For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக இட்லி தினம்: தினமும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சமீபத்திய ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த உணவு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இனிமேல் வீட்டில் காலையில் இட்லி செய்தால், அதை தவறாமல் சாப்பிடுங்கள்.

|

இட்லி டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இந்திய உணவான இட்லி டயட்டைப் பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கவும் முடியும். இட்லி டயட் என்றதும் பலரும் நாள் முழுவதும் வெறும் இட்லியை சாப்பிட வேண்டுமோ என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் இட்லி டயட் என்பது, தினமும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதைக் குறிக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

அதுமட்டுமின்றி சமீபத்திய ஆய்வு ஒன்றில், இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஓர் சிறந்த உணவு என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இனிமேல் வீட்டில் காலையில் இட்லி செய்தால், அதை தவறாமல் சாப்பிடுங்கள்.

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட சாப்பிட வேண்டிய காலை உணவுகள்!!!

சரி, இப்போது தினமும் இட்லியை காலை உணவாக எடுத்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள்

சத்துக்கள்

தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.

உடல் வலிமை அதிகமாகும்

உடல் வலிமை அதிகமாகும்

உடல் வலிமையை அதிகரிக்கும் உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

கொழுப்புக்கள் குறைவு

கொழுப்புக்கள் குறைவு

வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.

செல்கள் புதுப்பிக்கப்படும்

செல்கள் புதுப்பிக்கப்படும்

உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலாம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.

எளிதில் செரிமானமாகும்

எளிதில் செரிமானமாகும்

காலையில் மற்ற உணவுகளை விட இட்லியை உட்கொண்டால், செரிமான மண்டலத்தினால் எளிதில் செரிக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

எடை குறையும்

எடை குறையும்

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.

கோதுமை இட்லி சிறந்தது

கோதுமை இட்லி சிறந்தது

அரிசியினால் உடல் பருமனடைவது போல் உணர்ந்தால், கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. ஏனெனில் அரிசியினால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் கோதுமையைக் கொண்டு இட்சி செய்து சுவைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Idli in Tamil | உலக இட்லி தினம்: தினமும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

If you love to eat idli, then you would like to know how it aids weight loss and benefits the health.
Desktop Bottom Promotion