கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

கத்தரிக்காய் பச்சை மற்றும் ஊதா நிறங்களில் கிடைத்து வருகிறது. இதில் ஹைபிரிட் வெரைட்டியும் தற்போது உள்ளது. பொதுவாகவே கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம்.

மேலும் கத்தரிக்காய் குறித்த ஆய்வு ஒன்றின் படி, அதில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இல்லை. அப்படியிருந்தும் ஏன் இது நன்மை தரும் உணவு என்று கூறுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்.

இதுப்போன்று வேறு: கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கத்தரிக்காயின் குணநலன்களைப் பற்றி இப்போது பார்ப்போம். மேலும் இத்தகைய உணவை நாம் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை படித்து உணர்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free Radicals)

ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free Radicals)

உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது. இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்து, எந்த வித நோயையும் அண்ட விடாமல் தடுக்கும் குணம் கத்தரியில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலத்திற்கு உள்ளது. இது தான் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கப்படுகின்றன.

மூளையின் செயல் திறன்

மூளையின் செயல் திறன்

கத்தரிக்காயில் உள்ள பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கின்றன. இது நமது செல்களின் மெம்பிரேன்களை பத்திரமாக காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.

அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்தல்

அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்தல்

தினசரி கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் உள்ள அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது. பாலிசைத்தீமியா என்ற நோய் உள்ளவர்களுக்கு அதிகம் இரும்புச்சத்து இருக்கும். இவர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருககும்.

பாக்டீரியாவை தடுக்க வல்லது

பாக்டீரியாவை தடுக்க வல்லது

எந்த ஒரு தொற்று தோயிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி கத்தரிக்காய்க்கு உண்டு. வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சக்தியும் உள்ளது. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தகைய கிருமிகளால் வரும் நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

கத்தரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் காய்கறியாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை சிறந்து சக்தி தரும் பொருட்களாக அமைகின்றது.

புகைப்பிடிப்பதை நிறுத்த முடியும்

புகைப்பிடிப்பதை நிறுத்த முடியும்

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கையான முறையில் நிறுத்த விரும்பினால் இதோ ஒரு கத்தரிக்காய். இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய் கத்தரிக்காயாகும். இது நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காயான கத்தரிக்காய் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இவை நமது சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது. கத்தரி தோலில் உள்ள அன்தோசையனின் என்ற பொருள் நமது சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

கத்தரிக்காயை தினமும் சாப்பிடுவது நமது தலை பகுதியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் முடியின் வேர் பகுதி ஊக்குவிக்கப்பட்டு முடி நன்கு வளருகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் மற்றும் முடியும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதை நம்புங்கள்.

சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல்

சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல்

இது மிக முக்கிய பலனாக விளங்குகிறது. கத்தரிக்காயில் தேவையான அளவு நீர்ச்சத்து உள்ளதால், அது சருமத்தில் ஈரப்பதத்தை எப்போதும் நிலை நிறுத்தும். இதனால் வறண்ட சருமம் மற்றும் சருமத்தின் வெடிப்புகளை குணப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Brinjal

Here are some of the health benefits of brinjal/eggplant, which will give you more reasons to include brinjal in your diet.
Story first published: Saturday, February 1, 2014, 10:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter