Latest Updates
-
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
உடம்புல இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Warning Symptoms of Vitamin D Deficiency In Tamil: உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இன்றியமையாதவை. இதில் வைட்டமின் டி சத்தானது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை செய்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த வைட்டமின் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு முக்கிய கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், தக்க வைக்கவும் உதவுகிறது.
ஆய்வு ஒன்றில், வைட்டமின் டி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக குறைப்பதோடு, தொற்றுநோயைத் தடுக்கவும், அழற்சியைக் குறைக்கவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வைட்டமின் டி எலும்புகளை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இது தவிர உடலின் பல்வேறு செயல்பாட்டிலும் இச்சத்து முக்கிய பங்காற்றுகிறது.

எனவே இந்த வைட்டமின் டி சத்தை உடலில் போதுமான அளவில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெரும்பாலும் வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து தான் பெற முடியும். ஆனால் தற்போது நிறைய பேர் ஏசியில் இருந்தே வேலை செய்வதால், வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்கிறார்கள்.
இப்படி சூரியக் கதிர்கள் உடலில் படாமல் இருந்தால், அதன் விளைவாக வைட்டமின் டி குறைபாட்டை சந்திக்க நேரிடும். இப்போது உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
தூக்கமின்மை
உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், அது ஒருவரது தூக்க முறையை பாதித்து, உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரித்துவிடும். இதன் விளைவாக மிகுதியால் உடல் சோர்வை அடிக்கடி சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்பட்டாலோ, அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தாலோ, உடலில் வைட்டமின் டி மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எலும்புகளில் வலி
வைட்டமின் டி சத்து உடலில் மிகவும் குறைவான அளவில் இருந்தால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தான் எலும்புகளில் வலி. ஏனெனில் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து உடம்பில் குறைவாக இருக்கும் போது, அது எலும்புகளில் வலி, தசை பலவீனம், எலும்புகளின் அடர்த்தி குறைவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அடிக்கடி தடுக்கி விழக்கூடும் மற்றும் நிறைய காயங்களை சந்திக்க நேரிடும்.
அடிக்கடி நோய்வாய்ப்படுவது
வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அதன் விளைவாக அடிக்கடி ஒருவர் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் நோயெர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் வைட்டமின் டி முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த வைட்டமின் டி உடலில் குறைவாக இருந்தால், பல்வேறு வகையான கிருமிகள் உடலைத் தாக்கி, அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கும். பல்வேறு ஆய்வுகளிலும், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் சளி, ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உஷாராகிக் கொள்ளுங்கள்.
மன இறுக்கம்
ஒருவருக்கு மன இறுக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் வைட்டமின் டி குறைபாடு. ஆனால் நிறைய பேருக்கு இதுக்குறித்து தெரிவதில்லை. ஆய்வுகளில் மன இறுக்கத்திற்கும், வைட்டமின் டி குறைபாட்டிற்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமுடி உதிர்வது
தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதில் வைட்டமின் டி முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், தலைமுடியின் வளர்ச்சி குறைவதோடு, அதிகளவு தலைமுடி உதிரக்கூடும். எனவே உங்களுக்கு தலைமுடி உதிர்ந்தாலோ, தலைமுடி வளராமல் இருந்தாலோ, உடலில் வைட்டமின் டி குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
வைட்டமின் டி குறைபாட்டினால் சந்திக்கும் பிற தீவிர பிரச்சனைகள்
வைட்டமின் டி குறைபாட்டினை ஒருவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும், அறிவாற்றல் குறையும், ஆஸ்துமா தீவிரமாகும், புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்ச்சியடையும். அதோடு இந்த குறைபாடு எலும்புகளின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் குறைத்துவிடும்.
யாருக்கெல்லாம் வைட்டமின் டிகுறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது?
* பெருங்குடல் அழற்சி அல்லது கிரோன் நோய் போன்ற குடல் தொடர்பான நோய்களை கொண்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் இப்பிரச்சனை உள்ளவர்களின் குடலால் வைட்டமின்களை உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக இவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது.
* உடல் பருமன் கொண்டவர்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். ஏனெனில் இவர்களின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு திசுக்கள் இந்த வைட்டமின் டி சத்தை உறிஞ்சிக் கொண்டு, இந்த வைட்டமின் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
* இது தவிர சமீபத்தில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications