வாவ்!!! உடலுறவு வைத்துக் கொண்டால் உடல் எடை குறையுமா? படிச்சு, புரிஞ்சு, தெரிஞ்சுக்குங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க படாதப் பாடுப்படுகிறீர்களா? ஜிம்மிற்கு போக நேரமில்லையா? மிக எளிதாக வீட்டுலையே இருந்தபடி உடல் எடையை குறைக்கலாம் இந்த உடற்பயிற்சி மெஷின் மட்டும் வாங்குங்க போதும் ரெண்டே வாரத்துல குண்டு கல்யான் போல இருக்க நீங்க அனிருத் மாதிரி ஆயிடலாம் என பல விளம்பரங்களை உங்கள் வீட்டு தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள். அட! செலவே செய்யா வேண்டாம். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? இதற்கு உங்கள் பதில், ஆம் என்றால், நீங்கள் நிஜமாகவே வீட்டில் இருந்தபடி கஷ்டபடாமல் உடல் எடையை குறைக்க முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? கட்டுரை தலைப்பை படித்து விட்டு அப்பறம் என்ன கேள்வி, தொடர்ந்து படித்து உங்கள் போது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!

சமீபத்தில் கனடாவில் உள்ள க்யூபெக் என்ற பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில். உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என அவர்களது ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்கள் உடல் எடை குறைக்க எவ்வளவோ கட்டுரைகள் உலகம் முழுகூதும் எழுதபட்டிருக்கும், அவர்களும் படித்திருப்பார்கள். ஆனால், அதைக் கடைப்பிடித்து எவ்வளவு பேர் உடல் எடை குறைத்திருப்பார்கள் என்று பார்த்தல், பட்டப்பகலில் நிலவை தேடுவதை போல தான் இருக்கும். ஆனால், இந்த முறையை கடைப்பிடித்து வெகுஜன ஆண்கள் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாவார்கள் என நம்புகிறோம். சரி இனி உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்க முடியும் என தெரிந்துக் கொள்ளலாம்...

உடல் எடையைக் குறைக்க தேன் டயட்டை ஃபாலோ பண்ணி பாருங்களேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

சமீபத்தில் கனடாவில் உள்ள க்யூபெக் என்ற பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில். உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என அவர்களது ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் அவர்கள் மேற்கொண்டு கூறியிருப்பது இது ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் மேற்கொள்ளும் உடலுறவு முறைக்கும் ஏற்ப மாறுபடும் என கூறியிருக்கிறார்கள்.

கலோரிகள் கரைக்க

கலோரிகள் கரைக்க

மேலும் அந்த ஆய்வில் அவர்கள் கூறியிருப்பது, உடலுறவு கொள்வதன் மூலம் நிமடத்திற்கு நிமிடம் நமது உடலில் உள்ள கலோரிகள் நாம் உடலுறவு கொள்ளும் நிலைக்கு ஏற்றவாறு கரைக்கப்படுகின்றன. இதனால் தான் உடலுறவு கொள்ளும் போது உடல் எடை குறைய காரணம் என கூறியிருக்கின்றனர்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

சீரான இரத்த ஓட்டம் தான் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது. அதிகமாக நீங்கள் உடலுறவுக் கொள்ளும் போது இரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த ஓட்டம் சீரடையும் போது உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. இதனால் நீங்கள் உடல் எடை குறைக்க முடியும்.

நல்ல மூட்

நல்ல மூட்

நீங்கள் தினமும் உடலுறவு மேற்கொள்ளும் போது உங்கள் மனதில் அழுத்தம் குறைந்து, மனமும், உடலும் நல்ல நிலை அடைகிறது. உடல்நிலை இதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நீங்கள் ஒருமுகத்தோடு எந்த ஒரு வேலையிலும் ஈடுபட முடியும்.

உடலுறவு கொள்ளும் நிலை

உடலுறவு கொள்ளும் நிலை

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையை அவர்கள் உடலுறவு கொள்ளும் போது பின்பற்றுவர். சிலர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிலையை பின்பற்றுவர். இந்த நிலைக்கு ஏற்றவாறு தான், உங்கள் உடலில் உள்ள கலோரிகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் அப்ளிக்கேஷன்

மொபைல் அப்ளிக்கேஷன்

எப்படி எல்லாம், எந்தெந்த நிலைகளில் எல்லாம், எவ்வளவு நேரம் உடலுறவுக்கொண்டால் எவ்வளவு உடல் எடை குறையும் என தெரிந்துக்கொள்ள மொபைல் அப்ளிக்கேஷன்கள் கூகிளில் கிடைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Having Intercourse Will Lead You To Weight Loss

Are you worrying about you belly fat? don't worry a new research say, having Intercourse lead to weight loss, read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter