For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை குளிக்கும் நீரில் சேர்த்துக் குளிப்பதால் பெறும் நன்மைகள்!

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா கலந்து குளிப்பதால் உங்கள் தசைகள் திறக்கப்பட்டு அழுத்தம் குறைகிறது, உடலைத் தளர்த்துவதைத் தவிர இன்னும் அதிக பலன் உண்டாகிறது.

|

சமையலில் பயன்படுத்தும் பேக்கிங் சோடாவிற்கு சருமத்திற்கு இதமளிக்கும் மற்றும் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளன. ஒரு நீளமான அமைதியான குளியல் மனதிற்கும் உடலுக்கும் ஒரு வித அமைதியை தந்து ரிலாக்ஸ் உணர்வைத் தருகிறது. நீங்கள் பேக்கிங் சோடா குளியல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? பேக்கிங் சோடா என்பது அடிப்படையில் சோடியம் அயனி மற்றும் பைகார்போனேட் அயனியின் கலவை ஆகும். கிருமிகளை அழிக்க இந்த சோடா பெரும்பாலும் சுத்தப்படுத்தும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அம்சங்கள் சருமத்திற்கு சிறந்த பலனைத் தருவதாக உள்ளன.

Surprising Benefits Of Taking A Baking Soda Bath

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா கலந்து குளிப்பதால் உங்கள் தசைகள் திறக்கப்பட்டு அழுத்தம் குறைகிறது, உடலைத் தளர்த்துவதைத் தவிர இன்னும் அதிக பலன் உண்டாகிறது. பல்வேறு சரும நிலைகளுக்கு ஒரு குணப்படுத்தும் முகவராக உள்ளது மற்றும் கிருமிகளை அகற்றுகிறது. பேக்கிங் சோடா கொண்டு குளிப்பது மிகவும் விலை மலிவானது, எளிதானது மற்றும் மிகவும் நன்மை தரக்கூடியது.

MOST READ: 5 நாட்களில் 2 கிலோ வரை எடை குறைக்க உதவும் பப்பாளி டயட் பற்றி தெரியுமா?

எப்சம் உப்பு குளியல் மற்றும் பேக்கிங் சோடா குளியல் ஆகிய இரண்டும் வெவ்வேறானது. இரண்டுமே வெவ்வேறு சரும நிலைகளுக்கு தீர்வளிக்கின்றன. இந்த பதிவில் நாம் பேக்கிங் சோடா குளியலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா நன்மைகள்:

பேக்கிங் சோடா நன்மைகள்:

பேக்கிங் சோடா குளியல் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பல்வேறு நன்மைகள் குறித்து நீங்கள் அறிந்திருக்க முடியும். பேக்கிங் சோடா உடலில் உள்ள சரும துளைகளில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இனி இதனுடைய 7 அற்புத நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

பூஞ்சை தொற்று

பூஞ்சை தொற்று

பூஞ்சை தொற்று என்பது மக்களிடையே இருக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். குறிப்பாக சருமம், பிறப்புறுப்பு மற்றும் நகங்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்படுகின்றன. பேக்கிங் சோடாவில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பூஞ்சை தொற்று பாதிப்பைப் போக்க உதவுகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

சிறுநீரக பாதை தொற்று

சிறுநீரக பாதை தொற்று

சிறுநீரக பாதையில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படுவது பெண்கள் மத்தியில் ஒரு பொதுவான பாதிப்பாகும். பேக்கிங் சோடா குளியல் மூலம் சிறுநீரில் உள்ள அமிலம் சமநிலைப்படுத்தப்படுகிறது, கிருமிகள் வெளியேற்றப்படுகிறது மற்றும் இதர பாதிப்புகளை அகற்றுகிறது. சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலியை குறைக்கவும் உதவுகிறது.

எக்சிமா

எக்சிமா

எக்சிமா பாதிப்பின் அறிகுறிகளை குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது. இந்த வகை சரும பதிப்பில் ஒரு நபரின் சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. சரும அரிப்பின் அளவை குறைக்க பேக்கிங் சோடா உதவுகிறது. இருப்பினும் குளியலுக்கு பிறகு சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க மறக்க வேண்டாம்.

விஷ செடிகள் மூலம் உண்டாகும் தடிப்புகள்

விஷ செடிகள் மூலம் உண்டாகும் தடிப்புகள்

பேக்கிங் சோடாவில் குணப்படுத்தும் முகவர்கள் இருப்பதால் விஷ செடிகள் மூலம் உண்டாகும் தடிப்புகளைக் குணப்படுத்த பேக்கிங் சோடா உதவுகிறது. தடுப்புகளை ஏற்படுத்தும் எண்ணெய்களை சருமம் உறிஞ்சுவதைத் தடுக்க பேக்கிங் சோடா குளியல் உதவுகிறது. சருமத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றைக் குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது.

டயப்பர் தடிப்பு

டயப்பர் தடிப்பு

குழந்தையின் சருமம் மிகவும் சென்சிட்டிவானது மற்றும் மென்மையானது. ஒரு நொடியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குழந்தையிடம் பரவுகிறது. குழந்தைகள் டயப்பர் அணிவதால் அந்த பகுதி மிகவும் ஈரப்பதத்துடன் இருக்கிறது மற்றும் அந்த பகுதியில் பேக்கிங் சோடா தனது அற்புதத்தை வெளியிடுகிறது. பெரியவர்கள் பயன்படுத்தும் அதே அளவை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம், பாதிக்கப்பட்ட பகுதியை பேக்கிங் சோடாவில் 10 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கவும்.

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று

வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை உள்ளடக்கியது ஈஸ்ட் தொற்று பாதிப்பு. பேக்கிங் சோடா உங்கள் சருமத்திற்கு இதமளித்து தொற்று பாதிப்பு நிலையை சரி செய்ய உதவுகிறது.

சின்னம்மை

சின்னம்மை

சருமத்தில் எல்லா இடத்திலும் அரிப்பை ஏற்படுத்தக்கூடியது சின்னம்மை . உங்கள் உடலில் உண்டாகும் இத்தகைய அரிப்பை போக்க பேக்கிங் சோடா உதவுகிறது. ஒரு நாளில் மூன்று முறை பேக்கிங் சோடா கொண்டு குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா பயன்படுத்தி எவ்வாறு குளிப்பது?

பேக்கிங் சோடா பயன்படுத்தி எவ்வாறு குளிப்பது?

மிக எளிய முறையில் ஒரு அமைதியான, இதமான அற்புதமான பேக்கிங் சோடா குளியலை தயாரிக்க முடியும். வெதுவெதுப்பான நேரில் 1-2 கப் பேக்கிங் சோடா கலந்து கரைய விடவும். ¼ கப் முதல் 2 கப் பேக்கிங் சோடா பயன்படுத்தி குளிக்கலாம். வெதுவெதுப்பான நீர் உள்ள டப்பில் இந்த சோடாவை கலப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பேக்கிங் சோடா கரைந்தவுடன் 40-50 நிமிடங்கள் அந்த டப்பில் அமர்ந்து உங்கள் உடலை தளர்த்திக் கொள்ளலாம். குளித்து முடித்த பின்னர் உங்கள் உடலை ஒரு டவல் கொண்டு முழுவதும் துடைத்துவிடவும். குளிக்கும் அறையில் நறுமண மெழுகுவர்த்தி மற்றும் நல்ல இசை ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.

பேக்கிங் சோடா குளியல் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த முறையை பின்பற்றி குளிப்பதால் உங்களுக்கு தேவையான விளைவுகள் ஏற்படலாம். சரும பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவது முதல் மென்மையான, இதமான சருமம் பெறுவது வரை பல்வேறு நன்மைகள் ஒரே தீர்வில் கிடைப்பதால் இதனை கட்டாயம் முயற்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Taking A Baking Soda Bath in Tamil

Here are some surprising benefits of taking a baking soda bath. Read on...
Desktop Bottom Promotion