Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்க இந்த பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்குறீங்களா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. அப்பறம் கஷ்டப்படுவீங்க..
மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தான் ஒருவருக்கு வயிறு நிரம்பிய மனநிறைவை அளிக்கின்றன, பசி ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகின்றன, சர்க்கரை அளவுகளை நிலையாக பராமரிக்கின்றன. முக்கியமாக தசைகள், தோல், நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் கட்டமைப்பில் புரோட்டீன் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின், அந்த சத்துக்கள் செரிமான மண்டலத்தால் சரியாக ஜீரணிக்கப்பட்டால் மட்டுமே, இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒழுங்காக நடைபெறும். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரி செரிமானம் நடப்பதில்லை. சிலருக்கு புரோட்டீன் செரிமான மண்டலத்தால் சரியாக ஜீரணிக்கப்படாமல் போகலாம்.

இதன் விளைவாக பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் சிரமப்படலாம். சரி, ஒருவரது உடலில் புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படாமல் போனால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே புரோட்டீன் உடலால் ஜீரணிக்கப்படாமல் இருத்தால் வெளிப்படும் சில முக்கியமான அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை தொடர்ந்து ஒருவர் புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின் சந்தித்தால், இப்பிரச்சனை இருப்பதை அறியலாம்.
வீக்கம்
கால்கள், கைகளில் அடிக்கடி வீக்கங்களை சந்திக்குறீர்களா? அப்படியானால் உடலில் புரோட்டீன் சரியாக ஜீரணமாகாமல் இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் இருக்கும் புரோட்டீன்களில், அல்புமினும் அடங்கும். இது திசுக்களில் திரவம் தேங்காமல் தடுக்கும். இருப்பினும் ஒருவரது கை, கால்களில் வீக்கம் ஏற்பட வேறுபல காரணங்களும் இருக்கலாம். எனவே திடீரென்று காரணமின்றி வீக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அதிக பசி
புரோட்டீன் உடலுக்கான எரிபொருளாக செயல்படுகிறது. நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிட விரும்பினால், அதற்கு நிறைய புரோட்டீன் தேவைப்படுகிறது. ஆய்வுகளின் படி, புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால், நாள் முழுவதும் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை உணர முடியும். ஆனால் இந்த புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படாமல் இருந்தால், அது அடிக்கடி ஒருவருக்கு பசியை ஏற்படுத்தும்.
மெதுவாக குணமாகும் காயங்கள்
புரோட்டீன் குறைவாக உட்கொண்டால், நிறைய காயங்களை சந்திக்க நேரிடும் மற்றும் காயங்கள் ஏற்பட்டால், அது குணமாக நேரம் எடுக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, காயங்களைத் தவிர, உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அதன் விளைவாக அடிக்கடி சுளுக்கு மற்றும் தடுக்கி விழுவது போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, போதுமான சிகிச்சை மேற்கொண்டும் காயங்கள் ஆறாமல் இருந்தால், உடலில் புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை என்று அர்த்தம்.
நாள்பட்ட உடல் சோர்வு மற்றும் பலவீனம்
ஆய்வுகளின் படி, ஒருவர் ஒரு வாரம் புரோட்டீன் எடுக்காமல் இருந்தால், அது அந்நபரின் தசைகளை பாதித்து, உடலை மெலிந்து போக செய்யும். அதுவும் இப்படியே புரோட்டீன் உடலால் ஜீரணிக்கப்படாமல் இருந்தால், அது தசைகளின் வெகுஜனத்தை இழக்கச் செய்வதோடு, ஒருவரை பலவீனமாக்கிவிடும். மேலும் அடிக்கடி விழ நேரிடும் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கும். அதோடு உடலில் இரத்த சோகையையும் உண்டாக்கலாம். எனவே இந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் சமீப காலமாக சந்தித்து வந்தால், உடலில் புரோட்டீன் ஜீரணமாவதில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
மனநிலை மாற்றம்
உடலில் புரோட்டீன் போதுமான அளவு இல்லாமல் போனால், அது ஒருவரது மனநிலையையும் பாதிக்கும். உயிரணுக்களுக்கு இடையே தகவல்களை அனுப்ப, அமினோ அமிலங்களால் ஆன நரம்பியக்கடத்திகள் எனப்படும் இரசாயனங்களை உங்கள் மூளை பயன்படுத்துகிறது. எனவே உடலில் புரோட்டீன் இல்லாமல போனால், உடலால் அந்த நரம்பியக்கடத்திகளை போதுமான அளவு உருவாக்க முடியாது. இதன் விளைவாக மூளையின் செயல்பாடு குறைந்து போகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications