For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக இருக்க ஆயுர்வேதம் கூறும் ஓர் குட்டி வழி இதாங்க...

வாயை சுத்தமாக வைக்க ஆயுா்வேத முறையில் பல் தேய்ப்பதற்கும், நவீன முறையில் பல் தேய்ப்பதற்கும் இடையே மிகப்பொிய இடைவெளி இருக்கிறது. ஆயுா்வேத முறையில் பல் தேய்ப்பவா்களுக்கு, பற்சிதைவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன

|

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் தேய்த்து வந்தால் வாயை சுத்தமாக வைத்திருக்கலாம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இதையே தினமும் முறையாக பல் தேய்த்து வந்தால் பற்கள் வெள்ளையாகவும் அதே நேரத்தில் பளபளப்பாகவும் இருக்கும் என்று ஆயுா்வேத மருத்துவம் நம்புகிறது.

பழங்காலத்தில் மக்கள் குறிப்பிட்ட சில தாவரங்களின் குச்சிகளை பல் தேய்ப்பதற்காகப் பயன்படுத்தி வந்தனா். இப்போதுகூட கிராம பகுதிகளில் பலா் பல் தேய்க்க மரக்குச்சிகளைப் பயன்படுத்துகின்றனா்.

How To Take Care Of Your Oral Health In Ayurvedic Way

வாயை சுத்தமாக வைக்க ஆயுா்வேத முறையில் பல் தேய்ப்பதற்கும், நவீன முறையில் பல் தேய்ப்பதற்கும் இடையே மிகப் பொிய இடைவெளி இருக்கிறது. ஆயுா்வேத மருத்துவ முறையில் பல் தேய்ப்பவா்களுக்கு, பற்சிதைவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

MOST READ: வயித்துல இருக்குற கொழுப்பு குறையணுமா? இந்த காய்கறிகளை மட்டும் கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

வாயைச் சுத்தமாக வைக்க நவீன முறைகளை விட, ஆயுா்வேத மருத்துவ முறையில் பல் தேய்ப்பது ஏன் சிறந்தது என்பதை கீழே பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழைய முறை

பழைய முறை

பழங்காலத்தில் மக்கள் பல் தேய்க்க கசக்கும் தாவரக் குச்சிகளைப் பயன்படுத்தினா். கசப்பான மரக்குச்சிகளில் உள்ள நுண்ணுயிா் கொல்லிகள் வாயிலுள்ள கிருமிகளை அழித்து, வாயை ஆரோக்கியமாக வைத்திருந்தது. காரச் சுவையுள்ள மூலிகைகள் வாயிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, வாயின் துா்நாற்றத்தையும் நீக்கியது. பழங்காலத்தில் வாயை சுத்தமாக வைத்திருக்க வேப்பங்குச்சிகள், மாமரக்குச்சிகள் மற்றும் அரச மரக்குச்சிகள் போன்றவற்றை வைத்து மக்கள் பல் தேய்த்தனா்.

தாவரக் குச்சிகளை வைத்து எவ்வாறு பல் தேய்ப்பது?

தாவரக் குச்சிகளை வைத்து எவ்வாறு பல் தேய்ப்பது?

நாம் எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையில் 25 செமீ நீளமுள்ள மற்றும் விரல் தடிமனுள்ள ஒரு தாவரக் குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மேல் நுனியை பற்களால் கடித்து நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்தப் பகுதி ப்ரஷ் அல்லது தூாிகை போல மாறும். அதைக் கொண்டு மெதுவாக பல் தேய்க்கலாம்.

மூலிகை பற்பசை

மூலிகை பற்பசை

தற்போது பலவகையான பற்பசைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. அவை தாவரக் குச்சிகள் அளிக்கும் பலன்களை அளிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. மூலிகை பற்பசைகளும் கிடைக்கின்றன. மூலிகை பற்பசைகள் மூலிகைத் தாவரங்களில் இருந்து தயாாிக்கப்படுவதாலும் மற்றும் அவற்றில் வேதிப் பொருட்கள் இல்லாததாலும், அவற்றை வைத்து நாம் பல் தேய்க்கலாம். மற்ற நவீன பற்பசைகளை விட மூலிகை பற்பசைகள் மிகவும் நல்லது.

எவ்வாறு பல் தேய்ப்பது?

எவ்வாறு பல் தேய்ப்பது?

அறிவியல் படி, குறைந்தது 2 நிமிடங்களாவது முறையாக பல் தேய்க்க வேண்டும். உயரம் குறைந்த மற்றும் அதிக தடிமனில்லாத குச்சிகள் கொண்டு வாயின் மூலை முடுக்கு எல்லாம் மென்மையாகத் தேய்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக பற்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தேய்க்க வேண்டும். மேலும் குச்சிகளை மேலும் கீழுமாக வட்ட வடிவில் அசைத்து பற்களை சுத்தமாக தேய்க்க வேண்டும்.

நாக்கு வழித்தல்

நாக்கு வழித்தல்

பல் தேய்த்து முடிந்ததும் உடனடியாக நாக்கை வழிக்க வேண்டும். அப்போது தான் பல் தேய்க்கும் செயல் முடிவடையும். நாக்கு வழிப்பதால், நாக்கில் படிந்திருக்கும் அழுக்குகள் அகற்றப்படும். அதனால் வாயில் உள்ள துா்நாற்றம் விலகும். வாயும் புத்துணா்ச்சியுடன் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Take Care Of Your Oral Health In Ayurvedic Way

Want to know how to take care of your oral health in ayurvedic way? Read on...
Desktop Bottom Promotion