நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!

By: Ashok CR
Subscribe to Boldsky

அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தைப் பெறுவதால், லேசான பதட்டம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் அல்லது கவலை அதிகமாக இருக்கும் நேரங்களிலும் சாதாரண செயல்பாடு மற்றும் ஒரு நபரின் நல்வாழ்வை இடைமறிக்கின்றது. பதட்டமானது மனஅழுத்தம் தொடங்கி மருந்துகளின் பக்கவிளைவுகள் மற்றும் சட்டவிலக்கான மருந்துகள் பயன்படுத்துவது போன்ற பல விளைவுகளை ஏற்படுத்தும்.

பதட்டத்தின் முதல் அறிகுறி பயம் மற்றும் கவலை ஆகும். நீங்கள் பதட்டமாக இருக்கும் போது வாய் உலர்வது, இதய படபடப்பு, வியர்த்தல் போன்றவற்றை உணரலாம். வயிற்றில் ஒரு குமட்டல் உணர்வு உண்டாவதும் பதட்டத்தின் அறிகுறியாகும். பதட்டத்தின் காலஅளவு நீங்கள் பதட்டப்படும் நிகழ்வின் கால அளவைப் பொருத்தது.

உதாரணமாக, நீங்கள் ஒரு பிரசண்டேஷனுக்கு முன் பதட்டமாக இருப்பதாக உணர்ந்தால், அந்த பிரசண்டேஷன் முடிந்தவுடன் உங்கள் பதட்டம் தானாகவே மறைந்துவிடும். பதட்டத்தை ஏற்படுத்துவது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நீடிக்கும் போது, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, நீங்கள் திறம்பட சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் லேசான பதற்றத்தை மட்டும் உணரும் போது பின்வரும் இயற்கை சிகிச்சை முறைகளை பின்பற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூச்சு பயிற்சியை செய்யவும்

மூச்சு பயிற்சியை செய்யவும்

மூச்சுப் பயிற்சி பதற்றத்தை சமாளிக்க ஒரு சிறந்த வழி ஆகும். ஆழ்ந்த மூச்சு உடலை இளைப்பாறச் செய்கிறது மற்றும் பதற்றத்தைக் குறைக்கின்றன. ஒரு வசதியான நாற்காலியில் உட்கார்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். பின் நான்கு வரை எண்ணவும் .பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடவும், நான்கு வரை எண்ணவும். மீண்டும் மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். சுவாசிக்கும் போது காற்றானது நுரையீரல் முழுவதிற்கும் சென்று, பின் உடலை விட்டு வெளியேறுவதால் சுற்றுப்புறத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மூச்சுப் பயிற்சியானது உங்கள் அமைதிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகின்றது.

சீமைச்சாமந்தி டீ அருந்துங்கள்

சீமைச்சாமந்தி டீ அருந்துங்கள்

சீமைச்சாமந்தி டீ அருந்துவது பதற்றத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு ஓய்வு அளிக்கும் சீமைச்சாமந்தியில் எபிஜெனின், லயொடோலின் மற்றும் பைசொபொலல் ஆகிய பொருட்கள் உள்ளன. தினமும் சீமைச்சாமந்தி டீ அருந்துபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மனஅழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்துள்ளது.

 லாவெண்டர் மணத்தை உள்ளிழுக்கவும்

லாவெண்டர் மணத்தை உள்ளிழுக்கவும்

லாவெண்டர் மணம் மனத்திற்கு இனிமை தருகின்றது. லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்ளலாம் அல்லது குளிக்கும் நீரில் சில துளிகளை சேர்த்துக் கொள்ளலாம் .மேலும் இரவு நல்ல தூக்கத்திற்கு சில துளி லாவெண்டர் எண்ணெயை தலையணை உறையில் தடவிக் கொள்ளலாம்.

யோகா

யோகா

யோகா மன அமைதிக்கும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றது. எனவே சில எளிய யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொள்வது, உங்களுக்கு நலம் அளிப்பதுடன் பதற்றத்திற்கு சிகிச்சை அளிக்கவும் உதவும்.

உங்கள் குளியல் நீரில் எப்சம் உப்பு சேர்க்கவும்

உங்கள் குளியல் நீரில் எப்சம் உப்பு சேர்க்கவும்

எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் சல்பேட், ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக கூறப்படுகிறது. எப்சம் உப்பு குளியல் பதற்றத்தை குறைக்கவும், உங்கள் மனநிலையை கட்டுப்படுத்தவும் உதவும்.

குறிப்பு

குறிப்பு

உங்கள் அன்றாட வாழ்வில் தலையிடும் அளவிற்கு பதற்றத்தின் அளவு கடுமையானதாக இருந்தால், ஒரு மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Treat Anxiety Using Natural Methods

Here are some of the natural ways to treat anxiety with natural methods.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter