For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

|

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்ரிடிஸ் அபாயம் உள்ளதாம்.

Disadvantages Of Drinking Water Whilst Standing Or Walking

இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரைப்பை குடல் பாதை பாதிப்பு

இரைப்பை குடல் பாதை பாதிப்பு

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

MOST READ: வலிமையான எலும்புகளைப் பெறுவதற்கான டாப் 10 வழிகள்!

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

MOST READ: ஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..?

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

MOST READ: ஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா?

நரம்புகள் டென்சன் ஆகும்

நரம்புகள் டென்சன் ஆகும்

பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

MOST READ: பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

குறிப்பு

குறிப்பு

உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

* காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

* மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.

* இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.

* முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்.

MOST READ: குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா தங்கணுமா?... அப்போ இந்த வாஸ்து இருக்கானு பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disadvantages Of Drinking Water Whilst Standing Or Walking

Here are some of the disadvantages of drinking water whilst standing or walking. Take a look....
Desktop Bottom Promotion