For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!

By Boopathi Lakshmanan
|

இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதா? இதற்கு பணி சூழல், வாழ்க்கை சூழல், போட்டி, உடல் நிலை என பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த காரணமாக இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவது நல்ல அறிகுறி என்று சொல்ல முடியாது. இங்கே தரப்பட்டுள்ள 10 குறிப்புகளை படித்த இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

வயது வந்தவர்களில் 10 இல் 7 பேருக்கு மாரடைப்பு அல்லது இதய நோய் வர முக்கிய காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் தான். மேஜைகளில் மட்டுமே பணி புரிவது, உடற்பயிற்சிகள் போதிய அளவு செய்யாதிருத்தல் மற்றும் உப்பு நிறைந்த துரித உணவுகளை நிறைய சாப்பிடுதல் போன்ற விஷயங்கள் இளைஞர்களிடம் இந்த பிரச்சனைகள் அதிகம் வர காரணங்களாக உள்ளன.

குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான 10 காரணங்கள்!!!

உங்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவு 140mmHg/90mmHg (140ஃ90 என்று குறிப்பிடப்படும்) ஆக இருப்பதே சமநிலையில் இருப்பதாகும். 140 என்பது சிஸ்டோலிக் அழுத்தத்தை குறிக்கிறது. இது இதயத்தில் இருந்து இரத்தம் உந்தப்பட்டு உடல் முழுவதும் செல்லும் போது இருக்கும் அழுத்தமாகும். 90 என்பது டையஸ்டோலிக் அழுத்தம் ஆகும். இது இதயம் அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் போது இருக்கும் குறைந்த அழுத்தம் ஆகும்.

எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க...

இந்தியாவில், நகரத்தில் வசிக்கும் இளைஞர்களில் 20 முதல் 40 சதவிகிதம் பேருக்கும், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களில் 12 முதல் 17 சதவிகிதம் பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இதற்காக கவலைப்படத் தேவையில்லை. சிறு நடவடிக்கைகள் போதும், உங்களுடைய ஆபத்துகளை களைந்து நலமாய் வாழ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரம் ஒரு முறை ஜாக்கிங்

வாரம் ஒரு முறை ஜாக்கிங்

கோபன்ஹோகன் நகர இதயநோய் பிரிவு, 20 முதல் 93 வயதிற்குள் உள்ள 20000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் செய்த ஆய்வில், ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் ஜாக்கிங் செய்தாலே போதும் உங்களுடைய வாழ்நாளில் 6 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜாக்கிங் செய்வதல் ஆக்ஸிஜன் உடலில் அதிகளவு சேருவது மற்றும் இரத்தம் அழுத்தம் குறைவது என பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனினும், உடல் ரீதியாக செய்யும் செயல்பாடுகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தை பலப்படுத்துவதால், இதயத்தால் குறைந்த முயற்சியில் அதிக இரத்தத்தை உந்தி தள்ள முடிகிறது. இதனால் தமனிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். மேலும் வேகமாக நடப்பதும் கூட ஜாக்கிங் போன்றே பலன் தரும் என்பதால் முயற்சி செய்தால் எல்லாம் 'நடக்கும்'.

தயிரை அனுபவியுங்கள்

தயிரை அனுபவியுங்கள்

ஒரு நாளைக்கு ஒரு சிறு கோப்பை தயிரை உள்ளே தள்ளுவதன் மூலம், உங்களுக்கு இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு 3 மடங்கு குறைகிறது என்று அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தினர் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாகவே கிடைக்கும் கால்சியம், இரத்த நாளங்களை நெகிழ்ந்து கொடுக்க வைப்பதால், அவை சற்றே விரிவடைந்து, இரத்த அழுத்தம் குறைவாக பராமரிக்கப்பட உதவுகின்றன.

ஒரு நாளைக்கு 120 கிராம் அளவிற்கு தயிரை சாப்பிடுபவர்களுக்கு, 15 ஆண்டு காலத்திற்கு சுமார் 31 சதவிகித அளவு உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

வாழ வைக்கும் வாழை!

வாழ வைக்கும் வாழை!

பொட்டாசியம் நிறைந்த உணவான வாழைப்பழத்தை சாப்பிடுவதாலும் மற்றும் உப்பின் அளவை குறைப்பதாலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற ஒரு புதிய ஆய்வு முடிவு பிரிட்டிஷ் ஆன்லைன் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.

உடலில் உள்ள நீர்மங்களின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்ய மிகவும் அவசியமான சத்தாக பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் இந்த சத்து மிகவும் நிரம்பியுள்ளது.

உப்பை குறையுங்கள்

உப்பை குறையுங்கள்

நீர்மங்களிலிருந்து வரும் உப்பு, இரத்த நாளங்களின் அளவையும், அழுத்தத்தையும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நீங்கள் உப்பை எண்ணி மட்டும் வருத்தப்பட்டு பயனில்லை - பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிஸ்கட்டுகள், சிற்றுண்டி தானியங்கள், துரித உணவுகள் மற்றும் உடனடி உணவுகளில் தான் நாம் சாப்பிடும் உப்பில் 80 சதவிகிதம் உள்ளது என்று இரத்த அழுத்த அமைப்பு தெரிவிக்கிறது. 100 கிராமுக்கு 1.5 கிராம் உப்பு இருந்தால் அது மிகவும் அதிகம். ஆனால் 100 கிராமுக்கு 0.3 கிராம் இருந்தால் அது குறைவு. இவ்வாறு உப்பின் அளவு குறிப்பிடப்பட்டுள்ள லேபிள்களை கவனியுங்கள்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நமது உடல் எடையில் சில கிலோக்களை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்க முடியும் என்பதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அதிகபட்ச எடையுடன் இருந்தால், அதற்கேற்ப உங்களுடைய இதயம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

புகை நமக்குப் பகை

புகை நமக்குப் பகை

பல்வேறு விளம்பரங்களில் வந்தாலும் புகைப்பிடிப்பவர்கள் புகையுடன் சேர்த்து வாழ்க்கையையும் கைவிட்டுக் கொண்டுள்ளனர். சிகரெட்களிலுள்ள நிக்4கோடின் உடலிலுள்ள அட்ரீனலினை தூண்டுவதால், இதயம் வேகமாக துடிக்கத் தொடங்குகிறது. இதனால் வேகமாக இயங்கும் கட்டாயத்திற்கு உங்களுடைய இதயம் தள்ளப்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

குறைவான வேலை செய்யவும்

குறைவான வேலை செய்யவும்

அலுவலகங்களில் தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்வதால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் 14 சதவிகிதம் அதிகரிப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர் கண்டறிந்துள்ளனர். இந்த அபாயம் ஓவர்டைம் செய்யும் போது மேலும் அதிகரிக்கிறது. 40 மணிநேரம் வேலை செய்பவர்களை விட, 51 மணிநேரம் தொடர்ந்து அளவிற்கு வேலை செய்து கொண்டே இருந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வர 29 சதவிகிம் அதிக வாய்ப்புகள் வர உள்ளன. ஓவர்டைம் வேலை செய்வதால் உடற்பயிற்சிகள் செய்யவோ அல்லது ஆரோக்கியமாக சாப்பிடவோ முடிவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே, போதுமான நேரத்திற்கு ஓய்வு எடுக்கும் வகையில் உங்கள் கைகளில் உள்ள கருவிகளை ஓரமாக வையுங்கள் மற்றும் மாலை வேளைகளில் ஆரோக்கியமான உணவை சாப்பிடத் தொடங்குங்கள். நீங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் செய்தியை உங்களுடைய கணினியில் செய்து வையுங்கள்.

குறட்டைக்கு தேவை உதவி

குறட்டைக்கு தேவை உதவி

மிகவும் சத்தமாகவும் மற்றும் கட்டுப்படுத்த முடியாமலும் குறட்டை விடுவது தூக்கத்தை முழுமையாக தொந்தரவு செய்யும் விஷயமாகும். இந்த வகையில் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அந்த வயதையோ அல்லது பொதுவான ஆரோக்கியமோ அடைய முடியாதவர்களாகவே உள்ளார்கள். ஆல்கஹால் மற்றும் சிகரெட்களை தவிர்ப்பதும், எடையை குறைப்பதும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

காபி வேண்டாம்

காபி வேண்டாம்

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் செய்த ஆய்வு, 500 மில்லி கிராமிற்கும் அதிகமான அல்லது 3 கோப்பை காபி குடித்தால் போதும், இரத்த அழுத்தம் 3 புள்ளிகள் உயருகிறது என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த விளைவு படுக்கைக்கு செல்லும் வரையிலும் இருக்கும்.

காப்ஃபைன் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை இறுக்கி விடுவதால், அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து விடுகின்றன.

பீட்ரூட் காட்டும் ரூட்

பீட்ரூட் காட்டும் ரூட்

உயர் இரத்த அழுத்தம் பற்றிய ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 250 மில்லி பீட்ரூட் சாற்றை குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை 7 சதவிகித அளவிற்கு குறைக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் இயற்கையாகவே அதிகமாக இருக்கும் நைட்ரேட்டின் காரணமாக இந்த விளைவு ஏற்படுவதாக கருதப்படுகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கீரைகள் போன்ற பிற சத்தான உணவுகளை சாப்பிடுவதும் உங்களுக்கு உதவக் கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips To Manage High BP Without Pills

Hypertension on the high? Seven in 10 adults are at a greater risk of strokeor heart attack because their blood pressure is too high. Desk jobs, lack of exercise and eating salty fast foods have contributed to the problem, even among the young. Here are top 10 tips to manage high bp without pills.
Desktop Bottom Promotion