எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒரு மனிதனுக்கு பெரிய சொத்தே ஆரோக்கியமான உடல் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஓடியாடி வேலை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலரும் உடலை வருத்திக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக சின்ன வயதிலேயே பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

கட்டமைப்பான உடல் என்பது ஆரோக்கியத்தை குறிக்கும். கட்டமைப்பான உடலைப் பெற, உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். மற்றொரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது உடற்பயிற்சி. கட்டமைப்பான உடலுக்கு மனதும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

எப்போதும் மாடிப்படிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் வியக்கத்தக்க உடல்நல நன்மைகள்!!

உடலை கட்டுக்கோப்புடன் வைத்து நீண்ட நாள் வாழ்வதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இதில் அடக்கம். உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வல்லுனர்கள் கூறும் வீட்டு சிகிச்சைகள் இதோ:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள்

சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள்

மீன்களை வாரம் மூன்று முறை உட்கொண்டால், சரும சுருக்கம் மற்றும் தொய்வை 30 சதவீதம் வரை குறைக்கும். அதற்கு காரணம் கடல் உணவுகளில் வளமையான அளவில் புரதம், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கொலாஜனுக்கு புத்துணர்வு கொடுத்து தசைகளை வளுவளுவென வைத்திருக்கும். சால்மன் மீன்களில் அஸ்டாக்சன்தின் என்ற ஆண்டி-ஆக்சிடன்ட் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.

மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ

மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள கூட்டுப்பொருட்கள், இரத்த சர்க்கரையை எரிப்பொருளாக உங்கள் மூளை பயன்படுத்த உதவும். மேலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் ஹார்மோனான என்டோர்பின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அதனால் அடுத்த முறை ஆற்றல் திறன் குறையும் போது, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள்.

திடமான இதயத்திற்கு வால்நட்

திடமான இதயத்திற்கு வால்நட்

தினமும் 5-6 வால்நட்களை உண்ணுமாறு இதய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நெஞ்சு வலி ஏற்படும் இடர்பாட்டை பாதியாக குறைக்கிறதாம். ஆயுளையும் 3 வருடங்களுக்கு அதிகரிக்கிறதாம். இந்த மொறுமொறு நட்ஸில், இதயத்தை குணமாக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது.

நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள்

நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள்

உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால், உங்கள் நினைவாற்றல் குறைந்தது 30 சதவீதமாவது அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின். இது மூளைக்கு புத்துணர்வை உண்டாக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும்.

சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள்

சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள்

வயிறு மூலமாக சுவாசித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குங்கள். 6 எண்ணும் வரை உங்கள் மூக்கின் வழியாக மெதுவாவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். அப்படி செய்யும் போது வயிற்று பகுதி அமைதி பெற்று விரிவடையும். 4 எண்ணும் வரை அப்படியே இருந்து, பின் வாயின் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். 7 எண்ணும் வரை இதனை செய்யவும். நன்றாக உணரும் வரை இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள்

தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள்

உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி அல்லது இதர வலிகள் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள், போய் தூக்குங்கள். நன்றாக தூங்கினால், ஒரு மாதத்தில், உங்கள் அசௌகரியங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தூக்கம் உங்கள் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் அது அழற்சியை குறைத்து, பாதிப்படைந்த திசுக்களை வேகமாக ஆற வைக்கும்.

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை

ஆராய்ச்சியாளர்களின் படி, உங்கள் உணவில் தினமும் 1/2 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் இரத்த அழுத்தத்தை 29% அல்லது அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தும். உங்கள் சிறு குடலில் கார்ப் உறிஞ்சுவதை குறைக்கும்.

காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் வியாதிகளில் இருந்து அது நம்மை பாதுகாக்கும். கேரட், மிளகு மற்றும் வெண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வண்ணம் இருந்தால் அதிக நன்மை. காயின் நிறமி சுவாச குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் கிருமிகளால் உள்ளே நுழைய முடியாது. மேலும் நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

கிருமிகளை கொல்வதற்கு தேன்

கிருமிகளை கொல்வதற்கு தேன்

பாய்ஸ்சுரைஸ் செய்யப்படாத தேனில் இயற்கையான ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் குணப்படுத்தும் என்சைம்ஸ் அடங்கியுள்ளது. அதனால் நோய்வாய்பட்டிருக்கும் போது, அதனை உட்கொண்டால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே குணமாகும். சைனஸ் பிரச்சனை மற்றும் அனைத்து வகையான சளி பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies To Stay Super Fit

Fit body is a sign of health. Here are some home tips to keep to fit and long living. This includes food, lifestyle and exercise. Experts share home remedies that help them stay fit.
Story first published: Sunday, February 16, 2014, 14:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter