For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

By Maha
|

Ear
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதாலும், மூக்கை சிந்துவதாலுமே வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காது வலி வந்தால் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த்தொ‌ற்று தான் ஏ‌ற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?

1. காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

2. தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

3. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

4. மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

5. கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்க, காது வலி பறந்தே போகும்.

English summary

home remedies for ear ache | காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...

Earache is a common ailment found in children rather than adults. It is a troublesome condition and occurs more in the night time. some causes for earache are common cold, pressure differences, ear-nose-throat problems, etc. this can be treated using the natural home remedies.
Story first published: Wednesday, May 30, 2012, 14:31 [IST]
Desktop Bottom Promotion