Latest Updates
-
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க
மீன் முட்டைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Fish Eggs Benefits In Tamil: அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுப் பொருள் தான் மீன். இந்த மீன்கள் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. மீன்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
எப்படி மீன்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதோ, அதேப் போல் மீன் முட்டைகளும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது என்பது தெரியுமா? ஆம், மீன்களின் முட்டைகளையும் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முக்கியமாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், மீன் முட்டைகளை சாப்பிடுவது நல்லது. மேலும் மீன்களைப் போன்றே, மீன் முட்டைகளும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மீன் முட்டைகளானது தனித்துவமான சுவையைக் கொண்டது. இதை வறுவலாக செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இப்போது மீன் முட்டைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. மூளை ஆரோக்கியம் மேம்படும்
மீன் முட்டைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது மிகவும் முக்கியமான கொழுப்புக்களாகும். இந்த வகை கொழுப்புக்களை உடலால் உற்பத்தி செய்ய முடியாது. இந்த கொழுப்புக்கள் மீன்கள் மற்றும் மீன் முட்டைகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த கொழுப்புக்களானது மூளையின் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. எனவே மீன் முட்டைகளை உட்கொள்ளும் போது நினைவாற்றல் மேம்படும் மற்றும் மூளை சுறுசுறுப்பாகவும் செயல்படும்.
2. கண் பார்வை மேம்படும்
DHA மற்றும் EPA போன்றவை குழந்தைகளின் பார்வை வளர்ச்சிக்கும், கண்களின் செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இது மீன்கள் மற்றும் அதன் முட்டைகளில் அதிகம் உள்ளன. யாருடைய உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் குறைவாக உள்ளதோ, அவர்கள் கண்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதனால் தான் மீன்களை மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்.
3. உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்
மீன் முட்டைகளில் பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தம் உறைவதையும், உடலினுள் உள்ள அழற்சியையும் தடுக்கிறது. ஆய்வுகளில் மீன்கள் மற்றும் மீன் முட்டைகளை மிதமான அளவில் உட்கொண்டு வருவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் மீன் முட்டைகளை சாப்பிடுவது நல்லது.
4. இதயத்திற்கு நல்லது
மீன் முட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் குறைந்தால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்களைத் தடுக்கிறது. முக்கியமாக இதய நோய் இருப்பவர்கள் மீன் முட்டைகளை உட்கொண்டு வந்தால், இதய நோயால் இறக்கும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. மார்பக புற்றுநோய் தடுக்கப்படும்
சமீப காலமாக நிறைய பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீன் முட்டைகளை உட்கொண்டு வந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம். ஏனெனில் இந்த முட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆய்வுகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
6. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் தான் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை எளிய வழிகளில் அதிகரிக்க விரும்பினால், மீன் முட்டைகளை அடிக்கடி சாப்பிடுங்கள். ஏனெனில் மீன் முட்டைகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
7. பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நல்லது
எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. இவை அனைத்துமே மீன் முட்டைகளில் காணப்படுகின்றன. ஆகவே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடாது என்று விரும்பினால், மீன் முட்டைகளை சாப்பிடுங்கள். அதேப் போல் பற்களிலும் எவ்வித பிரச்சனைகளும் வராமல், பற்கள் வலிமையாக இருக்க வேண்டுமானால், மீன் முட்டைகளை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications