Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Kidney Failure Symptoms: இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா.. உங்க சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்புள்ளதாம்!
நம் உடலில் இருக்கக் கூடிய அதிகப்படியான நீரையும், நச்சு கழிவுகளையும் வெளியேற்றக்கூடிய மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இதன் செயல்பாடு நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆதலால், சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிக முக்கியம்.
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகவும், கட்டுப்பாடில்லாத சர்க்கரை, மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சிறுநீரகங்கள் பாதிப்படைகிறது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழல் உருவாகிறது. இதை தான் நாம் சிறுநீரக செயலிழப்பு என்கிறோம்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப காலத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகளும், மற்ற வியாதிகளுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பதால், இதனை ஆரம்ப கட்டத்தில் அறிந்துகொள்வது சற்று கடினமாக உள்ளது. சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு இருந்தால் , என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
திடீர் எடை இழப்பு
உதாரணமாக, ஒருவர் 60 கிலோ எடை இருந்து, ஒரு 20 - 30 நாளில் அவர் 10 முதல் 15 கிலோ வரை திடீர் என்று எடை குறைந்தால், அது சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பகால அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, உடலிள்ள மிக முக்கிய சத்தான புரதச்சத்து, சிறுநீர் வழியாக வெளியேற ஆரம்பித்துவிடும்.
இதன் மூலமாக கணிசமான அளவு உடல் எடை இழப்பு ஏற்படும். சிலருக்கு சுவையின்மை, பசியின்மை, ஏற்பட்டு அதிகளவு உணவு எடுத்துக்கொள்ள முடியாமல், எடை இழப்பு உருவாகும். திடீரென உங்கள் எடை குறைய ஆரம்பித்தால், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
வாய் துர்நாற்றம்
ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு பிரச்சனை இருந்தால், அவர் மூச்சு விடும் போது, ஒருவித துர்நாற்றம் வெளியேறுவதை கவனிக்க முடியும். சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது , ரத்தத்தில் யூரியா என்ற நச்சுபொருள் அதிகமாக இருக்கும். இது வாயிலுள்ள உமிழ் நீருடன் சேர்ந்து, அமோனியாவாக மாற்றம் அடைந்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த நாற்றம், சற்று சிறுநீர் வாடை போன்றே இருக்கும். இதனால் தான் மருத்துவர்களிடம் நாம் செல்லும் போது, "வாயில் கொஞ்சம் ஊதி காட்டுங்கள்" என்று சொல்வார்கள். இன்னும் சிலபேருக்கு நாவில் Metal Taste உள்ளவாறு இருக்கும். இதன் மூலமாகவும் பசியின்மை, வாந்தி, குமட்டல் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கிறது.
இரத்த சோகை
பொதுவாக, சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது, இரத்த சோகை உருவாகும். ஏனெனில், புதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆவதற்கும், சிவப்பு அணுக்களின் செல்களில் ஆக்சிஜனேற்றம் சீராக நடைபெறுவதற்கும், எரித்ரோபொய்டின்(Erythropoietin) என்ற ஹார்மோன் முக்கிய பங்களிக்கிறது. சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இந்த ஹார்மோன்களின் உற்பத்தியும் குறைந்து விடும்.
இதன் விளைவாக, புதிய இரத்த செல்கள் உற்பத்தியாவது குறைந்துவிடும். இதனால் தான், சிறுநீரக செயலிழப்பின் போது, இரத்த சோகையும் உருவாகிறது. இரத்த சோகை இருக்கும் போது, அதிகப்படியான உடல் சோர்வு, அசதி, மயக்கம், எந்த வேலையும் செய்ய மனமின்மை போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
வறண்ட சருமம் மற்றும் அரிப்பு
பொதுவாக சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது, உடம்பில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால், சிறுநீரக செயலிழப்பு உருவாகும் போது, உடம்பில் தேவையில்லாத கழிவுகளான யூரியா கிரியேட்டின் போன்ற உடலின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகாக்கூடிய கழிவுகள் உடலில் தேங்க ஆரம்பித்துவிடும். அதனால், சருமம் வறண்டு செதில் செதிலாக இருப்பதை பார்க்கமுடியும்.
அதே சமயம், தோலில் அரிப்பு, சிவத்தல் போன்றவற்றையும் உணர முடியும். உடலில் உள்ள கழிவுகள் அதிகமாகும் போது, நமது உடல் எப்படியாவது கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று தோல் வழியாக முயற்சி செய்யும் போது தான் இந்த மாதிரியான பிரச்சனைகள் உருவாகிறது.
மூச்சு விடுவதில் சிரமம்
ஒரு சிறிய வேலை செய்தால் கூட, அதிகமா மூச்சு வாங்குவதும் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிதான். ஏனெனில், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது, உடம்பில் தேவையில்லாத கழிவுகளும் அதிகப்படியான நீரும், வெளியேற்றப்படாமல் உடலில் தேங்க ஆரம்பிக்கும்.
அதிலும் குறிப்பாக, உங்கள் நுரையீரலில் போய் தேங்க ஆரம்பிக்கும் போது, மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அடிக்கடி இந்த Short breathing என்றும் சொல்லப்படும் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் வீக்கம் (கை, கால்கள்)
மேலே கூறியுள்ள படி, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத போது, உடம்பில் தேவையில்லாத நீர் தேங்கி, வீக்கத்தை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக உடம்பில் அடிப்பாகம் ஆகிய கால்களில் தான் அதிகமா தேங்க ஆரம்பிக்கும். அது நாளடைவில் கை, கால், தொடை என பல்வேறு பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துவிடும். இது போன்று கை, கால்களில் வீக்கம் வந்தால், உடனே அதற்கான காரணங்களையும், உரிய சிகிச்சைகளையும் மேற்கொள்வது நல்லது.
முதுகு வலி
சிறுநீரகங்கள் அமைத்து இருக்கக் கூடிய, இடத்திற்கு மேல்புறமோ, அல்லது முதுகின் அடிப்பகுதியிலோ ஒரே இடத்தில தொடர்ந்து வலி இருந்தால், அது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.
கண்களுக்கு கீழ் வீக்கம்
சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது, உடம்பில் உள்ள புரதம் அதிகப்படியாக சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இதன் விளைவாக, உடம்புக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதனால், நமக்கு கண்களை சுற்றி வீக்கம் (Puffy eyes ) வந்து அறிகுறியாக வெளிப்படுத்தும்.
அது மட்டும் இல்லாமல் கண்களை சுற்றி தேவையில்லாத நீரும் தேங்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக, கண் மற்றும் இமைகளை சுற்றி வீக்கம் உருவாகும்.
சீரற்ற இரத்த அழுத்தம்
இரத்தத்தில் அதிகமான கழிவுகள் தேங்க ஆரம்பிக்கும் போது, ஆக்சிஜன் பரிமாற்றம் குறைய ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக இரத்த குழாய்கள் அதிகமான அளவு சுருங்கவும், விரியவும் ஆரம்பிக்கும். மேலும் இரத்த அழுத்தம் சீரற்றதாக இருக்கும்.
இந்த பிரச்சனை இருக்கும் பட்சத்தில், சிறுநீரகம் மிக விரைவில் செயலிழக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில், உடம்பில் அதிகமான உயர் இரத்த அழுத்தம் உருவாகும் போது, நெஃப்ரான்கள் சுலபமாக பாதிப்படையும்.
சிறுநீரில் மாற்றம்
சிறுநீர் அதிகமாக வெளியேறுவது, அல்லது மிக குறைவாக வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உங்கள் சிறுநீரில் மாற்றம் இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அல்லது ரத்தம் வெளியேறுவது , வெளியேறிய சிறுநீர் நுரை போல பொங்குவது, சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது, போன்ற அறிகுறிகளும் சிறுநீரகம் செயலிழந்ததற்கான அறிகுறிகளா பார்க்கப்படுகிறது.
மேலே, சொன்ன 10 அறிகுறிகளில், ஏதேனும் 2 அல்லது 3 அறிகுறிகள் இருந்தால், சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த அறிகுறிகளை அலட்சியமாக எண்ணாமல், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
