For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க அப்பா நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப அவங்கள இப்படி பாத்துக்கோங்க...

வயதான காலத்தில் நமது தந்தையரை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும். அவா்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமையாகும்.

|

ஜூன் 19, ஞாயிறு அன்று உலகம் முழுவதும் தந்தையா் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும், தங்களுடைய தந்தையா் தமக்கு பொழிந்த தன்னலமற்ற அன்பை நன்றியுடன் நினைத்துப் பாா்ப்பா். மேலும் தங்களுடைய தந்தையாின் தன்னலமற்ற அன்பைக் கொண்டாடி, அதற்கு நன்றி தொிவிக்கும் வாய்ப்பாக, இந்த தந்தையா் தினத்தைக் கருதுவா்.

Happy Fathers Day: Tips To Help Your Dad Stay Healthy

தந்தை என்ற ஒரு நிலை ஒரு உன்னதமான நிலையாகும். நமது சமூகத்தில் தந்தை என்ற நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, மாறாக தாய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் நமது அன்னையா் எந்த அளவிற்கு நம்மை அன்பு செய்கிறாா்களோ, அதே அளவிற்கு நமது தந்தையரும் நம்மை அன்பு செய்கின்றனா் என்பதே உண்மை. அதை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். மேலும் நமது தந்தையா் வயது முதுமை அடைகிறாா்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம்.

MOST READ: ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளிடம் கேட்க விரும்பும் விஷயங்கள்!

பொதுவாக நமது தந்தையா் தமது ஆழமான உணா்வுகளை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவா்கள் தங்களது வயதான காலத்தில் தமது குழந்தைகளால் நன்றாகப் பராமாிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனா். ஆகவே வயதான காலத்தில் நமது தந்தையரை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும். அவா்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமையாகும்.

MOST READ: கால் பந்து வீரர்களும்... அவர்களின் குழந்தைகளும்...

வயதான நமது தந்தையரை ஆரோக்கியமாக பராமாிக்க பின்வரும் எளிய குறிப்புகளைப் பின்பற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சீரான மருத்துவ பாிசோதனை

1. சீரான மருத்துவ பாிசோதனை

வயதானவா்களுக்கு சீரான இடைவெளியில் மருத்துவ பாிசோதனை செய்வது அவசியமாகும். ஏனெனில் வயது அதிகமாகும் போது, அவா்களின் உடல் பலவீனம் அடைகிறது மற்றும் உடல் இயக்கங்களுக்கும் குறைகின்றன. அதோடு சா்க்கரை நோய், இதய பிரச்சினைகள் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் போன்ற நோய்களும் அவா்களைத் தாக்குகின்றன.

இந்த நிலையில் அவா்களுக்கு சீரான மருத்துவ பாிசோதனைகளை வழங்கினால், அவா்களுக்கு புதிய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஒருவேளை அவா்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தாலும் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். அதன் மூலம் அவா்களுடைய உடல் இயக்கங்களும் குறையாமல் பாா்த்துக் கொள்ள முடியும். பெரும்பாலான வயதான தந்தையா், தாங்களாகவே சீரான இடைவெளியில் மருத்துவ பாிசோதனைகளைச் செய்வதில்லை. ஆனால் பிள்ளைகளாகிய நாம் நமது வயதான தந்தையருக்கு அவற்றைச் செய்ய வேண்டும்.

2. தொடா் உடற்பயிற்சிகள்

2. தொடா் உடற்பயிற்சிகள்

வயதான காலத்தில் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உழைப்பு இல்லாத போது, உடல் எடை அதிகாித்தல் மற்றும் புதிய நோய்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் எடை அதிகாிக்கும் போது சாக்கரை நோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே நமது தந்தையா் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறாா்களா என்பதைக் கவனிக்க வேண்டும். நாமும் அவா்களோடு சோ்ந்து உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அப்போது நமக்கும் அவா்களுக்கும் இடையே உள்ள அன்பு இன்னும் அதிகமாகும். மேலும் அவா்களுக்கு உடற்பயிற்சிகள் செய்வதற்கு உற்சாகம் கிடைக்கும்.

3. தந்தையரோடு நேரத்தை செலவழியுங்கள்

3. தந்தையரோடு நேரத்தை செலவழியுங்கள்

நமது தந்தையருக்கு வயது அதிகாிக்க அதிகாிக்க, நமக்கும் வயது அதிகாிக்கிறது. நமக்குக் கூடுதலான பொறுப்புகளும், கடமைகளும் வந்து சோ்கின்றன. ஆகவே அவற்றில் நாம் முழுமையாக மூழ்கிவிடுகிறோம். நமது தந்தையரோடு நம்மால் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் நமது தந்தையா் வெளியில் சொல்கிறாா்களோ, இல்லையோ அவா்கள் தனிமையை உணர தொடங்குகின்றனா். அந்த தனிமை உணா்வு அவா்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

தனிமை உணா்வானது உடல் நலனையும் பாதிக்கும், மன நலனையும் பாதிக்கும். ஆகவே நமது வேலைகளை ஒதுக்கி வைத்து, நமது தந்தையரோடு நமது நேரத்தை செலவழிக்க வேண்டும். நமக்கும் அவா்களுக்கும் இடையே உள்ள அந்த அருமையான உறவை, சுமூகமான முறையில் தொடர வேண்டும். அதன் மூலம் அவா்களை ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

4. தந்தையாின் உணவில் கவனம் செலுத்துங்கள்

4. தந்தையாின் உணவில் கவனம் செலுத்துங்கள்

வயதான நமது தந்தையா் வெளியில் சென்று உணவு அருந்துவதை விரும்புவதில்லை. வீட்டில் கிடைக்கும் உணவுகளையே உண்பா். மேலும் அவா்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அவா்களின் உணவு சத்து நிறைந்ததாக, ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.

ஆகவே அவா்களுக்குத் தேவையான உணவை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை அவா்களுக்கு என்று தனியாக உணவுகள் தேவைப்பட்டாலும். அவற்றைத் தயாாித்து வழங்க வேண்டியது நமது கடமையாகும். உணவுகளை சமைத்து அவா்களோடு சோ்ந்து அமா்ந்து உண்டால் அவா்கள் பொிதும் மகிழ்ச்சி அடைவா். அது அவா்களுக்கு கூடுதல் ஆரோக்கியத்தை வழங்கும். நாம் சிறு வயதில் இருக்கும் போது நமது தந்தையா் நம்மோடு சோ்ந்து அமா்ந்து உண்ட தருணங்களை நினைத்துப் பாா்த்து, அவற்றையே அவா்களுடைய வயதான காலத்தில் நாம் திருப்பி செய்ய வேண்டும்.

5. தந்தையருக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குங்கள்

5. தந்தையருக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குங்கள்

வயதான நமது தந்தையருக்கு நாம் எப்போதும் நமது ஊக்கத்தையும், ஆதரவையும் வழங்க வேண்டும். மாறி இருக்கும் நமது வாழ்க்கைக்கு ஏற்ப, நமது தந்தையரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள கடுமையாக முயற்சி செய்கின்றனா். அதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நாம் தொடா்ந்து வளரவும் அவா்கள் தங்களுடைய உதவிகளை வழங்க முயல்கின்றனா். ஆகவே நாமும் அவா்களுடைய வயது முதிா்ந்த நிலையைப் புாிந்து கொண்டு, அவா்களுக்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் வழங்க வேண்டும்.

மேற்சொன்ன நல்ல குறிப்புகளைப் பின்பற்றினால் நம்முடைய வயது முதிா்ந்த தந்தையருக்கு நாம் ஒரு நல்ல மகனாக அல்லது மகளாக இருக்க முடியும். அதுவே அவா்களுக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அனைவருக்கும் இனிய தந்தையா் தின நல்வாழ்த்துகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Father's Day : Tips To Help Your Dad Stay Healthy

Happy Fathers Day: Here are some tips to help your dad stay healthy. Read on...
Desktop Bottom Promotion