For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்த சுத்தி அதிக சதை இருக்கா உங்களுக்கு?ஈஸியா குறைக்கலாம்!

கழுத்தில் இருக்கும் தசைகளை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில அவசியமான டிப்ஸ்

|

உடல் நலனில் அக்கறை செலுத்துகிறவர்கள் யாவரும் முதலில் கவனிக்க வேண்டியது சாப்பிடும் உணவுகள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கத்தினை சரி பார்க்க வேண்டும். தொப்பை,இடுப்புப் பகுதி, கைகள் என ஒவ்வொரு பாகமாக கவனம் செலுத்தும் நபர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள், இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் கவனிக்க மறந்த விஷயங்களில் ஒன்றினைப் பற்றி தான் இன்றைக்கு பேசப்போகிறோம். சிலருக்கு உடம்பெல்லாம் நார்மலாக தெரியும். ஆனால் கழுத்துப் பகுதியில் மட்டும் அதிக தசையுடன் காணப்படும். இதனால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமையில் ஆரம்பித்து ஏரளமான சங்கடங்களை சந்தித்திருப்பார்கள்.

குறிப்பாக கழுத்தில் அதிக தசை ஏற்படுவதற்கு என்ன காரணம், அவற்றை போக்க என்ன செய்ய வேண்டும் என்ற சில அவசியமான தகவல்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்து கொழுப்பு :

கழுத்து கொழுப்பு :

பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு முக்கியமாக பார்த்தால் சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம். முதலாவது ஒபீசிட்டி. இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடலும் சற்று குண்டாகவே இருக்கும். ஓவர் வெயிட் இருப்பவர்களுக்கு கழுத்துப் பகுதியிலும் கொழுப்பு சேரும்.

இதைத் தவிர சில மருத்துவ காரணங்கள் சொல்லப்படுகிறது. தைராய்டு பிரச்சனை, மற்றும் சில ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதீத தசை ஏற்படும். இதைத் தவிர மாரடைப்பு தொடர்பான பிரச்சனைகள், அதற்காக நீண்ட நாட்களாக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும். சிலருக்கு வயதின் காரணமாகவும் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.

தவிர்க்க :

தவிர்க்க :

முறையான உணவுப்பழக்கம் மூலமாகவே இந்தப் பிரச்சனையை பாதியளவு உங்களால் குறைக்க முடியும். குளிர்ந்த பொருட்கள், பாக்கெட் உணவுகள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இதைத்தவிர தொடர்ந்து சின்ன சின்ன பயிற்சிகளை செய்ய வேண்டும். இதைவிட முக்கியமான ஒன்று சர்க்கரையை அதிகம் சேர்க்கக்கூடாது.

இந்தப் பிரச்சனையை தீர்க்க நீங்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள உணவுப் பட்டியலினை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

ஒரு ஸ்பூன் க்ரீன் டீ பவுடருக்கு ஒரு கப் தண்ணீர் அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதனை ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். பின் ஆறியதும் அதில் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை வரை நீங்கள் இதை குடிக்கலாம்.

க்ரீன் டீயில் அதிகப்படியான கேட்சின்ஸ் இருக்கிறது. இதைத் தவிர இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

தினமும் காலையில் எழுந்ததும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்னதாக எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி கழுத்துப் பகுதியொல் மசாஜ் செய்திடலாம்.

தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இதனை நீங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்திடும். உடலில் தேவையற்ற கொழுப்பினை அகற்ற இது பெரிதும் உதவிடும்.

பூசணி :

பூசணி :

பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூசணி ஜூஸ் கூட நீங்கள் குடிக்கலாம். தினமும் கூட பூசணி சாறினை நீங்கள் குடிக்கலாம். இதில் குறைவான கலோரியே இருக்கிறது. அதே நேரத்தில் இதில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. இதைத் தவிர பொட்டாசியம் மற்றும் விட்டமின் ஏ இருக்கிறது.

இவை கொழுப்பினை வேகமாக கரைக்க உதவுவதுடன் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுத்திடும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

சாதரண தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதை விட சூடான தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது சிறந்தது. இதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது கொழுப்பை கரைக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவிடும்.

சிகப்பு கேப்சிகம் :

சிகப்பு கேப்சிகம் :

உணவில் சிகப்பு கேப்சிகம் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மற்ற நிறங்களை விட சிகப்பு கேப்சிகம் இதற்கு நல்லது. சிகப்பு நிறம் கிடைக்காத பட்சத்தில் வேறு நிறத்தினை நீங்கள் பயன்படுத்தலாம். அஜீரணக்கோளாறு இருப்பவர்கள் தினமும் பயன்படுத்த வேண்டாம்.

ஆளி விதை :

ஆளி விதை :

ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம். குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அப்படியில்லை என்றால் ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள். அதில் ஆளி விதைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் ஆறியதும், அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலையில் இந்த தண்ணீரை தயாரித்து குடிக்கலாம். இதில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கழுத்தில் இருக்கும் தசைகளை குறைக்க பெரிதும் உதவிடும்.

கேரட் :

கேரட் :

கேரட்டினை அப்படியே சுத்தம் செய்து தோல் நீக்கி நறுக்கி சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் கேரட் ஜூஸ் எடுத்து குடித்திடுங்கள். இதனை நீங்கள் தாரளமாக தினமும் சாப்பிடலாம். கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் ஃபைபர் அதிகமாக இருக்கிறது.

இவை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் நீங்கள் அடிக்கடி டயர்ட் ஆவது குறையும்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை ஜூஸ் ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிக்கலாம். காற்றாழை உடல் எடை குறைக்க பெரிதும் உதவிடுகிறது. இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கிற கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை எனர்ஜியாக மாற்ற உதவிடுகிறது. இதனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வது தவிர்க்கப்படும்.

தண்ணீர் :

தண்ணீர் :

எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது இது. எப்போதும் உங்கள் உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரைத் தவிர நீராகரங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சினை இழுத்து விடுங்கள். இப்போது உங்கள் கழுத்தை மட்டும் சற்று மேல் நோக்கி நிமிர்த்திடுங்கள். உங்களால் முடிந்தளவு செய்திடுங்கள்.பின் நார்மல் பொசிசனுக்கு வந்து ஐந்து செக்கண்ட் ரிலாக்ஸ் செய்த பிறகு மீண்டும் அதேபடி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக செல்ஃபி எடுக்கும் போது கிஸ்ஸிங் போஸ் கொடுப்போமே அதே போல பத்து முறை செய்ய வேண்டும். இப்போது ஃபிஷ் பேஸ் உங்கள் கன்னங்கள் உள்ளிழுக்க வேண்டும். இது மூன்றாவது பயிற்சி. நான்காவதாக வாயை அகல விரித்து மூடுங்கள். இப்படியே பத்து முறை செய்ய வேண்டும். தினமும் வாக்கிங், ஜாக்கிங் போன்ற பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Get Rid Of Neck Fat

Tips To Get Rid Of Neck Fat
Story first published: Friday, May 11, 2018, 17:39 [IST]
Desktop Bottom Promotion