For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டிற்கு மளிகைப்பொருள் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு கிளம்புங்க...

|

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. நம் நாட்டில் மட்டுமில்லாமல், இந்த உலகம் முழுவதுமே மக்கள் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நமது அன்றாட பழக்க வழக்கங்களை கொரோனாவுக்கு முன், கொரோனாக்கு பின் என்று இரு வகையாக பிரிக்கலாம். கொரோனா நோய் பரவலுக்கு முன், நாம் தனிநபர் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பெரிதாக கடைபிடித்திருக்க மாட்டோம்.

ஆனால், இன்று மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். அதுமட்டுமில்லாமல், தற்பொழுது பொதுமக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடனும் சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் நன்றாகவே உணர தொடங்கி விட்டனர். பணக்காரர்கள் முதல் பாமர மக்கள் வரை அவரவர் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று உணர தொடங்கிவிட்டார்கள்.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

பொதுவாக மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மட்டுமின்றி, மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களையும் மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால், அந்த பொருட்கள் எங்கே, எப்பொழுது, யார் யார் மூலமாக கடந்து வந்தது என்பதை பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லை.

MOST READ: கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...

கொரோனா வைரஸானது, பாலிதீன், காகிதம், இரும்பு போன்ற எந்த ஒரு இடத்திலும் தங்கி சில மணிநேரம் உயிர் வாழக்கூடியது. எனவே மளிகை பொருட்களை மிக கவனமாக கையாள வேண்டும். இந்த கட்டுரையில், உங்களுக்கு மளிகை பொருட்களை எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்க இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டிற்குள் நுழையும் முன் சானிடைசர் உபயோகியுங்கள்

வீட்டிற்குள் நுழையும் முன் சானிடைசர் உபயோகியுங்கள்

நீங்கள் வெளியில் சுற்றும் பொழுது பலவித பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு கொரோனா அல்லது வேறு ஏதேனும் கிருமி தாக்கி தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மளிகை பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு முன்பு, கையில் எப்பொழுதும் ஒரு ஹேண்ட் சானிடைசரை வைத்துக் கொண்டே கிளம்புங்கள். மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்குள்ளே நுழைவதற்கு முன்பு சிறிதளவு ஹேண்ட் சானிடைசரை கைகளில் தேய்த்து கொள்ளுங்கள். அதே போல், நீங்கள் வெளியே மளிகை பொருள் வாங்க சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது, எக்காரணம் கொண்டும் உங்கள் கைகளை உங்கள் முகத்தின் அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

மளிகை பொருள், சாவி மற்றும் பையை கவனமாக கையாளவும்

மளிகை பொருள், சாவி மற்றும் பையை கவனமாக கையாளவும்

நீங்கள் மளிகை பொருள் வாங்கி வந்த பை, உங்கள் வண்டி அல்லது வீட்டு சாவி, பர்ஸ் மற்றும் மொபைல் போனை வீட்டிற்கு நுழையும் முன்பு தரையில் முதலில் கிடத்துங்கள். ஏனென்றால், மேலே சொன்ன பொருட்கள் யாவும், கிருமிகள் வளர ஏற்றவை. எனவே, கிருமி நீக்கம் செய்யாமல் இந்த பொருட்களை, நீங்கள் எப்பொழுதும் வழக்கமாக வைக்கும் இடங்களில் வைக்காதீர்கள். அதிலும் முக்கியமாக, மளிகை பொருள் உள்ள பையை சுத்தமாக கிருமி நீக்கம் செய்த பின்னரே சமயலறைக்குள் எடுத்து செல்ல வேண்டும்.

உடைகளை உடனே மாற்றுங்கள்

உடைகளை உடனே மாற்றுங்கள்

மளிகை பொருட்கள் வாங்கி வீட்டிற்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான வேலை, உங்கள் காலணிகளை வீட்டிற்கு வெளியே கழற்றி விட்டுவிட்டு நேராக குளியலறைக்கு செல்வது. பின்பு உங்கள் உடைகளை ஒரு சோப்பு மற்றும் தண்ணீர் நிறைந்த வாளியில் ஊற வைத்துவிட்டு நீங்களும் நன்றாக சோப்பு தேய்த்து குளித்து விடுங்கள். குளித்தவுடன், நல்ல புதிய ஏற்கனவே துவைத்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களது காலணிகளை சில மணி நேரங்களுக்கு வீட்டிற்கு வெளியிலேயே வைத்து இருக்கவும். பின்பு, அதனை சோப்பு நிறைந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு உலர வைத்து வீட்டிற்குள் கொண்டு வந்து கொள்ளலாம். முடிந்தால் கிருமி நாசினி கொண்டும் காலணிகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

துணியால் செய்த முகக்கவசம் பயன்படுத்துகிறீர்களா?

துணியால் செய்த முகக்கவசம் பயன்படுத்துகிறீர்களா?

தற்பொழுது துணியினால் செய்யப்பட்ட முக கவசங்களை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இந்த வகையான முகக்கவசமும் நன்கு பயனளிக்கிறது. ஒருவர் தும்மும் பொழுதோ அல்லது இருமும் பொழுதோ தெறிக்கும் சளித்துளிகளை நன்கு உறிஞ்சி வெளியில் செல்ல விடாமல் செய்வதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. ஆனால் அந்த துணியில் கிருமிகள் தங்கி விடுகின்றன. எனவே துணியால் செய்த முகக்கவசத்தை வீட்டிற்கு வந்ததும் நல்ல சோப்பு கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பொருட்களை பிரிப்பதற்கு முன்பு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்

பொருட்களை பிரிப்பதற்கு முன்பு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் வாங்கி வந்த மளிகை பொருட்களை பிரித்து பார்ப்பதற்கு முன்பு, ஒரு 20 வினாடி சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவிக்கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் உங்களின் கைகள் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் நீங்கள் தொடும் இடங்களுக்கெல்லாம் பரவுவது தடுக்கப்படுகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பைகளை உடனே அப்புறப்படுத்துங்கள்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பைகளை உடனே அப்புறப்படுத்துங்கள்

நீங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பைகளை பயன்படுத்தினால், வீட்டிற்கு வந்ததும், மளிகை பொருட்களை எடுத்து விட்டு, அந்த பையை உடனே அப்புறப்படுத்திவிடுங்கள். மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க மருத்துவ சங்கத்தின் நாளிதழில் கூறியுள்ளார்கள். மறுமுறை உபயோகிக்கும் பைகளை மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வைத்து கொள்ளுங்கள்.

பையை தூக்கியெறிந்த பின்பும் சுத்தம் செய்வது அவசியம்

பையை தூக்கியெறிந்த பின்பும் சுத்தம் செய்வது அவசியம்

சில சமயங்களில் நீங்கள் வாங்கி வந்த பொருளிலோ அல்லது பையிலோ ஏதேனும் பாக்டீரியாக்களோ அல்லது வேறு கிருமிகளோ ஒட்டி இருக்கலாம். பைகளை தூக்கி அப்புறப்படுத்தும் பொழுது நீங்கள் அதனை தொட நேருவதால், உங்களுக்கு அந்த பாக்டீரியா கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே பையை அப்புறப்படுத்தியவுடன் சோப்பு கொண்டு கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது ஹேண்ட் சானிடைசர் உபயோகித்து கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Pandemic: Safe Practices To Follow As You Return Home After Grocery Shopping

Here are some safe practices to follow as you return home after grocery shopping during coronavirus pandemic. Read on...