For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...!

எக்சிமா பாதிக்கப்பட்ட நபருக்கு அரிப்புடன் கூடிய சீழ் கோர்த்த கொப்புளங்கள் உண்டாகலாம். சிறிய அளவு கட்டிகள் கூட மிக விரைவாக உடல் முழுவதும் பரவ நேரலாம்.

|

சருமத்தில் உண்டாகும் தொற்றுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அரிக்கும் தோலழற்சியான எக்சிமா. இதனை சிரங்கு என்றும் கூறலாம். சிரங்கு என்பது பருவநிலை மாற்றத்தின் போது அதிகரிக்கக் கூடிய ஒரு வகை சரும பாதிப்பாகும். எக்சிமா என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து உருவானது. எக்சிமாவால் பாதிக்கப்பட்ட வழக்குகள் இன்றைய நாட்களில் அதிகரித்து வருகின்றன.

Tips To Manage Eczema During Seasonal Change In Tamil

இருப்பினும் இந்த அதிகரிப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. எக்சிமா பாதிக்கப்பட்ட நபருக்கு அரிப்புடன் கூடிய சீழ் கோர்த்த கொப்புளங்கள் உண்டாகலாம். சிறிய அளவு கட்டிகள் கூட மிக விரைவாக உடல் முழுவதும் பரவ நேரலாம். எக்சிமா பாதிப்பிற்கான முதன்மை அறிகுறிகளை புரிந்து கொள்வதன் மூலம் விரைவான நோய்கண்டறிதல் முறையை ஏற்படுத்த முடியும் மற்றும் இதற்கான சிகிச்சையையும் பெற்றிட முடியும்.

MOST READ: சொன்னா நம்பமாட்டீங்க... இதெல்லாம் மாரடைப்பை வரத் தூண்டும்... உஷாரா இருந்துக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எக்சிமாவின் அறிகுறிகள்:

எக்சிமாவின் அறிகுறிகள்:

* தீவிர அரிப்பு

* சிவந்த தோல்

* அரிப்பு மற்றும் எரிச்சல் காரணமாக உண்டாகும் தடிப்புகள்

* தடிப்புகள் மற்றும் கொப்புளங்களில் இருந்து வெளிப்படும் சீழ்

* உடலின் பல பகுதிகளில் அழற்சி

* உடலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொப்புளங்கள் பரவும் நிலை

சரும தொற்று மற்றும் பருவநிலை மாற்றங்கள்

சரும தொற்று மற்றும் பருவநிலை மாற்றங்கள்

பருவ நிலை மாறும் போது சருமம் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் நாம் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உடல்நலம் குறித்த பல்வேறு விஷயங்களை நாம் பின்பற்றினாலும் சருமத்தை பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறோம். காரணம் , பருவ நிலைக்கு ஏற்ற விதத்தில் சருமம் தன்னை மாற்றிக் கொள்ளும், இதற்காக எந்த ஒரு தனிப்பட்ட பராமரிப்பும் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம்.

எக்சிமா போன்ற சருமப் பாதிப்புகள் குளிர் காலத்தில் அதிகம் தலை தூக்குகின்றன. கோடைக்காலத்தைக் காட்டிலும் குளிர் காலத்தில் சருமம் அதிகம் வறண்டு இருப்பதால் இந்த நிலை மேலும் அதிகரிக்கிறது. சருமம் அதிகம் வறண்டு இருப்பதால் அதிக அரிப்பு ஏற்பட்டு திட்டுக்கள் தோன்றலாம். மேலும் இதன் காரணமாக கொப்புளங்கள் உண்டாகி இன்னும் பாதிப்பு அதிகமாகலாம். ஆகவே பருவ நிலை மாற்றத்தின் போது சருமத்திற்கு அதிக பராமரிப்பு தேவை.

பருவநிலை மாற்றத்தின் போது எக்சிமாவை நிர்வகிக்க சில குறிப்புகள்:

பருவநிலை மாற்றத்தின் போது எக்சிமாவை நிர்வகிக்க சில குறிப்புகள்:

குளிர் காலத்தில் சருமத்தில் உண்டாகும் தொற்று பாதிப்புகளுக்கு அதிக வாய்ப்பு எதனால் உண்டாகிறது என்ற கேள்வி நம் மனதில் எழக்கூடும். இதனை கட்டுப்படுத்த என்ன வழிகள் மேற்கொள்ளலாம் என்ற கேள்வியும் எழலாம். இந்த கேள்விகளுக்கு உகந்த பதிலாக, கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

குளிர்ச்சியான பருவநிலை என்பதற்கு பொருள் நீர்ச்சத்து குறைந்த சருமம் என்பதாகும். எனவே, இந்த காலத்தில் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். சருமம் ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சிறந்த தீர்வைத் தரும். ஒருமுறை மட்டுமல்ல, குளிர் காலத்தில் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம்.

க்ரீம்

க்ரீம்

அரிப்பு என்பது ஒருமுறை தொட்டால் விடவே விடாது. அதனால் உங்களுக்கு அரிக்கும் உணர்வு ஏற்பட்டால் அதனை முடிந்த அளவு கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக ஆழமான அரிப்பு உணர்வு இருக்கும் இடங்களில் க்ரீம் தடவி இந்த அரிப்பை கட்டுப்படுத்த முயற்சியுங்கள். ஒரு சரியான தோல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெற்று சரியான மருந்துகள் வாங்கி மேற்புறம் தடவுங்கள் மற்றும் உட்புறம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பருவ நிலை மாற்றம் காரணமாக சுற்றுப்புறத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே, ஒரு குடும்பத்தில் எக்சிமா தாக்கும் அபாயம் உள்ள நபர் அதிக கவனத்துடன் இருந்து ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. போதுமான ஓய்வுடன் கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளல் காரணமாக இந்த எக்சிமா பாதிப்பு அதிகரிப்பதைத் தவிர்க்க முடியும். மேலும் சருமத்திற்கு எரிச்சலூட்டும் தூசு, மாசு போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

எக்சிமா பாதிப்பு உண்டாக, மனஅழுத்தமும் ஒரு கூடுதல் காரணமாக இருக்க முடியும். ஆகவே மனஅழுத்ததில் இருந்து தள்ளி இருக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

முடிவு

முடிவு

தற்போது அனைவரையும் அடிக்கடி கை கழுவச் சொல்லும் இந்த நேரத்தில், கை கழுவியவுடன் கைகளுக்கு தேவையான மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ளுங்கள். சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் போன்றவை சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை உறிஞ்சிவிடும், இதனால் சருமம் பாதிப்படையலாம். சானிடைசர் பயன்படுத்துவதால் சருமம் மேலும் எரிச்சலடையும் வாய்ப்பு உண்டு. அதனால் கைகளைக் கழுவியவுடன் கைகள் மற்றும் உடலின் இதர இடங்களில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி எக்சிமா பாதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Manage Eczema During Seasonal Change In Tamil

Here are some tips to manage eczema during seasonal change in tamil. Read on...
Desktop Bottom Promotion