபர்களுடன் பேசுங்கள்

புதிய நபர்களுடன் பேசுங்கள்

உங்கள் தொழில் சார்ந்த அல்லது வேலை சார்ந்த நபர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்களை முன்னேற்றமடைய தூண்டும். நிறைய விஷயங்கள் நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

புதிய முயற்சிகள்

புதிய முயற்சிகள்

எதுவும் தெரிந்துக்கொள்ளாது அகலக்கால் வைக்காமல், தெரிந்ததை வைத்து புதிய முயற்சிகள் எடுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி சார்ந்து இதற்கு முன் யாராவது ஈடுபட்டிருக்கிறார்களா? அவர்களுக்கு அது எந்த வகையில் பலனளித்தது, அதில் இருந்து என்ன மாற்றங்கள் செய்தால் நீங்கள் மேலும் பலனடையலாம் என்று யோசிக்க வேண்டியது அவசியம்.

உடனுக்குடன் செயல்படுங்கள்

உடனுக்குடன் செயல்படுங்கள்

உங்களது வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் உடனக்குடனான உப்டேட்டுகளை கற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். இது தான் உங்கள் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானம் செய்யும் முதல் கருவி.

பழகும் விதம்

பழகும் விதம்

பேச்சு மொழி மட்டுமின்றி, உடல் மொழியிலும் முன்னேற்றம் தேவை. முகத்திற்கும் முன்பு பேசும் போது தைரியமாகவும், தெளிவாகவும், துணிவுடனும் பேசுதல் வேண்டும். கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். உங்கள் செய்கைகள் உங்கள் தைரியத்தை வெளிக்காட்டுவதாய் இருத்தல் வேண்டும்.

புதிய இடங்களுக்கு சென்று வாருங்கள்

புதிய இடங்களுக்கு சென்று வாருங்கள்

புதிய இடங்களுக்கு சென்று வருதல் உங்கள் தன்னம்பிக்கையை மேலோங்க செய்யும் ஓர் செயல்பாடு ஆகும். மற்றும் இது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். மற்றும் தனியாக பயணம் செய்தல் உங்களை நீங்களே உணர வைக்க உதவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உங்களது தன்னம்பிக்கையை உயர்த்த ஓர் சிறந்த பயிற்சியாக இருப்பது உடற்பயிற்சி. மனதும், உடலும் ஒருசேர உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். ஏதேனும் ஒன்றில் சோர்வு அல்லது குழப்பம் ஏற்பட்டால் கூட மற்றொன்று வலுவாக இருந்தும் பயனற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன.

சுய பரிசோதனை

சுய பரிசோதனை

எந்த ஒரு விஷயத்தையும் வேறு நபரை வைத்தோ, வேறு ஒருவர் மூலமோ பரிசோதனை செய்த பிறகு, நீங்கள் ஆரபிக்கலாம் என்று நேரத்தை வீணாக்க வேண்டாம். வெற்றியோ, தோல்வியோ, நீங்கலாக முதலில் முயற்சி செய்ய தொடங்க வேண்டும். இது, மற்றவர்கள் முன்னிலையில் உங்களை வேறுபடுத்தியும், உயர்த்தியும் காண்பிக்கும் பண்பாக ஓர்நாள் உருமாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Ways To Become A More Confident Person

Everyone should know about this nine ways to become a more confident person. Take a look.
Desktop Bottom Promotion