தினமும் சுய இன்பம் காணுவதால், ஆண்குறியில் இந்த பிரச்சனை ஏற்படுமா?

Subscribe to Boldsky

சுய இன்பம் காணுதல் மிக இயல்பான விஷயம். இது இயற்கையும் கூட. ஆனால், சிலர் சுய இன்பம் காணுதல் குறித்து தவறான புரிதல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தினமும் சுய இன்பம் கண்டால் உடலில் இரத்தம் வற்றிவிடும், ஒரு நாளுக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் சுய இன்பம் காண வேண்டும், சுய இன்பம் காணும் போது விந்து இந்த வேகத்தில், இந்த நேரத்திற்குள் வர வேண்டும், கூடாது... என எத்தனையோ மாய விஷயங்களை அவர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

Sexual Health Question Answer on Masturbation

உண்மையில் சுய இன்பம் காணும் போது விந்து வெளிப்படுதல் வேகம், நேரம் மற்றும் துணையுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது விந்தணு வெளிப்படும் வேகம், நேரமானது அதிக வேறுபாடு கொண்டிருக்கிறது.

இங்கே, ஆண்கள் சுய இன்பம் காணுதல் மற்றும், எத்தனை முறை காணலாம் என தங்கள் சுய இன்பம் காணும் பழக்கத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு நிபுணர்களின் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி #1

கேள்வி #1

நானும் தினமும் இரண்டு முறை சுய இன்பம் காண்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், இத்தகைய பழக்கம் எனது தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா? தினமும் சுய இன்பம் காணுவதால் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுமா?

பதில் #1

பதில் #1

சுய இன்பம் காணுவதால் ஒரு நபருக்கு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும் என்று சொல்ல முடியாது. அதே போல, ஒரு நாளுக்கு எத்தனை முறை சுய இன்பம் காணலாம் என்று கூற இயலாது.

ஆனால், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு அடிக்ஷன் ஆவது, விந்தணு உற்பத்தி திறனில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மிக அரிதாக விறைப்பு பிரச்சனைகள் உண்டாகவும் வாய்ப்புகள் உண்டு. இது மனரீதியான தாக்கத்தால் உண்டாவது ஆகும்.

கேள்வி #2

கேள்வி #2

நான் என் பருவ வயதில் இருந்து சுய இன்பம் கண்டு வருகிறேன். இணையங்களில், சில முறை என் நண்பர்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் விந்து வெளிப்பட ஆகும் நேரம் என்று குறிப்பிடுவதை காட்டிலும் எனக்கு வேகமாக விந்து வெளிப்பட்டு விடுகிறது? தாமதமாக விந்து வெளிப்பட என்ன செய்ய வேண்டும்?

பதில் #2

பதில் #2

சுய இன்பம் காணும் பொழுது விந்து வேகமாக வெளிப்படுவது குறித்து அதிகம் கவனம் செலுத்த தேவையில்லை. தாம்பத்தியத்தின் போது, அவ்வளவு சீக்கிரம் விந்து வெளிப்பட வாய்ப்பில்லை. மேலும், சுய இன்பத்தின் போதிலான செயல்பாடும், தாம்பத்தியத்தின் போதிலான செயல்பாடும் ஒரே மாதிரியானதாக இருக்காது.

ஒருவேளை உடலுறவில் ஈடுபடும் போதும், மிக வேகமாக விந்து வெளிப்பட்டு விடுகிறது, தொடர்ந்து இது ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது எனில், நீங்கள் அவசியம் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளவும்.

கேள்வி #3

கேள்வி #3

ஆண்களை குறித்து செக்ஸுவல் எண்ணம் கொள்ளும் போது எனக்கு நன்கு விறைப்பு ஏற்படுகிறது. ஆனால், பெண்களை குறித்து செக்ஸுவல் எண்ணம் கொள்ளும் போது மெல்லமாக தான் விறைப்பு ஏற்படுகிறது. அதே போல, சுய இன்பம் காணும் போது 1.5 நிமிடத்திற்குள் விந்து வெளிப்பட்டு விடுகிறது. இது சாதாரணமா? அல்லது ஏதேனும் பிரச்சனையா?

பதில் #3

பதில் #3

நீங்கள் ஒரு நபருடன் உடல் ரீதியாக உறவுக் கொள்ளாத வரையிலும் இதை ஒரு பிரச்சனை என்று கூற இயலாது. மேலும், தாம்பத்திய உறவில் ஈடுபடாமல், அந்த சமயத்தில் எப்படியான செயல்பாடு இருக்கிறது என்பதை அறியாமல், எதையும் ஒரு பிரச்சனை என்று கூறிட இயலாது.

சுய இன்பம் காணும் போது எத்தனை நேரத்தில் விந்து வெளிப்பட வேண்டும், எது இயல்பு என்றெல்லாம் கணித்து கூற இயலாது. ஒவ்வொருவர் சுய இன்பம் காணுவதை வைத்து இது வேறுபடும்.

கேள்வி #4

கேள்வி #4

ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அல்லது இரண்டு மூன்று முறை சுய இன்பம் காண்டு வந்தால், தசை இழப்பு, தசை ஆரோக்கியம் அல்லது சக்தி குறைப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டா?

பதில் #4

பதில் #4

இல்லை! அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதால் தசை வலிமை இழப்பு அல்லது muscle loss எனப்படும் பிரச்சனை... அல்லது வேறு எந்த ஆரோக்கிய பிரச்சனைகளும் உண்டாக வாய்ப்புகள் இல்லை.

கேள்வி #5

கேள்வி #5

வாரத்திற்கு ஒரு முறை சுய இன்பம் காணுவது ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துமா? அதிகமாக சுய இன்பம் காணுவதால் ஆண்குறி அளவு குறைய வாய்ப்புள்ளதா?

பதில் #5

பதில் #5

வாரத்திற்கு ஒருமுறை, இரண்டு மூன்று நாளுக்கு ஒருமுறை காண்பது எல்லாம் மிகவும் இயல்பு. இதனால், ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுமா? என்று அச்சம் கொள்ள தேவை இல்லை. அல்லது இதனால் ஆண்குறி அளவில், விறைப்பின் போதிலான அளவில் தாக்கம் ஏற்படாது.

ஆனால், அடிக்கடி சுய இன்பம் கண்டுக் கொண்டே இருந்தால், சிலமுறை விந்து அதுவாகவே இரவு நேரங்களில் வெளிவர வாய்ப்புகள் உண்டு.

(குறிப்பு: அரிதாக எப்போதாவது உறக்கத்தில் விந்து வெளிப்படுவது இயல்பு.)

கேள்வி #6

கேள்வி #6

நான் இருபதுகளின் ஆரம்பக் கட்டத்தில் வாழ்ந்து வருகிறான். எனக்கு தினமும் சுய இன்பம் காணும் பழக்கம் இருக்கிறது. இந்த பழக்கத்தால் எனது உடலுறவு வாழ்வில் பாதிப்பு ஏற்படுமா? அல்லது தினமும் சுய இன்பம் காண்பது தீய பழக்கமா?

பதில் #6

பதில் #6

முன்பொரு கேள்வியில் பதிலத்தது போல, சுய இன்பம் அடிக்கடி அல்லது அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பது விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தலாம். மிக அரிதாக சிலர் மத்தியில் விறைப்பு கோளாறு ஏற்பட இது காரணியாக இருக்கிறது.

மேலும், சிலரது விசித்திரமான ஆசைகள், விசித்திரமான முறையில் சுய இன்பம் காணுதல், செக்ஸில் ஈடுபடுதல் அல்லது பார்ன் பழக்கம் போன்ற காரணத்தாலும் விறைப்பில் கோளாறு காண்கிறார்கள்.

முடிந்த வரை தினமும் சுய இன்பம் காணுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய இன்பம் காணும் எண்ணம் வந்தால், உங்களுக்கு பிடித்த வேறு நபர்களுடன் / வேறு செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

அல்லது தனிமையில் இருக்கும் பட்சத்தில் தான் சுய இன்பம் காண எண்ணம் அதிகரிக்கும். எனவே, அப்படியான தருணத்தில் உடனே வெளியே அல்லது மற்ற நபர்களுடன் நேரம் செலவழிக்க துவங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Sexual Health Question Answer on Masturbation

    Sexual Health Question Answer: Does Masturbating Daily Result in Muscle Loss? Read here to check the proper answer in tamil.
    Story first published: Thursday, November 22, 2018, 10:06 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more