For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!

By Maha
|

Mosquito
தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.

ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.

எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.

மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.

பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?

* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.

* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.

* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.

English summary

Papaya leaf juice helps fight dengue fever | டெங்குவுக்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே!!!

The juice of papaya leaf has been found to be useful in the treatment of dengue fever. Few recent studies have shown the effect of papaya leaf juice in curing dengue fever. A recent study done on five dengue patients by Indian Institute of Forest Management has shown some interesting observations.
Desktop Bottom Promotion