For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செம்பருத்தி இலைகளின் மருத்துவ பயன்கள்

By Super
|

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும். பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும். தென் கொரியா, மலேசியா மற்றும் ஹைட்டி குடியரசின் தேசிய பூவாக செம்பருத்தி உள்ளது. இந்தியாவில் புனிதமான மலராக கருதப்படும் இது, பல்வேறு சடங்குகளிலும், கடவுளுக்கு காணிக்கையாகவும் வழங்கப்படும் பெருமை பெற்றது. செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும். இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவ முறையில் பல்வேறு வலிகள் மற்றும் நோய்களை தீர்ப்பதற்காக செம்பருத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது. அலங்கார காணிக்கைகள் ஆகவும், தோட்டங்கள் மற்றும் பூங்காவின் நிலங்களை அழகுபடுத்தும் போதும் செம்பருத்தி பயன்படுகிறது. செம்பருத்தி இலைகள் பல்வேறு வழிமுறைகளில், மாறுபட்ட பயன்பாடுகளுக்காக செயல்முறைப்படுத்தப் பட்டு வருகின்றன. மெக்ஸிகன் வகை உணவுகளை அலங்காரம் செய்ய காய்ந்த செம்பருத்தி இலைகள் பயன்படுகின்றன. செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.

செம்பருத்தி இலைகளின் மருத்துவ பயன்பாடுகள் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2008-ம் ஆண்டின் USDA ஆய்வில் செம்பருத்தி தேநீரை அருந்துவதன் மூலம் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பருத்தியில் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்கள் அதிகமாக இருப்பதால், மூப்பினை தள்ளிப் போக வைக்கும் சக்தி அவற்றிற்கு உள்ளன. செம்பருத்தி இலையைக் கொண்டு தேநீர் சாப்பிடுவது நமக்கு உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும்.

செம்பருத்தியின் மருத்துவ குணங்களில் சில இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளன

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்தலை தடுத்தல்

முடி உதிர்தலை தடுத்தல்

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது. அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

தேநீர்

தேநீர்

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது. சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

காயங்களை குணப்படுத்துதல்

காயங்களை குணப்படுத்துதல்

திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது. புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

கொழுப்பை குறைத்தல்

கொழுப்பை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீர் LDL கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.

இருமல் மற்றும் ஜலதோஷம்

இருமல் மற்றும் ஜலதோஷம்

செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும். செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

மாதவிடாயை முறைப்படுத்துதல்

மாதவிடாயை முறைப்படுத்துதல்

குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலை தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல்

மூப்பினை தள்ளிப் போடுதல்

செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன. இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medicinal Benefits Of Hibiscus

Hibiscus is a commonly seen flower in many places across India. Commonly known as the red flower, hibiscus flowers are easy to plant and grow in any climate. There are many hibiscus flowers of different colours like red or pink. However, red hibiscus flowers have been popularised as a healthy flower and is also used as a medicine in many Ayurvedic treatments.
Story first published: Monday, November 4, 2013, 18:04 [IST]
Desktop Bottom Promotion