Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஒரு வாரமா இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்க குடல் மோசமான நிலையில் இருக்கு-ன்னு அர்த்தம்...
Symptoms Of An Unhealthy Gut In Tamil: உடல் ஆராக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு முதலில் நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளை ஜீரணித்து, அதில் உள்ள சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு கொடுக்கும் முக்கியமான பணியை குடல் செய்து வருகிறது.
இது தவிர நமது குடலானது செரிமானம், நோயெர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே எப்படி மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு அக்கறை செலுத்துகிறோமோ, அதே அளவிலான அக்கறையை குடல் ஆரோக்கியத்தின் மீதும் செலுத்த வேண்டும்.

ஒரு நாளில் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது அப்படியே குடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டால், குடல் ஆரோக்கியமாகவும், அதுவே தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொண்டால், குடல் மோசமாகவும் பாதிக்கப்படும்.
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்பட்டால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே குடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். சரி, குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று கேட்கலாம். கீழே அந்த அறிகுறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
செரிமான பிரச்சனைகள்
குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் வெளிப்படும் அறிகுறிகளில் ஒன்று தான் செரிமான பிரச்சனைகள். அதாவது வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஒருவர் இந்த அறிகுறிகளை ஒரு வாரத்திற்கும் அதிகமாக சந்தித்து வந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மாசமாகிவிடும்.
தொடர்ச்சியான உடல் சோர்வு
இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்ற பின்னரும், பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், குடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். நமது உடலுக்கு வேண்டிய சத்துக்களை குடல் தான் உறிஞ்சுகிறது. இந்த குடல் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் மிகுநத உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.
எடையில் மாற்றங்கள்
நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடாமலேயே உடல் எடையில் மாற்றங்களை கண்டால், குடலில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. குடல் ஆரோக்கியமற்று இருந்தால், அது வளர்சிதை மாற்றத்தையும், ஹார்மோன்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் எடையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம்.
தொடர்ச்சியான சரும பிரச்சனைகள்
குடல் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் ஒன்றோடொன்று தொடர்புடையது. உங்களுக்கு முகப்பரு, சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் அழற்சி போன்றவை திடீரென்று சில நாட்களாக இருந்தால், உங்கள் குடல் ஆரோக்கியமற்று இருக்க வாய்ப்புள்ளது. குடல் பிரச்சனைகளால் தூண்டப்படும் சரும அழற்சியால், சருமத்தில் எரிச்சல், தடிப்புகள் அல்லது வெடிப்புகள் கூட ஏற்படலாம்.
மனநிலை மாற்றங்கள்
குடலும், மூளையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. சொல்லப்போனால் குடல் இரண்டாவது மூளை என்றே கூறலாம். ஏனெனில் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளானது நரம்பியக்கடத்தி உற்பத்தி மற்றும் சமிக்ஞைகளை பாதித்து, மனநிலையை பாதிக்கிறது. இதன் விளைவாக மனக் கவலை, மனச்சோர்வு, எரிச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
நாள்பட்ட வாய் துர்நாற்றம்
உங்கள் வாய் எப்போதும் நாற்றமடித்தவாறு உள்ளதா? ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் இப்படியான வாய் துர்நாற்ற பிரச்சனையை ஒருவர் சந்திக்க நேரிடும். எப்படியெனில் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் தீங்கு விளைக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. எனவே இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி நோய்த்தொற்றுகள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து, நோய்கிருமிகளை எதிர்த்து உடலுக்கு பாதுகாப்பளிப்பதில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் ஒருவர் அடிக்கடி சளி, இருமல் காய்ச்சல் அல்லது பிற நோய்த்தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டால், அவரது குடல் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவுகளை உண்பதோடு, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications