For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!!

அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!!

இப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

உடல் சூடு குறையும்

உடல் சூடு குறையும்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.

இதய நோய்

இதய நோய்

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

நீரிழிவு

நீரிழிவு

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

எடை குறையும்

எடை குறையும்

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

 மார்பகத்தை பெரிதாக்க,,,

மார்பகத்தை பெரிதாக்க,,,

நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

இரத்த ஓட்டம் மேம்படும்

வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

 டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்

வெந்தயம் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும்.

ஆண்களின் பிரச்சனைகளைப் போக்கும்

ஆண்களின் பிரச்சனைகளைப் போக்கும்

ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும். இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Methi Seeds On Empty Stomach

Fenugreek has a long history of treating several health problems. Read on to know the amazing health benefits of fenugreek or methi seeds.
Desktop Bottom Promotion