Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Zakir Hussain Death: புகழ்பெற்ற தபேலா வித்துவான் ஜாகீர் உசேன் இறப்புக்கு இந்த நுரையீரல் நோய் தான் காரணமாம்...
Zakir Hussain Death: உலக புகழ்பெற்ற பழம்பெரும் தபேலா இசைக்கலைஞரான உஸ்தாத் ஜாகீர் உசேன் சான் பிரான்சிஸ்கோவில் நேற்று காலமானார். தபேலா வாசிப்பதில் வல்லவரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 73 வயதான ஜாகீர் உசேன் தபேலாவில் அனைவரையும் மயக்கும் வகையில் இசைக்கும் வல்லமை படைத்தவர்.
இவர் ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் ஆரோக்கிய பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருந்தார். அதுவும் அவர் மிகவும் மோசமான இடியோபாடிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் (Idiopathic Pulmonary Fibrosis) என்னும் நுரையீரல் நோயின் காரணமாக இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஜாகீர் உசேன் கடந்த இரண்டு வாரங்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தபேலா வித்துவான் ஜாகீர் உசேனின் உயிரைப் பறித்த இடியோபாடிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன? இந்த நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.
இடியோபாடிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் என்றால் என்ன?
இடியோபாடிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் என்பது நுரையீரல் மண்டலத்தை பாதிக்கும் ஒரு தீவிரமான நுரையீரல் நோயாகும். இந்த நோயால் நுரையீரலில் உள்ள திசுக்கள் கடினமாவதோடு, வடுக்களை ஏற்படுத்தும். மேலும் இது நுரையீரலில் உள்ள இணைப்புத்திசுக்கள் மற்றும் காற்றுப்பைகளையும் பாதிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலானது படிப்படியாக மோசமடையத் தொடங்கும். அப்போது நுரையீரலில் உள்ள திசுக்கள் இறுக்கமடைந்து, சுவாசிப்பதே கடினமாகி, தினசரி வேலையைக் கூட செய்ய முடியாத அளவில் மூச்சுத்திணறல் பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும்.
பல்மோனரி ஃபைப்ரோசிஸ் ஒருவரது உயிரைப் பறிக்கும் ஒரு மோசமான நோய். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லாததால், காலப்போக்கில் இது மோசமாகி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும். சில சமயங்களில் ஃபைப்ரோசிஸின் அளவைக் குறைக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தாலும், அவை அறிகுறிகளைக் குறைக்குமே தவிர, உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
பல்மோனரி ஃபைப்ரோசிஸ் அறிகுறிகள் என்ன?
பல்மோனரி ஃபைப்ரோசிஸின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இந்த நோய் விரைவில் ஒருவரது நிலைமையை மோசமாக்கிவிடும். இன்னும் சிலருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கி மெல்ல மெல்ல அந்த அறிகுறிகள் தீவிரமாகும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல்
* வறட்டு இருமல்
* மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
* விவரிக்க முடியாத எடை இழப்பு
* மிகுந்த தசை மற்றும் மூட்டு வலிகள்
யாருக்கு பல்மோனரி ஃபைப்ரோசிஸ் வர வாய்ப்புக்கள் உள்ளன?
பொதுவாக பல்மோனரி ஃபைப்ரோசிஸ் ஒரு நுரையீரல் நோய் என்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு இது வருவதற்கான அபாயம் அதிகமாகவே உள்ளன. அதற்காக புகைப்பிடிக்கு மட்டும் தான் இது கட்டாயம் வரும் என்று கூற முடியாது, வேறு சில காரணங்களாலும் இது வரலாம். அவை பின்வருமாறு:
* பல்மோனரி ஃபைப்ரோசிஸ் பெரும்பாலும் 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளன.
* முக்கியமாக பல்மோனரி ஃபைப்ரோசிஸ் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கும். இருப்பினும், சில ஆண்டுகளாக பெண்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
* சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான அபாயம் அதிகமாகவே உள்ளன.
* தொடர்ந்து கெமிக்கல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை சுவாசித்து வந்தால், அது நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்தும். எனவே உலோக தொழிலாளர்கள், கல் உடைப்பவர்கள், பாலிஷ் செய்பவர்கள், விவசாயிகள் போன்றோருக்கு இந்நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
* சில சமயங்களில் ஆட்டோ இம்யூன் நோய்கள், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் அல்லது வைரஸ் தொற்றுகளாலும் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் வருவதற்கான அபாயம் உள்ளன.
* புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு சிகிச்சை போன்ற கதிர்வீச்சு வெளிப்பாடும் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி பல்மோனரி ஃபைப்ரோசிஸ் வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











