For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குடலை சுத்தம் செய்ய நினைக்கிறீங்களா? அப்ப இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க...

தற்போதைய உணவுப் பழக்கத்தால் குடல் பகுதியில் நச்சுக்கள் அதிகம் சேர்கின்றன. இதனால் பலர் செரிமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க அவ்வப்போது குடலை சுத்தம் செய்ய வேண்டும்

|

உடல் ஆரோக்கியம் என்று வரும் போது அதில் வயிறு ஆரோக்கியம் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒருவரது வயிறு ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்கும். அதற்கு முதலில் வயிற்றில் உள்ள குடல் சுத்தமாக இருக்க வேண்டும். தற்போதைய உணவுப் பழக்கத்தால் குடல் பகுதியில் நச்சுக்கள் அதிகம் சேர்கின்றன. இதனால் பலர் செரிமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது குடலை சுத்தம் செய்ய வேண்டும்.

What Are The Home Remedies For Keeping The Stomach Clean

நமது குடல் பகுதியை சுத்தம் செய்ய உணவுப் பொருட்கள் மற்றும் ஒருசில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. இவை குடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு, அதன் செயல்பாட்டை மேம்படுத்தி குடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன. குடலை சுத்தப்படுத்துவதற்கான வழியை தெரிந்து கொள்வதன் முன், ஒருவருக்கு குடல் ஏன் மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடலின் பணி

குடலின் பணி

பொதுவாக குடலின் வேலை மலத்தில் இருந்து நீரை அகற்றி, உடலை ஆதரிப்பதாகும். செரிமான அமைப்பில் உள்ள குடல் எலட்ரோலைட்டுகள் மற்றும் pH அளவை சமப்படுத்துவதோடு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உப்பு மற்றும் நீர் ஆகியவற்றை மீண்டும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை வெளியேற்ற தயார் செய்கிறது. செரிமான செயல்பாட்டின் போது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் முக்கிய பங்காற்றுகிறது.

ஒருவரது குடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி சரியாக வெளியேற்றப்படாமல் நீண்ட நேரம் குடலில் இருக்கும் போது, அது உயர் இரத்த அழுத்தம் அல்லது கீல்வாதத்தை கூட ஏற்படுத்தலாம். எனவே தான் தினமும் உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகின்றனர். இப்போது வயிற்றை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை கை வைத்தியங்களைக் காண்போம்.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது மிகவும் பிரபலமான சூப்பர் உணவுகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு விதைகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இது வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் இந்த இரண்டு விதைகளிலும் ஆரோக்கியமான அளவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடல் தாவரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் பிற செரிமான கோளாறுகளை சரிசெய்யவும் பெரிதும் உதவுகிறது.

எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

* 3 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

* பின் அதில் வேண்டுமானால் சுவைக்காக சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்கலாம்.

உப்பு நீர்

உப்பு நீர்

குடல் சுத்திகரிப்புக்காக பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் இயற்கை வழி தான் உப்பு நீரைக் குடிப்பது. இதனால் மலச்சிக்கல் இயற்கையாக சரியாவதோடு, குடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு குடலும் சுத்தமாகும்.

எப்படி குடிப்பது?

எப்படி குடிப்பது?

ஒரு லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த வழியைத் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் இதில் சோடியம் அதிகளவில் உள்ளதால், இது நிலைமையை மோசமாக்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

வைட்டமின் சி அதிகம் கொண்ட எலுமிச்சை, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதை ஊக்குவிக்கும். மேலும் எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.

எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள்.

* பின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் /2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள்.

தயிர்

தயிர்

தயிர் புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது மற்றும் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும். தயிரில் கால்சியம், புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை ஏராளமாக உள்ளதால், சுத்திகரிப்பின் போது உடலை ஆதரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

எப்படி சாப்பிடுவது?

தினமும் ஒரு பௌல் தயிரை ஒருமுறை அல்லது இரண்டு முறை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், குடல் ஆரோக்கியத்திற்கும், சுத்திகரிப்பிற்கும் உதவுகிறது. மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் செரிமான மண்டலம் மற்றும் குடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற ஆதரிக்கிறது. முக்கியமாக இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை தக்க வைக்க உதவுகிறது.

எப்படி சாப்பிடுவது?

எப்படி சாப்பிடுவது?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள பயோஆக்டிவ் பொருட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைகளைக் கொண்டுள்ளது. அதோடு இஞ்சி செரிமானத்தை தூண்டுவதோடு, குமட்டல், வயிற்று உப்புசத்தை சரிசெய்யும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். மேலும் இஞ்சி குடல் மற்றும் உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது.

எப்படி சாப்பிடுவது?

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றினை ஒரு கப் சுடுநீரில் கலந்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

குடலை சுத்திகரிக்க பெரிதும் உதவி புரியும் ஓர் அற்புதமான தாவரம் தான் கற்றாழை. இதில் உள்ள ஏராளமான பயோஆக்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதோடு, மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

எப்படி சாப்பிடுவது?

எப்படி சாப்பிடுவது?

* 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒரு கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து, 3 மணிநேரம் கழித்து குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Keeping The Stomach Clean

What are the home remedies for keeping the stomach clean? Read on...
Desktop Bottom Promotion