For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகப்படியான கொலஸ்ட்ரால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்குமாம்!!!

By Boopathi Lakshmanan
|

சுகாதாரம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு காரணமான விஷமியாக அதிக அளவு கொழுப்பு உள்ளது. இப்பொழுது இந்த அதிக அளவு கொழுப்பைப் பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதிக அளவு கொழுப்பு மார்பக புற்றுநோய் வளரவும், பரவவும் காரணமாக இருக்கும் என்று IANS-ன் அறிக்கை தெரிவிக்கிறது. ட்யூக்கில் உள்ள மருந்தாக்கியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் துறையினரின் (Department of Pharmacology and Cancer Biology) கருத்துப்படி, ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் போல செயல்படும் கொழுப்பின் துணைப் பொருள் ஒன்று பெண்களுக்கு மார்பாக புற்றுநோய் வளரவும், பரவவும் உதவி செய்கிறது.

YOU MIGHT ALSO BE INTERESTED TO READ: Ways To Control High Uric Acid

'உடல் பருமனுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதிலும், குறிப்பாக இது மார்பக புற்றுநோயுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருப்பது அறியப்பட்டிருந்தாலும், அதை சரி செய்வதற்கான வழிகள் இன்னமும் கண்டறியப்படவில்லை' என்று ட்யூக்கில் உள்ள மருந்தாக்கியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் துறையின் தலைவர் மற்றும் மூத்த எழுத்தாளர் டொனால்டு மக்டோனல் குறிப்பிடுகிறார். 'இப்பொழுது நாம் கண்டறிந்திருப்பது ஒரு மூலக்கூறு தான் - கொழுப்பு இல்லை, ஆனால் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோனைப் போல வளர்ச்சிதை மாற்றத்தால் அபரிதமாக உருவாகும் தன்மை கொண்ட 27HC என்ற பொருள், தானாகவே புற்றுநோய் வளர்வதை ஊக்குவிக்கும்' என்று மக்டோனல் குறிப்பிட்டுள்ளார்.

femalefirst.co.uk என்ற இணைய தளம் அதிகமான கொழுப்புக்கும், மார்பக புற்றுநோய்க்கும் உறுதியான தொடர்பு உள்ளது, அதுவும் குறிப்பாக மாதவிடாய் வரும் பெண்களுக்கு என்று குறிப்பிடுகிறது. 75% பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஊட்டி வளர்க்கும் ஹார்மோனாக ஈஸ்ட்ரோஜன் உள்ளது. மக்டோனல் ஆய்வகத்தின் முந்தைய முதன்மையான கண்டுபிடிப்புகளில், 27-ஹைட்ராக்ஸி கொலஸ்ட்ரால் இதே போலவே மிருகங்களிலும் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கே அதிக கொழுப்பிற்கு காரணமாக சில பொதுவான காரணங்கள் தரப்பட்டுள்ளன. இது உங்கள் கொழுப்புகளை கட்டுப்படுத்தவும் மற்றும் அதன் மூலம் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தவிர்க்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

அதிகபட்சமான கொழுப்பு உருவாக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உணவு முறை உள்ளது. மிகவும் தெவிட்டக் கூடிய கொழுப்புகள், மாறுபக்க கொழுப்பு மற்றும் பிற கொழுப்புகளை சாப்பிடுவது அதிகபட்சமான கொழுப்பு உங்கள் உடலில் உருவாக காரணமாக உள்ளது. எனவே, உங்கள் உடலில் அதிகளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து, அதை சரிவிகித உணவாக சாப்பிடத் தொடங்குங்கள்.

உடல் பருமன்

உடல் பருமன்

அதிகளவு கொழுப்பை உருவாக்க காரணமாகவும், அதன் பின்னணியாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரவும் உடல் பருமன் ஒரு காரணமாக உள்ளது. உங்கள் எடையைக் குறைத்து, உடல் நிறை குறையீட்டு எண்ணை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரவும். இதை செய்வதன் மூலமாகவே அதிகபட்ச கொழுப்புகளை உங்களால் குறைக்க முடியும்.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் அதிகம் சாப்பிடும் உணவுகளாகவே இந்த ஜங்க் உணவுகள் உள்ளன. இந்த ஜங்க் உணவுகள் உங்கள் சுவை நரம்புகளை திருப்திப்படுத்தலாம், ஆனால் உடலை கெடுத்து விடக் கூடியவைகளாக உள்ளன. எனவே, அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் உங்களுக்கு அதிகளவு கொழுப்புகள் உருவாவதை தவிர்க்கவும், பெண்களை மார்பக புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க முடியும்.

மரபணு

மரபணு

பெரும்பாலானவர்களின் பிரச்சனைகளில் அதிகளவு கொழுப்பிற்கும், பெண்களின் மார்பக புற்றுநோய்க்கும் மரபணு ரீதியான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில், உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கை முறையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொழுப்பைக் குறைப்பதைத் தவிர நீங்கள் செய்ய வேண்டியது வேறொன்றும் இல்லை.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

உங்களுடைய வாழ்க்கை முறை என்பது உங்கள் வாழ்க்கை மற்றும் அதை எப்படி வாழ்கிறீர்கள் என்பதையே குறிக்கும். உங்கள் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். உணவுப் பழக்கங்களிலும், உடலுழைப்பிலும் மற்றும் தொடர்ந்து உடலைப் பரிசோதிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள், அதன் மூலம் அதிகளவு கொழுப்பு மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோய் ஆகிய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

குறைவான உடற்பயிற்சி செய்தல்

குறைவான உடற்பயிற்சி செய்தல்

உடலுழைப்பின் அளவு குறைவதும், உடலுழைப்பு இல்லாமல் இருப்பதும் அதிகளவு கொழுப்பு உடலில் சேருவதில் தான் முடியும். அதிகளவு கொழுப்பு உடலில் சேரும் போது, அது பெண்களுக்கு மார்பக புற்றுநோயை வரவழைக்கும் வாசலை திறந்து விடும். குறிப்பாக, நீங்கள் முன்சார்பு காரணங்களுடன் இருக்கும் பொழுது.

பழக்கங்கள்

பழக்கங்கள்

அதிகளவு கொழுப்பை உருவாக்கி ஆபத்தை தேடுவதில் உங்களுடைய பழக்கங்களுக்கும் பங்குண்டு. 'மோசமான கொழுப்பு' என்று கருதப்படும் LDL கொழுப்பை புகைப்பழக்கத்தால் உருவாக்குகிறோம். ஆல்கஹாலை அதிகளவில் குடீப்பதன் காரணமாக LDL கொழுப்பு அதிகரிக்கவும், HDL கொழுப்பு குறைந்தும் போய்விடும். அதிகளவு கொழுப்பை குறைக்க விரும்பினால், உங்கள் பழக்கங்களை சற்றே ஆரோக்கியமானதாக பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

High Cholesterol Leads To Breast Cancer

Here are some common reasons which contribute to high cholesterol. Knowing this will help you control your cholesterol and thereby preventing risks of high cholesterol and breast cancer in women.
Desktop Bottom Promotion