For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வாயில் இருந்து எப்பவும் துர்நாற்றம் வீசுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

வாய் சுகாதாரம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

|

வாய் துர்நாற்றம் பலருக்கும் பல சூழ்நிலைகளில் தர்ம சங்கடத்தை உண்டாக்கக்கூடிய நிலை. ஒருவரது வாயில் இருந்து வீசும் துர்நாற்றம், அவர்களது அருகில் இருப்போரின் முகத்தை சுளிக்க வைப்பதுடன், அவர்களுடன் எப்போதும் ஒருவித இடைவெளியை பராமரிக்க வைக்கும். உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் போது, உங்கள் நண்பர் உங்களை நெருங்கி பேசுவதைத் தவிர்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நிச்சயம் இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

Tips Might Be Able To Help You To Prevent Bad Breath

வாய் சுகாதாரம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒருவரது வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதே சமயம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க பல வழிகளும் உள்ளன. கீழே வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: முதுகு வலியை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாக்கை சுத்தம் செய்யவும்

நாக்கை சுத்தம் செய்யவும்

பலரும் வாயை ஆரோக்கியத்திற்காக தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவார்கள். ஆனால் பற்களை சுத்தம் செய்யும் பலர் நாக்கை சுத்தம் செய்ய மறந்துவிடுகின்றனர். அதனால் நாக்கில் பாக்டீரியாக்கள் தங்கி வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. எனவே தினமும் நாக்கை சுத்தம் செய்யுங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

சர்க்கரையை குறைக்கவும்

சர்க்கரையை குறைக்கவும்

ஒருவரது வாய் துர்நாற்றத்திற்கு அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதும் ஓர் காரணம். சர்க்கரையானது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நொதிக்க வைத்து, மோசமான நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதைத் தவித்திடுங்கள். இதனால் வாயில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். ஒருவேளை வாய் துர்நாற்றத்திற்கு சூயிங் கம் எடுப்பதாக இருந்தால், சர்க்கரை இல்லாத சூயிங்கம்மைத் தேர்ந்தெடுங்கள்.

பிரட் அதிகம் சாப்பிடவும்

பிரட் அதிகம் சாப்பிடவும்

இந்த வழி நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கலாம். உங்களின் டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் குறைவாக இருக்குமானால், வாய் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடும். ஏனெனில் உடலானது ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டிற்கு பதிலாக கொழுப்பை பயன்படுத்துகிறது. கொழுப்புக்கள் ஆற்றலுக்காக எரிக்கப்படும் போது, உடலில் ஒருவித கெமிக்கல் உருவாகி, வாயின் வழியே வெளியே, வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

வாய் புத்துணர்ச்சியுடன் இருப்பதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் ஒருவர் போதுமான அளவு நீரைக் குடித்தால், உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் தடுக்கப்படும். ஒருவேளை உங்களுக்கு வெறும் தண்ணீரை குடிக்க பிடிக்காவிட்டால், இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றைக் குடிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, உடலினுள் பல அற்புதங்களும் நிகழும்.

ஏலக்காய்

ஏலக்காய்

இஞ்சியின் குடும்பத்தைச் சேர்ந்தது தான் ஏலக்காய். மேலும் இது நல்ல வாசனைப் பொருள் மட்டுமின்றி, பல்வேறு சமையல்களில் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது ஒரு இயற்கையான வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வாயில் இருந்து வீசும் துர்நாற்றத்தில் இருந்து உடனடி நிவாணம் கிடைக்க வேண்டுமானால், ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள்.

சோம்பு

சோம்பு

சோம்பு விதைகள் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் அற்புதமான பொருள். ஹோட்டல்களில் உணவிற்கு பின் சோம்பு கொடுக்கப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? இதில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமானத்திற்கு உதவுவதோடு, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

கிராம்பு

கிராம்பு

கிராம்பில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். எனவே உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்துடன் இருந்து, உடனடி நிவாரணப் பொருளைத் தேடினால், கிராம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாயில் உள்ள துர்நாற்றத்தை தடுப்பதோடு மட்டுமின்றி, ஈறுகளில் உள்ள வீக்கம் அல்லது வலியைக் குறைக்கவும் செய்யும். அதற்கு 2-3 துளி யூகலிப்டஸ் ஆயிலை ஒரு கப் நீரில் ஊற்றி, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். பின் சுத்தமான நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் பல பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று வாய் துர்நாற்ற பிரச்சனை. அதற்கு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அந்நீர் அனைத்தாலும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். பின் சுத்தமான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா வாயில் உள்ள அசிட்டிக் நிலையை மாற்றி, வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு சாதகமற்றதாக்கி, வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது. அதற்கு பற்களைத் துலக்கும் போது, டூத் பேஸ்ட்டுடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து, ஒரு நாளைக்கு ஒருமுறை பற்களைத் துலக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips Might Be Able To Help You To Prevent Bad Breath

Good oral hygiene is important if you want to smell fresh, but there are other ways to prevent smelly breath as well. Try these five tips if you don’t want to feel self-conscious about your breath.
Desktop Bottom Promotion