For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாட பழக்கவழக்கத்தில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

By Super
|

பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை பொறுத்து தான்.ஒருவர் மிகவும் மெலிவாக இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரிஅவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால்வலிமையைகவும், அழகாகவும் தோன்றும். முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும்பிரச்சனை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள்தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.

திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதா? உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்பபாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம்மற்றும் வாழ்க்கை முறையே பிராதன காரணமாக பார்க்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும்காரியங்களில் நம் உடல மெட்டபாலிசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனாமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம்

தூக்கம்

போதிய தூக்கம் கிடைக்கவில்லையா, அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகஉள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால்அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்

மதுபானம்

பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மனஅழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப் போக்கில் எடையை அதிகரிக்கச்செய்யும்.

காலை உணவு

காலை உணவு

மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவுநன்றாக தூங்கியப் பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிப்பொருள் வேண்டாமா? காலைசாப்பிடவில்லை யென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.

அளவில்லாமல் சாப்பிடுவது

அளவில்லாமல் சாப்பிடுவது

அதிகமாக சாப்பாடு பரிமாரிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிடவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும். "உணவே மருந்து"

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

கன்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சிபோன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து

இரவு விருந்து

இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர்,அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.

கடை

கடை

கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான்முதலில் தேர்ந்தேடுப்போம். அதற்கு பதில் வீட்டிலயே சாப்பிட்டு விட்டுச் சென்றால் பசிசிறிதளவு அடங்கும். கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில்ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும்.

ஜங்க் புட்

ஜங்க் புட்

விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சென்ற இடத்தில் பசி எடுத்தால்அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும்உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தேசாண்ட்விச், பச்சை காரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவதை எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு உணவு

தேவையான அளவு உணவு

வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பல பேரின் வழக்கம். இதனால்கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு நோ!!!!

கலோரி உணவுகளுக்கு நோ!!!!

ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படிஇருப்பதில்லை. எந்தளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்றஉணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்

சாண்ட்விச்

கடுகு அல்லது கொழுப்புச் சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரிகட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன்ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது

வார நாட்களில் உணவு கட்டுப்பாட்டில் இருந்து, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டைநிவர்த்தி செய்கிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடுவீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு

செயற்கை இனிப்பு

செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது நாவின் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது.

செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது. கீழ்கண்ட திறவுச் சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிளில் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள்:

சக்கரின் (Saccharin), அஸ்பர்டேம் (Aspartame), சுக்ரலோஸ்(Sucralose), நியோடேம்(Neotame), ஏஸ்சுல்பேம் (Acesulfame) போன்றவை.

உணவு பாக்கெட்

உணவு பாக்கெட்

உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்

ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை விட 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம். இதுவே ஏழு அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம்.

இதில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்ள நேரிடும். மேலும் இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everyday habits that adds to your weight

If you are wondering why you have been packing on the kilos all of a sudden or why over time it has been difficult to manage your weight, it is probably due to certain dietary and lifestyle choices that are causing this.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more