For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் லவங்கம்.. கொஞ்சம் சிவப்பு முள்ளங்கி அவ்வப்போது... காளான்களை மறக்க வேண்டாம்!

By Super
|

ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் நல்ல பழக்கம் தற்போது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பரவி வருகிறது. அதே சமயம் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் நமக்கு பிடித்தமான மற்றும் தேவையான உணவுகளைக் கூட விலக்கும் அளவுக்கு சென்றால், அது ஆர்வக்கோளாறு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். பின்பு ‘கிணறு வெட்ட பூதம்' கதை தான். உண்மையில் ‘நல்ல உணவு முறை' என்பது பலவற்றை ஒட்டுமொத்தமாக விலக்குவது அல்ல. எந்த அளவுக்கு விரிவான உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதும் கூட. அதாவது நம் உடலுக்கு தேவையான பல்வேறு நுண்சத்துக்கள், வெவ்வேறு வகையான உணவுப்பொருட்களில் ஒளிந்து கிடக்கின்றன.

ஆகவே நாம் முயற்சி எடுத்து அவற்றை நமது சாப்பாட்டு மேஜையில் இடம் பெற வைக்க வேண்டும். அதில் தான் நமது சாமர்த்தியத்தை காட்ட வேண்டுமே தவிர, உணவை குறைத்து உடலை வாட்டுவதில் அல்ல. இப்படி சொல்வது ‘லாரென் ஷ்மிட்' எனும் ஒரு பிரபலமான டயட்டிஷியன். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘ஹெல்தி ஈட்டிங் அன்ட் டிரெய்னிங்' எனும் ஆரோக்கிய உணவு முறை பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார்.

ஏதோ விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறதா உங்களுக்கு? அதில் சந்தேகமே வேண்டாம். இந்த ‘லாரென் ஷ்மிட்' என்ன தான் பரிந்துரைக்கிறார் என்பதை முயற்சித்துப் பாருங்களேன். உணவுக்காக நாம் என்னென்ன பொருட்களை வாங்குகிறோம், அதில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதிலிருந்து இந்த ஆலோசனைகள் துவங்குகின்றன. மேலும், மிக எளிமையான தயாரிப்பு முறைகள் மற்றும் பரிமாறும் முறைகளை பரிந்துரைக்கிறார். அதுவும் மிக எளிமையான இந்த ஆலோசனைகளை சமைக்கத் தெரியாதவர்கள் கூட பின்பற்ற முடியும் என்பது தான் விசேஷமே. அவை யாவும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பின்பற்றத் தொடங்கினால் நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுவது மட்டுமல்ல, நாக்கை கட்டிப் போட்டு, உடலை பட்டினி போட்டு வாட்டும் ‘டயட்டிங்' தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பாட்டுத் தட்டில் இடம் பெறும் உணவுகளின் விகிதாசாரத்தை உடனே மாற்றுங்கள்!

சாப்பாட்டுத் தட்டில் இடம் பெறும் உணவுகளின் விகிதாசாரத்தை உடனே மாற்றுங்கள்!

இறைச்சி, காய்கறிகள் மற்றும் ஸ்டார்ச் (மாவுப்பொருள்) ஆகிய மூன்றும் உணவில் இடம் பெற வேண்டும் என்றால், அதன் பொருள் இறைச்சிப் பண்டங்களை அதிகம் அடுக்கி சாப்பிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அப்படி ஒரு தவறான புரிதல் உள்ளது. உண்மையில் சிறிதளவு இறைச்சி உணவு மற்றும் அதிகமான காய்கறி உணவு என்பது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். எனவே இறைச்சியை குறைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். உணவு அதே அளவு தான், ஆனால் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்திருக்க வேண்டும் என்பது தான் சாராம்சம்.

வால்நட் பருப்புகள் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

வால்நட் பருப்புகள் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

ஒவ்வொரு முறையும் வால்நட் பருப்புகள் சாப்பிடும் போது, உடலுக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு எண்ணெய்கள் (நல்ல கொழுப்புக்கள்) கிடைக்கின்றன. இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியவை. வால்நட் பருப்புகளை பச்சையாகவோ அல்லது பொடியாக உதிர்த்து இனிப்புகளின் மீது தூவியோ உட்கொள்ளலாம். வேண்டுமெனில் நறுக்கப்பட்ட துண்டுகளாக வாங்கி சிக்கன் அல்லது மீன் உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாப்பாட்டு விஷயத்திலும் சாகச ரசனையை கடைப்பிடியுங்கள்!

சாப்பாட்டு விஷயத்திலும் சாகச ரசனையை கடைப்பிடியுங்கள்!

எப்போதும் சாப்பிட்டதையே சாப்பிட்டுக் கொண்டு, வாங்கியதையே வாங்கிக் கொண்டிருந்தால் சுவாரசியமும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. மார்க்கெட்டில் புதிதாக தென்படும் காய்கறிகள், வித்தியாசமான அரிதான பழ வகைகள் மற்றும் வகை வகையான கடல் உணவு வகைகள் போன்றவற்றை வாங்கி சுவைத்துப் பாருங்கள். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் உலகில் எங்கோ விளையும் பழங்கள் கூட கிடைப்பது ஒரு அற்புதமான விஷயம் இல்லையா. எனவே அனைத்து வகையான சத்துப்பண்டங்களையும் முயற்சித்துப் பாருங்கள்.

கீரைகளை எப்படியாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கீரைகளை எப்படியாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

சுத்தமான பச்சைக் கீரையை எந்த உணவோடும் சேர்த்துக் கொள்ளலாம். லெட்யூஸ் போன்றவற்றை பர்கரில் வைத்து சாப்பிடுகிறோம் இல்லையா. அதே போல் தான், பிரட் சாண்ட்விச், தோசை மற்றும் அடை போன்றும் எதில் வேண்டுமானாலும் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். கீரையில் உள்ள மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் பற்றி ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். பல்வேறு வைட்டமின் சத்துக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் (இரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்வேதிச்சத்து) போன்றவை கீரையில் அடங்கியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கீரைக்கு உண்டு.

 கொஞ்சம் ‘லவங்கம்’

கொஞ்சம் ‘லவங்கம்’

ஏதோ ‘மசாலா' சம்பந்தப்பட்ட ஒரு வஸ்து என்று நாம் கருதும் இந்த ‘லவங்கம்', உடலுக்கு தேவையான அற்புதமான சத்துப்பொருட்களை கொண்டிருக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகமாக இருப்பதோடு, காய்ச்சல் மற்றும் உடல் ரணம் போன்றவற்றையும் குணமாக்கும் இயல்பு இதற்குண்டு. ஆகவே ஓட்ஸ், கஞ்சி, டோஸ்ட் மற்றும் தேனீர் போன்ற காலை நேர உணவுகளோடு இந்த லவங்கத்தை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவையை கூட்டுவது தவிர கலோரியில் எந்த மாற்றத்தையும் இது ஏற்படுத்தாது.

சாப்பாட்டிற்கு தயாராய் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்களை வாங்கலாமே!

சாப்பாட்டிற்கு தயாராய் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்களை வாங்கலாமே!

முன்பெல்லாம் இந்திய நகரங்களில் இது போன்ற வசதிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது நவீன சூப்பர் மார்க்கெட்டுகளில் உடனே அப்படியே பயன்படுத்துவற்கு வசதியாக ஏற்கனவே கழுவி சுத்தப்படுத்தப்பட்ட, வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாக இருந்தாலும், இந்த முறையில் காய்கறிகள் பழங்களை வாங்கிக் கொள்வது சிறந்தது. அன்னாசி, தர்பூசணி, திராட்சை போன்றவை சாப்பிடுவதற்கு தயாராக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதால், மதிய உணவோடு சேர்த்து இவற்றை எடுத்துச் செல்லலாம். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். துண்டுகளாக்கப்பட்டு விற்கப்படும் காய்கறிகள் இரவு உணவு தயாரிப்பை சுலபமாக்குகின்றன.

கொஞ்சம் சிவப்பு முள்ளங்கி அவ்வப்போது!

கொஞ்சம் சிவப்பு முள்ளங்கி அவ்வப்போது!

உருளைக்கிழங்கு மசியல் செய்கிறீர்களா? அதில் ஏற்கனவே வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இருந்தாலும் கொஞ்சம் சிவப்பு முள்ளங்கியை அதில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிகமாக வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ போன்றவை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் முள்ளங்கியின் மேல் பாகத்தில் உள்ள கீரைப்பகுதியை தூக்கி எறிந்து விடாமல், அதையும் இந்த கலவையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் சுண்ணாம்பு, தாமிரம் மற்றும் இரும்பு போன்ற கனிமச்சத்துகள் கிடைப்பது உறுதி.

காளான்களை மறக்க வேண்டாம்!

காளான்களை மறக்க வேண்டாம்!

அடுத்த முறை மாட்டிறைச்சியை வதக்கி சமைக்கும் போது, அதில் இறைச்சியின் அளவை குறைத்து ஒரு கைப்பிடி அளவு காளான்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இது இறைச்சியில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைக்க உதவும். மேலும், மற்ற உணவுகளில் அரிதாய் கிடைக்கும் வைட்டமின் டி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் போன்றவையும் காளான்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது. காளான்களை ஆலிவ் எண்ணெயில் வதக்கி எடுத்து, சீஸ் பிட்சா, டோஸ்ட் மற்றும் நம் நாட்டு உணவான ஊத்தாப்பம் போன்றவற்றில் தூவியும் சாப்பிடலாம்.

சாஸ் மற்றும் சட்னி வகைகள்!

சாஸ் மற்றும் சட்னி வகைகள்!

பச்சைக் காய்கறிகள் மற்றும் சப்பென்ற கீரைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு சுவாரசியமாக இல்லையா? இருக்கவே இருக்கிறது சாஸ், சட்னி போன்ற தயாரிப்புகள். பெரும்பாலும் சட்னி என்றாலே இட்லி தோசைக்கான தேங்காய் சட்னி, சாஸ் என்றாலே ஃப்ரைட் ரைஸ் தக்காளி-மிளகாய் சாஸ் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் எல்லா விதமான சத்து நிறைந்த காய்கள், பட்டாணி, கீரை வகைகள் போன்றவற்றிலிருந்தும் இவ்விதமான சட்னி வகைகளை தயாரித்துக் கொள்ளலாம். இதில் ஒரு வசதி என்னவென்றால் எதை வேண்டுமானாலும், இதில் தோய்த்தோ அல்லது பிசைந்தோ சாப்பிட முடியும் என்பது தான். தேவைக்கேற்ப அவ்வப்போது மிக்ஸியில் இந்த சட்னி வகைகளை புதிதாக தயாரித்துக் கொள்வது நல்லது. பிஸ்கட், பிரட் போன்றவற்றோடு இந்த சட்னி வகைகளை கொடுத்தால் சுவைக்கும் ஆயிற்று - சத்துக்கும் ஆயிற்று. வெறும் காயையும், கீரையையும் பார்த்தால் ஏற்படுவதோ தயக்கம்! அதையே வண்ணமயமான சாந்து ரூபத்தில் பார்த்தால் நாவில் உமிழ்நீர்! அவ்வளவு தான்.

கேரட்களை முழுதாக சமையுங்கள்!

கேரட்களை முழுதாக சமையுங்கள்!

காய்களில் உள்ள சத்து அழியாதவாறு சமைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று கேரட்களை நறுக்காமல் அப்படியே முழுதாக சமைப்பது. மைக்ரோவேவ் அல்லது தவாவில் துண்டுகளாக்கி சமைக்காமல், அப்படியே சமைப்பது கேரட்டில் உள்ள சத்துகளின் சாரத்தை இன்னும் கூட்டுகிறது. இந்த உண்மை இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கேரட்டை துண்டுகளாக வெட்டப்படும் போது அதன் வெளிப்புற அடுக்குகள் திறக்கப்பட்டுவிடுவதால், அவற்றின் வழியே சத்துக்கள் வெளியேறிவிடுவதாக சொல்லப்படுகிறது.

ஆர்கானிக் காய்கறிகள் பழங்களுக்கு மாறுங்கள்!

ஆர்கானிக் காய்கறிகள் பழங்களுக்கு மாறுங்கள்!

ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருட்களால் உண்மையிலேயே ஆரோக்கிய பலன் இருக்கிறதா என்பது பற்றி இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் ஆர்கானிக் முறையில் விளையும் சில குறிப்பிட்ட காய்கள் மற்றும் பழங்களுக்கு (ஆப்பிள், ஸ்டாபெர்ரி மற்றும் தக்காளி) கூடுதல் சுவை இருப்பது உண்மை. எனவே இவற்றை தேடி வாங்கிக் கொள்வது நல்லது. அதே போல் விவசாய சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும். சாதாரணமாக மார்க்கெட்டில் கிடைக்கும் தக்காளியை கடிக்கும் போது ஏற்படும் முகச்சுழிப்பு, அதுவே ஆர்கானிக் தோட்ட தக்காளியை கடிக்கும் போது வியப்பான புன்னகையாக வெளிப்படும்.

ஆலிவ் ஆயில் எனும் அற்புதம்!

ஆலிவ் ஆயில் எனும் அற்புதம்!

ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் விரும்பினால் கட்டாயம் ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்துங்கள். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை உடலில் அதிகரிக்கும் அற்புதமான சத்துக்கள் இந்த எண்ணெயில் அடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் செரிமான உறுப்புகளுக்கு இதமான தன்மையை இது கொண்டிருக்கிறது. வயிற்றுப்புண் மற்றும் பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகாமல் தடுக்கும் சக்தியும் இதற்குண்டு. விலை சற்று அதிகம் என்றாலும் குறிப்பாக ‘எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய்' நமது ஆரோக்கியத்திற்கான மூலதனம் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Baby Steps to Better Nutrition

Most of us think that making a commitment to healthier eating means cutting out our favorite foods and depriving ourselves of the stuff we love most. Actually, the opposite is true.
Desktop Bottom Promotion