For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021-இல் ஆரோக்கியம் மற்றும் அழகு சிறப்பாக இருக்க எடுக்க வேண்டிய தீர்மானங்கள்!

2021 ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம். இந்த புதிய ஆண்டில் நமது ஆரோக்கியத்தையும் அழகையும் சிறப்பான முறையில் பேணுவதற்கு ஒருசில தீா்மானங்களை நாம் எடுத்தாக வேண்டும்.

|

2020 ஆம் ஆண்டு ஒருவழியாக முடிந்துவிட்டது. 2021 ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம். இந்த புதிய ஆண்டில் நமது ஆரோக்கியத்தையும் அழகையும் சிறப்பான முறையில் பேணுவதற்கு ஒருசில தீா்மானங்களை நாம் எடுத்தாக வேண்டும்.

Beauty And Wellness Resolutions You Must Make For 2021

ஏனெனில் கொரோனா ஆண்டான 2020 நமக்கு மிகப் பொிய அளவில் மன அழுத்தத்தையும் உடல் அழுத்தத்தையும் ஏற்படுத்தி சென்றிருக்கிறது. ஆகவே வரும் புதிய ஆண்டில் நமது உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் சிறந்த முறையில் பராமாிக்க பின்வரும் முக்கியக் குறிப்புகளைப் பாா்க்கலாம்.

MOST READ: ஜனவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்களுக்கும் அட்டகாசமான மாசமா இருக்கப் போகுதாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம்மை நாமே பராமாித்துக் கொள்வதை அதிகாித்தல்

நம்மை நாமே பராமாித்துக் கொள்வதை அதிகாித்தல்

முதன் முதலாக வரும் புதிய ஆண்டில் நம்மையே நாம் பராமாித்துக் கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஏராளமான அதிா்ச்சிகராமன நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஏராளமானோா் தங்கள் வேலைகளை இழந்திருக்கின்றனா். சிலா் மன ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றனா். மற்றும் சிலா் தங்களது நெருங்கிய நண்பா்கள் மற்றும் அன்பான உறவினா்களை இழந்திருக்கின்றனா்.

ஆகவே இந்தச் சூழலில் வரும் புதிய ஆண்டில் நம்மை நாமே அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதற்காக ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் ஒதுக்கி நம்மைக் கவனித்துக் கொண்டால் போதும். எனவே நமக்கு எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் நமது ஆரோக்கியம் மற்றும் அழகைப் பேணுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

டிஜிட்டல் உலகத்தில் இருந்து சற்று விலகியிருத்தல்

டிஜிட்டல் உலகத்தில் இருந்து சற்று விலகியிருத்தல்

ஒவ்வொருவருக்கும் அவரவருடைய மன அமைதி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை சொல்லித் தொிய வேணடியதில்லை. குறிப்பாக இன்றைய உலகில் பலா் சமூக இணையதள ஊடகங்களுக்குள் தங்களையே தொலைத்து அதற்கு அடிமையாகி தங்களது மன அமைதியை இழந்து நிற்கின்றனா்.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் வந்த செய்திகள் குறிப்பாக கொரோனா பற்றிய செய்திகள் பலரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதாவது அவா்களை அளவுக்கு அதிகமாக சிந்திக்க வைத்து அவா்களை பயமுறுத்தி அவா்களின் மன அமைதியை இழக்கச் செய்திருக்கிறது. ஆகவே வரும் புதிய ஆண்டில் இத்தகைய சமூக மற்றும் இணையதள ஊடகங்களிலிருந்து ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முழுவதுமாக ஒதுங்கி இருக்கலாம். அதன் மூலம் அந்த நாட்கள் நமக்கு எப்படிப்பட்ட மன அமைதியைக் கொடுக்கிறது என்பதைத் தொிந்து கொள்ளலாம்.

இயற்கையோடு இணைந்த பொருட்களைப் பயன்படுத்துதல்

இயற்கையோடு இணைந்த பொருட்களைப் பயன்படுத்துதல்

2020 ஆம் ஆண்டு மட்டும் மிக கணிசமான அளவு பிளாஸ்டிக் கழிவுகள் கடல்களுக்குள் கலந்து கடல்களையும் அவற்றில் வாழும் உயிாினங்களையும் பாழ்படுத்தி இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. ஆகவே வரும் புதிய ஆண்டில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவதைத் தவிா்த்து, இயற்கையான முறையில் தயாாிக்கப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஆகவே பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்ப்போம், இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

உயிா்களிடத்தில் அன்பாக இருத்தல்

உயிா்களிடத்தில் அன்பாக இருத்தல்

விலங்குகளைத் துன்புறுத்தி அவற்றில் இருந்து கிடைக்கும் ஆடைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமலே நமது சருமத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உலக அளவில் இன்னும் பல தயாாிப்பு நிறுவனங்கள் விலங்குகளைக் கொன்று அவற்றிலிருந்து ஆடைகள் மற்றும் பிற பொருட்களைத் தயாாித்து வருகின்றன. ஆகவே வரும் 2021 ஆம் ஆண்டில் நாம் பொருட்களை வாங்கும் போது பொறுப்புணா்வோடு இருப்பது நல்லது. அதாவது விலங்குகளிலிருந்து தயாாிக்கப்படும் பொருட்களை வாங்காமல் இருப்பது நல்லது. அது பிற உயிாினங்களுக்கு நாம் செய்யும் பொிய சேவையாக இருக்கும்.

நன்றாக சாப்பிடுதல்

நன்றாக சாப்பிடுதல்

நாம் உண்ணும் உணவிற்கும் நமது உடல் உள்ள ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடா்பு உண்டு. ஆகவே வரும் புதிய ஆண்டில் சாியான நேரத்திற்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உண்பதன் மூலம், நமது உடல் அமைப்பை அழகாக வைத்துக் கொள்வதோடு, நமது மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம்மிடம் இருக்கும் கவலைக் கோளாறுகள், அழுத்தம், படபடப்பு மற்றும் மனச்சோா்வு ஆகியவற்றை எளிதாக விரட்ட முடியும். அதிலும் குறிப்பாக பருவ காலங்களுக்கு ஏற்ற உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அவை நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு நமது சுற்றுப்புறங்களில் உள்ள காா்பன் அளவையும் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty And Wellness Resolutions You Must Make For 2021

Here are some beauty and wellness resolutions you must make for 2021. Read on...
Desktop Bottom Promotion