Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2 மரணங்கள் மூலம் இந்தியாவில் கணக்கைத் தொடங்கியுள்ள H3N2 வைரஸ்...அதன் அறிகுறிகள் என்ன தெரியுமா?
கொரோனா உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்புகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பல நாடுகள் இப்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வர முடியாமல் தத்தளிக்கின்றன.
கொரோனா உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்புகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பல நாடுகள் இப்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வர முடியாமல் தத்தளிக்கின்றன. இந்தியாவில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியிருந்தாலும் இப்போதும் கொரோனா குறித்த அச்சம் அனைத்து மக்களின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.

கொரோனா அச்சமே முழுதாக விலகாத நிலையில் H3N2 வைரஸால் இந்தியாவில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மக்களின் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு மரணம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.

H3N2 என்றால் என்ன?
H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் பல வகைகளில் ஒன்றாகும். ஆதாரங்களின்படி, இந்தியாவில் இதுவரை மொத்தம் 90 H3N2 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளன. H3N2 தவிர, H1N1 இன்ஃப்ளூயன்ஸாவின் எட்டு வழக்குகளும் நாட்டில் பதிவாகியுள்ளன.

இரண்டு மரணங்கள்
H3N2 இன்ஃப்ளூயன்ஸா காரணமாக இந்தியாவில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், இரண்டாவது மரணம் ஹரியானாவில் இருந்தும் பதிவாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மிதமான வேகத்தில் பரவி வந்த H3N2 அதன் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணாமாக உள்ளது என்று ICMR விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பருவகால மாற்றம்
பருவகால மாற்றம் மக்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை விளைவிக்கிறது, இது வைரஸ் தொற்று மற்றும் மார்பு நெரிசலைப் புகாரளிக்கும் நோயாளிகளின் அதிகரிப்பே இதற்கு சான்றாகும். மாசுபாட்டின் விளைவாக வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

H3N2-ன் அறிகுறிகள்
H3N2 இன் காய்ச்சல் அறிகுறிகள் மற்ற பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுடன் ஒப்பிடத்தக்கவை. இவை மற்ற வைரஸ் தொற்றின் அறிகுறிகளை ஒத்திருந்தாலும், இந்த அறிகுறிகள் இருந்தால் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது.
- உடல் வலி
- குளிர் காய்ச்சல்
- சோர்வு
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- இருமல்
- மூக்கு ஒழுகுதல் அல்லது நெரிசல்
- தொண்டை வலி
- தலைவலி

கண்டறிவது எப்படி?
ஜலதோஷம் போன்ற பிற சுவாச நோய்களைப் போலவே இந்த தொற்றால் ஏற்படும் காய்ச்சலின் சில அறிகுறிகள் உள்ளன. ஒருவருக்கு H3N2 இருக்கிறதா என்பதை அவர்களின் உடல் அறிகுறிகளைப் பார்த்து தீர்மானிக்க கடினமாக இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் H3N2-வால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா அல்லது வேறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ நிபுணரால் செய்யப்படும் ஆய்வக பரிசோதனை மட்டுமே உதவும்.

H3N2 வைரஸ் தொற்று வராமல் தடுப்பது எப்படி?
H3N2 இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க, ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசியைப் பெறுவது, சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, அறிகுறிகள் இருக்கும்போது வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டியது அவசியம். எப்போதும் மாஸ்க் அணிந்திருப்பது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.



Click it and Unblock the Notifications